அடுத்த நாள் மேகன் கோதைக்கு போன் போடுகிறான்.கோதை போன் எடுத்தவுடன், “நீ மீராவுக்கு conference call போடு அவளிடம் நான் பேசுகிறேன்” என்றான். கோதையும் மீராவிற்கு concall போட “மீரா உன்னிடம் நேற்று மேகன் பேசவேண்டும் என்று கூறினான் அல்லவா!” மேகன் conference call-ல் உள்ளான். நீ பேசு என்றாள் கோதை.
மீராவும் மேகனிடம் “ஹலோ(Hello) அண்ணா!! ஏதோ என்னிடம் பேசவேண்டுமென்று கோதையிடம் கூறினீர்களாமே!!, சொல்லுங்கள்” என்றாள்.
மேகன் மீராவிடம் “ஹலோ(Hello) பாப்பா!! நல்லாயிருக்கியா!” என்று கேட்க மீராவும் நன்றாக உள்ளேன் என்றாள்.மீராவும் அவனிடம் நலம் விசாரித்தாள்.அதன்பின் மேகன் “நீ கோதைக்கு உயிர்த்தோழியாம்ல அவ சொன்னாள்”. ஆமாம்!! அண்ணா.. மேல சொல்லுங்க என்றவுடன் மேகன் “நான் கோதையை காதல் செய்கிறேன். அவளும் என்னை காதல் செய்கிறாள்(Two side love)”. எனக்கு “I Love You” என்று அவளது காதலை வெளிப்படுத்தினாள். தினமும் நாங்கள் இருவரும் மூன்று மணிநேரம் பேசுவோம்” என்றான்.மேகன் கூறியதை கேட்ட மீராவிற்கு “தலையில் இடி விழுந்தது போல் ஆகிற்று”.
அவள் உடனே கோதையிடம் “என்ன கோதை அண்ணா சொல்லுவது உண்மையா?”.. என்னிடம் நீ நான் அவனை காதல் செய்யமாட்டேன் என்று தானே கூறினாய்.இப்பொழுது அவன் இப்படி கூறுகிறான் உண்மையா? சொல் என்று உரைக்க கேட்டாள் மீரா.கோதை “ஆமாம் என்று மெதுவாக கூறினாள்”.மீரா “என்னால் நம்பவே முடியவில்லை அண்ணா.நீங்கள் சொல்லுவது உண்மையா” என்று நம்பமுடியாமல் மறுபடி மறுபடி கேட்டாள்..அவனும் ஆமாம் பாப்பா நீ வேண்டுமென்றால் கோதையிடமே கேட்டுக்கொள் என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டான்.மீரா மறுபடியும் கோதையிடம் கேட்க அவள் “ஆமாம்!” என்றாள்.மீரா “சரி கோதை என்று அதிர்ச்சியில் நான் உன்னிடம் பிறகு பேசுகிறேன்” என்று அவளும் போனை வைத்துவிட்டாள்.
மறுநாள் கல்லூரியில் வைத்து மீரா மல்லியிடம் நடந்ததையெல்லாம் கூறினாள்..அவளும் மீராவை போல் மிகவும் அதிர்ச்சி ஆகிப்போனாள். கோதையிடம், மல்லியும் மீராவும் இதைப்பற்றி எதுவும் கேட்கவில்லை.பல நாட்கள் இருவரும் இப்படியே மெசேஜிலும், போனில் அழைத்தும் பேசிக்கொண்டனர்.ஆனால் கோதை மகிழனிடமும் பேசுவாள். மகிழனுக்கு, கோதை மேகனிடம் பேசுவது தெரியும்.ஒருநாள், கோதைக்கு சிறப்பு வகுப்பு(special class) இருந்தது. அன்று மேகனுக்கு கல்லூரி விடுமுறையாக இருந்தது. விடுமுறை என்பதால் மேகன் கோதையை காண அவனது நண்பனுடன் கல்லூரிக்கு வந்தான்.கல்லூரியிலிருந்து சற்று தூரம் தள்ளி நின்றான்.
கல்லூரி முடிந்து கோதையும் அவளது தோழிகளும் வருவதை கண்ட மேகன்,அவனது நண்பனுடன் இவர்களுக்கு பின்னாடியே வந்தான். அவளிடம் பேசவேண்டும் என்று நினைத்தான். ஆனால் அவனால் பேச இயலவில்லை.
அதன்பின், கோதையின் பின்னால் மேகனும் அவனது நண்பனும் வருவதை கண்ட கோதையின் உறவினர்கள் அவளது வீட்டில் கோதையை பற்றி கூறி அவளை கண்டித்து வையுங்கள் என்றனர்.
அன்றிரவே கோதையின் பெரியம்மா… கோதையிடம் “உனக்கு பின்னாடி ரெண்டு பசங்க வந்தங்களாம்ல”என்று கேட்டாள்.. அதற்கு கோதை “இல்லை” என்று கூறினாள்.கோதை பொய் சொல்லுகிறாளோ என்று எண்ணி அவளது தோழி மீராவை போனில் அழைத்து “மீரா, கோதையின் பின்பு இரண்டு பசங்க வந்தாங்கலாம்ல?? உங்கள ஏதும் தொந்தரவு பண்ணுறாங்களா? என்று கேட்க மீரா அதற்கு “அப்படியெல்லாம் யாருமே வரல அப்படி வந்தால் நானே உங்களிடம் சொல்லுகிறேன்!” என்று உண்மையை சொல்லாமல் மழுப்பிவிட்டாள்.இனிமேல் எங்கு சென்றாலும் பார்த்து கவனமாக செல்லவேண்டும்.இதேபோல் அடுத்து எப்பொழுதாவது நடந்தால் என்னிடம் உடனே கூறவேண்டும் என்று அறிவுரை சொல்லி போனை வைத்துவிட்டாள் கோதையின் பெரியம்மா.
அடுத்ததாக மல்லியையும் போனில் அழைத்து நடந்ததை கேட்டாள் கோதையின் பெரியம்மா. அவளும் மீராவை போல் உண்மையை கூறாமல் மழுப்பிவிட்டாள்..
கோதையின் செயலால் இப்படி நடந்திருப்பது மீராவிற்கு பிடிக்கவில்லை..
இதனால் மீராவிற்கும் கோதைக்கும் சண்டை வருகிறது. இந்த சண்டையால் இருவரும் பிரிவார்களா? என்பதை அடுத்த பாகத்தில் காணலாம்.
-தொடரும்…
மீனா.. ✍🏻