எதிர்பாராத காதல் எதிர்காலத்தில் இணையுமா?Part 2| Will an unexpected love match in the near future?

கோதைக்கு மறுபடியும் ஒரு புதிய நம்பரிலிருந்து மெசேஜ் வருகிறதல்லவா!.அதை பார்க்கின்ற கோதை “ஐயையோ!! மறுபடியும் புது நம்பர்ல இருந்து மெசேஜா!

யாராக இருக்கும்? என்று பார்க்க போகும்போது அந்த மெசேஜில் சாரி(sorry) என்று இருக்கிறது. எல்லோருக்கும் தெரியாத நம்பரிலிருந்து மெசேஜ் வரும் போது ஹாய்(Hi) என்றுதான் வரும். இவளுக்கோ சாரி(sorry) என்று மெசேஜ் வந்துள்ளது. இவள் பதில் மெசேஜ் என்ன அனுப்ப வேண்டுமென்று தெரியாமல் “அப்பறம்!”என்று அனுப்புகிறாள். அனுப்பிவிட்டு போனை வைத்துவிடுகிறாள்.
சிறுதுநேரம் கழித்து அந்த நம்பரிலிருந்து கோதைக்கு “எனக்கு உங்கள் மேல் ஒரு ஈர்ப்பு(crush) உள்ளது!”என்று மெசேஜ் வந்தது.

அதற்கு கோதை “அப்படியா!” என்கிறாள்.
அதன்பின் “நீங்கள் யார்? உங்கள் பெயர் என்ன? என்று கோதை கேட்கிறாள். கேட்ட அடுத்த நொடியே அந்த நம்பரிலிருந்து..”என் பெயர் மகிழன். நான் நீ படிக்கும் கணினிஅறிவியல் பாடப்பிரிவில் 2ஆம் ஆண்டு படிக்கிறேன் என்று மெசேஜ் வந்தது. உடனே கோதை “ஓஹோ!இந்த நம்பரிலிருந்து வந்த மெசேஜ் நம் பாடப்பிரிவை சேர்ந்த சீனியர் மகிழன் அனுப்பியதா!!”என்று அவளுக்குள்ளே முணுமுணுத்துக் கொள்கிறாள். அடுத்து அவனிடம் “நீங்கள் என் பாடப்பிரிவை சேர்ந்தவரா? நான் உங்களை ஒருமுறைகூட பார்த்ததில்லையே?”என் கிறாள்.ஆனால் மகிழனோ!”நான் உங்களை கல்லூரி வந்து ரெண்டு, மூணு நாளிலே பார்த்துவிட்டேன்.

அப்பொழுதே எனக்கு உங்களின்மேல் ஒரு ஈர்ப்பு(crush) வந்துவிட்டது. அதை எப்படியாவது உங்களிடம் சொல்லவேண்டுமென்று நினைத்தேன். நினைத்தபடி சொல்லிவிட்டேன்” என்று சந்தோஷ வெள்ளத்தில் மிதந்தான் மகிழன்.
கோதை அதற்கு “என்னுடைய போன் நம்பர் உங்களுக்கு எப்படி கிடைத்தது?” என்று கேட்டாள்.அதற்கு மகிழன் 3-ஆம் ஆண்டில் படிக்கும் ஜெசி என்ற அக்கா தான் உங்களுடைய நம்பரை எனக்கு கொடுத்தாள். ஜெசியிடம் நான் நன்றாக பேசுவேன்.

அப்பொழுது ஜெசியிடம் எனக்கு 2-ஆம் ஆண்டில் படிக்கும் ஒரு பெண் மீது ஈர்ப்பு(crush) உள்ளது அதை நான் அவளிடம் தெரிவிக்க வேண்டும் என்றான் மகிழன். ஜெசி “யாரடா அவள். அவள நீ எனக்கு காமிடா”என்றாள். அவனும் கோதையை காண்பிக்க… ஜெசி “இவள் என் தங்கை கோதையடா”தங்கையின் நம்பரை அக்காவிடமே கேக்குறயா!போடா! நான்ல உனக்கு வாங்கி தரமாட்டேன்”என்று மகிழனிடம் சிரித்துக்கொண்டே நக்கலாக கூறினாள். மகிழன்”எக்கோவ்! ஜெசி ப்ளீஸ் அக்கா வாங்கிகுடுக்கா!”என்றதும் ஜெசியும் வாங்கிக்கொடுத்தாள்.

இப்படி தான் உன் போன் நம்பர் எனக்கு கிடைத்தது என்றான் மகிழன்.கோதை மகிழனிடம் “அன்று ஒருநாள் என்னிடம் ஜெசி எனது போன் நம்பரை கேட்டாள் அது உங்களுக்கு தானா!”என்றாள்..மகிழனும்”ஆமாம் எனக்குத்தான்” என்றான்.
மகிழன் கோதையிடம் உங்களை பற்றி கூறுங்கள் என்றவுடன் கோதையும் அவளை பற்றி கூறினாள். பதிலுக்கு கோதை நான் என்னை பற்றி கூறிவிட்டேன்! நீங்களும் உங்களை பற்றி சொல்லுங்கள் என்றவுடன் மகிழனுக்கு மகிழ்ச்சியோ!!மகிழ்ச்சி!!அவனும் அவனை பற்றி கூறி அந்த உரையாடலை நிறைவு செய்கிறான்.
அவன் ஆன்லைனை(online) விட்டு வெளியே சென்றதும் அவனுடைய டி.பியில்(D.P) மகிழனின் புகைப்படத்தை ஸ்கிரீன்ஷாட்(screenshot) எடுத்து அவளது தோழி மீராவிற்கு அனுப்பி”நீ இவங்கள நம்ம காலேஜ்-ல பாத்திருக்கியா? “என்று கேட்டாள்.

