எதிர்பாராத காதல் எதிர்காலத்தில் இணையுமா? Part-3 |Will an unexpected love match in the near future?

புத்தகக்கண்காட்சி பற்றி செய்தி வந்ததை அடுத்து, முதல்வர் வகுப்புவாரியாக யாரெல்லாம் புத்தகக்கண்காட்சிக்கு வருகிறார்கள்? என்று கணக்கு எடுங்கள்..

வருபவர்களை நாம் புத்தகக்கண்காட்சிக்கு அழைத்து செல்லலாம் என ஆசிரியரிடம் கூறினார்.ஆசிரியரும் முதல்வரின் கட்டளைக்கு இணங்க, வகுப்பிற்கு சென்று”விருதுநகரில் புத்தகக்கண்காட்சி நடக்கிறது யாரெல்லாம் வருகிறீர்கள்? என்று கேட்க “கோதையும் அவளது தோழிகளும் நாம் இந்த கண்காட்சிக்கு செல்லலாம்” என முடிவெடுகிறார்கள்.

பின்பு,முதல்வர் வந்து கண்காட்சிக்கு சென்று வருவதற்கு இரவு நேரம்கூட ஆகலாம் என்றவுடன் இவர்கள் “நாங்கள் பெற்றோரிடம் அனுமதி வாங்கிவிட்டு எங்களது பெயரை கொடுக்குறோம் என்று கூறி வீட்டில் பெற்றோர் அனுமதி அளித்தவுடன் ஆசிரியரிடம் அவரவர் பெயரை கொடுக்கிறார்கள்”.

இவர்கள் மட்டுமின்றி இவர்கள் வகுப்பில் உள்ள மற்ற தோழிகளும், தோழர்களும், மற்ற பாடப்பிரிவில் உள்ள மாணக்கர்களும் அக்காண்கட்சிக்கு செல்கின்றனர். ஆண், பெண் என இருவரும் தனித்தனி பேருந்தில் செல்லவேண்டும் என்பதால், ஆண்களெல்லாம் ஒரு பேருந்திலும்,பெண்களெல்லாம் வேறொரு பேருந்திலும் கண்காட்சிக்கு சென்றனர்.

முதல்வர் ஒரு ஒரு பெயராக வாசிக்க அனைவரும் பேருந்தில் ஏறினார்கள்.அப்பொழுது இவர்கள் நால்வரும் இருவர் இருவராக மல்லியும் தாராவும், கோதையும் மீராவுமாக பிரிந்து அமர்ந்து கொண்டனர். நான்கு பேருந்தில் கண்காட்சிக்கு சென்றனர். பேருந்தில் குத்துப்பாட்டை(kuthu songs) போட்டு ஆடியும் பாடியும், கூச்சலிட்டும் மகிழ்ச்சியுடன் சென்றார்கள்.

அப்போது கடைசி பேருந்து வர தாமதம் ஆகியதால் அனைத்து பேருந்தையும் நிறுத்துங்கள் என்றனர் ஆசிரியர்கள். ஆசிரியர்கள் கூறியதும் ஓட்டுனரும் பேருந்தை ஒரு சமன்படுத்திய மணல்வெளியில் நிறுத்திவிட்டார்.அப்பொழுது வெயில் காரணமாக கோதைக்கு மிகவும் வியர்த்ததால் அவள் மீராவிடம் நான் ஜன்னல் இடத்திற்கு வருகிறேன் என்றாள். உடனே மீராவும் சரி என்று கூற இருவரும் இடம்மறி அமர்ந்து கொண்டனர். அப்பொழுது பக்கத்து பேருந்தில் இருந்த எவனோ ஒருவன் வெகு நேரமாக கோதையை பார்த்து கொண்டிருந்தான்.அதை மீரா பார்த்து கோதையிடம்..

