வணக்கம் நண்பர்களே இன்றைய நாள் பார்த்தீங்கன்னா உங்களை கருவில் இருந்து கல்லறை செல்லும் வரை உங்களை பார்த்து பார்த்து அழகாய் உங்கள் வாழ்க்கையை நல்வழிப்படுத்தும் பெண்களுக்கு இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள்.
உன்னை பிறப்பித்தவள்
உன்னை கருவில் அழகாய் செதுக்கி இந்த புவியில் உன்னை பூவாய் பெற்றெடுத்தவள் தான் தாய். நம் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்குள் நுழைந்த உடன் அப்பா இருந்தாலுமே நம் வாயிலிருந்து வருவது அப்பா அம்மா எங்கே என்ற வார்த்தை தான் நாம் கேட்கும் முதல் வார்த்தையாக இருக்கும்.
உன்னோடு பிறந்தவள்
என்னதான் நமக்கு அம்மா இருந்தாலும் அம்மாவின் இடத்தில் இருந்து நம்மளை அழகாய் பார்த்து ரசிக்கும் பெண் தான் தங்கை அக்கா இவர்களிடம் நம் என்னதான் சண்டையிட்டுக் கொண்டாலும் அவர்கள் திருமணம் ஆகி சென்ற பிறகுதான் அவர்களிடம் நாம் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறோம் என்று தெரியும். அதுவும் ஒரு தனி பாசம் தான். நீங்கள் அக்கா தங்கையுடன் பிறந்திருந்தால் இந்த ஒரு விஷயத்தை நீங்கள் அவர்களிடமிருந்து பார்த்திருப்பீர்கள் நீங்கள் வேறு யாரையாவது அக்கா தங்கை என்ற உறவு முறையுடன் பழகினால் அவர்களுக்கு அது மிகவும் கோபத்தை வர வைக்கும்.
உனக்காக பிறந்தவள்
எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்து உன்னிடம் மனைவியாகும் பொழுது இந்த உலகமே நீதான் என்று உன்னை நம்பி வரும் பெண்தான் மனைவி நீ துவங்கும் நேரத்தில் உன்னை மீண்டும் தொடங்கி வைக்கிறாள். அவளின் வாழ்க்கை முழுவதையும் உனக்கு ஏற்றது போல் மாற்றிக் கொண்டு வாழத் தொடங்குகிறாள். ஆயிரம் ஆண்களின் வெற்றிக்கு பின்னால் எப்பொழுதும் ஒரு பெண் இருப்பாள் அவள் எப்போதும் உன்னோடு மட்டும் தான் இருப்பாள.
உன்னால் பிறந்தவள்
இந்த உலகத்தில் ஒரு ஆண் இறக்கும் தருவாயில் இருந்தால் கூட ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகள் தன் தந்தையும் சரி தாயவும் சரி நன்றாக கவனித்துக் கொள்வார்கள் இந்த ஒரு விஷயம் எத்தனை அப்பாக்களுக்கு தெரியும் என்று தெரியவில்லை.
நம்மை எப்பொழுதும் ஒரு பூவாக பார்க்கும் பெண் நமக்கும் ஏதாவது ஒன்று என்றால் அவள் பூகம்பமாக மாறிவிடுவாள் இது போன்ற உறவுகள் நம் வாழ்க்கையை இன்னும் இன்பமாக மாற்றுகிறது வாழ்க்கை முழுவதும் இயந்திரம் போல் இயங்கிக் கொண்டிருக்கும் பெண் ஒரு நாள் இயங்காவிட்டாலும் அன்றைய நாள் தான் அந்தப் பெண்ணின் அருமை புரியும் அது அம்மாவாக இருந்தாலும் சரி அக்காவாக இருந்தாலும் சரி தான் பெற்றெடுத்த குழந்தையாக இருந்தாலும் சரி நமக்கு எவ்வளவு வேலை இருந்தாலும் வீட்டிற்கு வந்தவுடன் இவர்களிடம் கொஞ்ச நேரமாவது பேசுங்கள்.
இந்த உயிர்களை சுமக்கும் பூமி மாதாவுக்கும் உன்னை சுமக்கும் பெண்ணுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.