மீரா “ம்ம்ம் நான் இவங்கள பாத்திருக்கேன் நம்ம டிபார்ட்மென்ட்(department)சீனியர் அண்ணா” என்றாள்.
மறுநாள் கல்லூரியில் மீரா, மல்லி, கோதை மூவரும் இருக்க மீரா “நேற்று ஒரு ஸ்கிரீன்ஷாட்(screenshot) அனுப்புனாயே அவன் யார்?” என்று கேட்டாள்.அதற்கு கோதை “அவன் பெயர் மகிழன். நம்ம டிபார்ட்மென்ட் தான்”.மீரா “ஆமாம் நாதான் நேத்தே சொன்னேலே.. இப்போ அவங்களுக்கு என்னவாம்?”.அவங்களுக்கு “என்மேல ஈரப்பாம்(crush)அத என்ட சொல்லத்தான் என் அக்கா ஜெசிட்ட நம்பர் வாங்கி எனக்கு மெசேஜ் பண்ணாங்க”என்றாள்.

நான் அவங்கள பாத்தது இல்ல அதான் உண்ட கேட்டேன்”. அதற்கு மீரா “ஈர்ப்பாக்கும் ஈர்ப்பு(crushaakum crush)என்று கிண்டலடித்தாள்.மல்லி அதற்கு”இவனும் மணியை போல் இருக்க போகிறான். நீ அவன் நம்பரை பிளாக்(block) செய்துவிடு என்கிறாள்.மீராவும் “ஆமாம்..மல்லி கூறுவது தான் சரி”என்கிறாள்.கோதை மல்லியிடம் “இல்ல இல்ல இவன பாத்தா நல்லவனா தெரியுறான்”என்றாள். அதற்கு தோழிகள் இருவரும்”இனிமேல் உன் இஷ்டம் “என்கிறார்கள்.


பிறகு இடைவெளி நேரத்தில் கோதை அவளது தோழிகளை அழைத்து ஜெசி வகுப்பிற்கு சென்று” நீதான் 2-ஆம் ஆண்டு மகிழனுக்கு என்னுடைய போன் நம்பரை கொடுத்தாயா? “என்று கேக்க ஜெசி “ஆமாம்!நான் தான் கொடுத்தேன். அவனுக்கு உன்மேல் ஈர்ப்பு(crush) வந்ததாம் அதை உன்னிடம் கூறவேண்டும் என்றான். அதனால் கொடுத்தேன்”. யார் வந்து கேட்டாலும் நீ கொடுப்பாயா? என்று கோதை கேட்க அதற்கு ஜெசி “நான் முதல கொடுக்கமாட்டேன்ணு சொன்னே.. அவன் கெஞ்சி கேட்டதால கொடுத்தேன்”.
நீ மகிழனை பற்றி தவறாக நினைக்காதே! “அவன் ஒரு அப்பாவி(innocent).

உன்னைபோலவே மிகவும் அழகானவன், புத்திசாலியானவன், நல்ல பையன்”என்றாள் ஜெசி.மகிழன் கோதைக்கு தினமும் மெசேஜ் செய்வான். ஏனென்றால்,கோதையின் மீது ஈர்ப்பு(crush) உள்ளதால் அவளிடம் தினமும் பேசவேண்டும் என்று பேசுவான். கோதைக்கு அவன்மேல் எதுவும் வரவில்லை.மகிழன் பேசினால் பேசுவாள்.
ஆனால் கோதை மகிழனிடம் எப்பொழுது பேசினாலோ அப்பொழுதிலிருந்து அவனை பார்க்க(sight) ஆராமித்துவிட்டாள்.

அவனை பார்ப்பதற்காகவே ஓயாமல் அங்கும் இங்கும் சுற்றுவாள்.இப்படியே இருவரும் பேசிக்கொண்டும், பார்த்துக்கொண்டும் இருந்தனர்.
கோதை, மல்லி, மீரா இவர்களது நட்பு கூட்டணியில் தாரா என்று இவர்கள் வகுப்பில் படிக்கும் ஒருத்தியும் சேர்ந்து கொண்டாள். தாரவிற்கு மாலா என்ற ஒரு தோழி இருந்தாள். அவள் நர்சிங் படிப்பதற்காக வேறு கல்லூரிக்கு சென்றுவிடுவாள்.


தாரா மட்டும் தனியாக இருப்பதை அறிந்த மல்லி தாராவிடம் நட்பு கொண்டு மீரா, கோதை ஆகிய இருவரிடமும் அறிமுகப்படுத்தி அவர்களையும் நட்பு கொள்ள செய்து அவர்களுடைய நட்பு கூட்டணியில் தாராவையும் இணைத்து கொண்டனர்.
ஒருநாள் விருதுநகரில் புத்தகக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளதாகவும், மாணாகர்களை அக்கண்காட்சிக்கு அழைத்து செல்லவேண்டுமென்றும் கல்லூரி முதல்வருக்கு ஒரு செய்தி வந்தது.


இந்த புத்தகக் கண்காட்சிக்கு கோதையும் அவளது தோழிகளும் செல்வர்களா?”அப்படி ஒருவேளை சென்றால் “அங்கு என்ன நடந்திருக்கும்?” என்பதை அடுத்த பாகத்தில் காணலாம்.
தொடரும்….
Written by
மீனா..✍🏻

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top