உன்னை அந்த பேருந்தில் இருப்பவன் வெகு நேரமாக பார்க்கிறான் என்றாள். அதற்கு கோதை”எவன் அவன்? என்று கேட்டாள்.”அதோ அங்கு கருப்பாக ஒருவன் இருக்கிறானே அவன்தான்”என்றாள். “ஆவன்னா!நீ இவன முன்னபின்ன பாத்திருக்கியா?”என்று மீராவிடம் கேட்டாள். அவளோ நான் பார்த்ததில்லை என்றாள். உடனே மீரா..மல்லி தாரா ஆகிய இருவரிடமும் “நீங்கள் அந்த பேருந்தில் இருப்பவனை பாத்திருக்கிர்களா?” என்று அவர்களிடம் கேட்க “இல்ல பார்த்ததுயில்லை” என்றனர்.மல்லி மீராவிடம் “இவே யாரு?” என்று கேட்டாள். மீரா அதற்கு “இவே யாருன்னே தெரியல ஆனா கோதையை வச்சக்கண்ணு வாங்காம பாக்குறான்!”என்றாள். அதன்பிறகு புத்தககண்காட்சிக்கு அனைவரும் நல்லபடியாக சென்று சேர்ந்தனர்.

புத்தக கண்காட்சிகளில் பொதுவாக பலவிதமான புத்தகங்கள் இடம் பெறுகின்றன.அதில்,நாவல்கள், கவிதைகள், வரலாறு மற்றும் கலாச்சாரம் பற்றிய புத்தகங்கள்,மொழிபெயர்ப்பு புத்தகங்கள், குழந்தைகள் புத்தகங்கள்,கலை மற்றும் கைவினை புத்தகங்கள்,அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்கள்,சமையல் மற்றும் ஆரோக்கியம்,சினிமா,கலை மற்றும் நடிகர்கள் பற்றிய புத்தகங்கள் என ஏராளமான புத்தகங்கள் அங்கு இடம் பெற்றிருந்தன…அதன்பின் பார்ப்பவர்களின் பார்வைக்கு பழங்கால சிற்பங்கள்,நாணயங்கள் மற்றும் மட்பாண்டங்கள், பண்டைய பொருள்கள் என அனைத்தும் காட்சிக்கு வைக்கப்பட்டிருத்தன.

கோதையும் அவளது தோழிகளும் எல்லாவற்றையும் சுற்றி பார்த்தும்,புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். மகிழனும் அங்கு இருந்ததால் அவனையும் அழைத்து புகைப்படம் எடுத்தாள் மீரா.. அந்த புகைப்படத்தில் கோதை,மகிழன் ஆகிய இருவர் மட்டும் இருப்பார்கள்.

அதுவே அவர்கள் எடுத்த முதல் புகைப்படமாகும்.(first photo📸) சாப்பிடுவதற்கு என்ன வேண்டுமென்றும் சீனியர் கேக்க, மீராவும் கோதையும் ஐஸ்கிரீம், பாப்கார்ன், போலி என வாங்கி வந்து மீரா,மல்லி, கோதை,தாரா நால்வரும் பரிமாறி(share) கொண்டு சாப்பிட்டார்கள்.

அதன்பின் கோதை, அவளது தோழிகள் மற்றும் அவளது வகுப்பில் இருக்கும் அனைவரும் சேர்ந்து குழு புகைப்படம்(group photo) எடுத்தார்கள்.புகைப்படம் எடுத்து முடிந்தபிறகு, வீட்டிற்கு செல்ல அனைவரும் புறப்படும் போது…பேருந்தில் கோதையை பார்த்த அந்த கருப்பானவன் மறுபடியும் இவளை பார்த்தபடியே சென்றான். அந்த கருப்பழகன் யார்? என்று அடுத்த பாகத்தில் காணலாம்.

-தொடரும்…

மீனா..✍🏻

1 thought on “எதிர்பாராத காதல் எதிர்காலத்தில் இணையுமா? Part-3 |Will an unexpected love match in the near future?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top