எல்லோருடைய கல்லூரி வாழ்விலும் ஒரு காதல் கதை இருக்கும்.அதைப் போல மகிழன், கோதை இவர்கள் இருவரின் கல்லூரி வாழ்வில் நடந்த காதல் கதையை பற்றிக் காணலாம்..
கோதைக்கு பனிரெண்டாம் வகுப்பு முடிவுகள்(result) வெளியாகியது.. அவள் நல்லா மதிப்பெண்கள் பெற்றாள். அதனால் அவள் மேற்படிப்பு படிக்க ஆசைப்பட்டாள். அவளுக்கு பிடித்த பி.எஸ்.சி கணினி அறிவியல் என்ற பாடப்பிரிவையே படிக்கலாம் என முடிவு செய்தாள். அரசு கல்லூரியில் தான் படிக்க விரும்பிய பாடப்பிரிவிற்கு விண்ணப்பம்(application)செய்தாள்.
கோதையின் மதிப்பெண்களை பார்த்த கல்லூரி நிர்வாகம் இவளை ஆலோசனைக்கு(counselling)அழைத்தது. ஆலோசனைக்கு பிறகு கோதைக்கு கல்லூரில் இடம் கிடைத்தது. அவளும் கல்லூரில் சேர்ந்து அவளது கல்லூரிப் பயணத்தை தொடங்கினாள். திங்களான்று முதலாமாண்டு மாணவ, மாணவியர்களுக்கு கல்லூரி திறக்கப்பட்டது. அந்த கல்லூரியில் பயிலும் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணாக்கார்கள் முதலாமாண்டு மாணாக்கர்களைக் காண மிகவும் ஆவலாக இருந்தனர். கோதைக்கு இந்த கல்லூரி மிகவும் பிடித்தது. கல்லூரிக்குச் சென்ற ஒரே வாரத்தில்கோதைக்கு மீரா, மல்லி என்ற இரண்டு தோழிகள் கிடைத்தனர்.
தோழிகள் இருவரும் மிகவும் நற்குணம் படைத்தவர்கள். கோதையும் நல்லகுணம் படைத்தவளாகவும், மிகவும் அழகானவளாகவும் இருப்பாள். முதல் நாள் வகுப்பில் தொடங்கியது.ஆசிரியர் வகுப்பிற்கு வருகிறார். அவர் உங்களுக்கு தேவையான புத்தகங்களை உங்கள் சீனியரிடம் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்.கோதைக்கு தெரிந்த ஒரு அக்கா அதே கல்லூரியில் இவளின் பாடப்பிரிவில் மூன்றாம் ஆண்டு படிக்கிறாள்.அவள் பெயர் ஜெசி.அவளிடம் கோதைக்கு தேவையான புத்தகங்களை வாங்கிக் கொண்டாள்.
கோதைக் கு தெரிந்த அக்கா என்பதால் இடைவெளி நேரத்தில் ஜெசியை காண அவளது தோழிகளுடன் ஜெசி வகுப்பிற்கு கோதை செல்வாள்.ஜெசி வகுப்பில் படிக்கும் ஒருவன் கோதை ஜெசியை பார்க்க வரும்போதும் போகும்போதும் பார்ப்பான்(sight). அவன் அவனது நண்பனிடம் அவளை பார்த்தாயா?எவ்வளவு அழகாக இருக்கிறாள்!! என்று கூறினான்.அதற்கு அவன் நண்பன் என்னடா!!மாப்ள லவ்வா? என்றான். “இல்லடா மாப்ள சும்மா சொன்னேன்டா” என்று கூறினான்.சாப்பாட்டு வேளையில் ஜெசியின் வகுப்பில் நின்று கோதையும் அவளது தோழிகளும் பேசும் போது….அவன் கோதையை வெகு நேரமாக பார்ப்பதை மல்லியும் மீராவும் பார்த்து விட்டார்கள்.
ஜெசி வகுப்பை விட்டு வெளியில் வந்தவுடன் மீராவும்,மல்லியும் கோதையிடம் உன் அக்கா வகுப்பில் இருக்கும் ஒருவன் உன்னையே பார்த்தான்(sight) என்று கூறினார்கள். அதற்கு கோதை “அவன் நான் அழகா இருக்கேன்ல அதான் பாத்திருப்பான்”என்று கூறி மூவரும் சிரித்து கொண்டே சென்றனர்.கோதைக்கு அவன் பெயர் தெரியாது.ரெண்டு, மூணு நாட்களாகவே அவன் இவள் வகுப்பை கடக்கும் போது இவளை பார்த்து விட்டு செல்வான். பிறகு எப்படியோ அவனது பெயரை அறிந்து கொண்டாள். அவன் பெயர் மணி.அவனுக்கும் அவள் பெயர் தெரியாது.மறுநாளும் இதேபோல் ஜெசியிடம் பேசிவிட்டு கோதை சென்ற பிறகு அவளின் பெயரை எப்படியாவது அறிந்து கொள்ள வேண்டும் என்று ஜெசியிடம் சென்று இவர்கள் யார்? இவர்களை உனக்கு எப்படி தெரியும்?என்று கேட்டான். அதற்கு ஜெசி எனது தோழியின் தங்கை கோதை என்றாள்.
அவளது பெயரை அறிந்த மணி மிகவும் சந்தோஷத்தில் துள்ளிகுதித்தன்.அவன து நண்பன் “என்னடா மாப்ள இவ்ளோ சந்தோசமா இருக்க” என்று கேட்டான். அதற்கு மணி “எனக்கு அவ பேரு தெரிஞ்சிருச்சுடா மாப்ள”என்றான். இரண்டு நாட்கள் கழிந்தன.. கல்லூரி பேருந்து நிலையத்தில் இருந்து ஒருகிலோமீட்டர் தொலைவில் உள்ளதால் நடந்து தான் செல்ல வேண்டும். அப்படி ஒரு நாள் காலையில் கோதையும் அவளது தோழிகளும் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது மணியும்,அவனது நண்பனும் வருகிறார்கள். கோதை!! நான் உன்னிடம் தனியாக பேசவேண்டும் என்று மணி அழைத்தான்
. அதனை பார்த்த அவளது தோழிகள் அங்கிருந்து அவளை விட்டு தூரம் தள்ளி நின்றனர். அவள் மணியிடம் பேசிவிட்டு வந்தவுடன் கல்லூரிக்கு சென்றனர். தோழி இருவரும் அவன் உன்னிடம் என்ன கூறினான்? என்று எதுமே கேக்கவில்லை..ஆனால் அவன் ஒருவேளை கோதையை காதல் செய்வதாக கூறியிருப்பானோ? என்று இருவருக்கும் சந்தேகம் வந்தது. கல்லூரி முடிந்தவுடன் மீரா மல்லியிடம் நான் கோதையிடம் காலையில் என்ன நடந்தது என்று கேட்கிறேன் என்றாள்.
அதைப்போலவே பேருந்தில் போகும் போது மீரா கோதையிடம் “அவன் உன்னிடம் என்ன கூறினான்?” என்று கேட்டாள். அதற்கு கோதை அவன் என்னை காதல் செய்வதாக கூறினான். அதனால் என்னிடம் போன்நம்பர் கேட்டான்.. மீராவிற்கு மனதிற்குள் குபீர் என்று ஆகிற்று.. உடனே மீரா நீ அவனிடம் உன்னுடைய போன்நம்பரை குடுத்தாயா? என்று கேட்டாள்.”இல்லை நான் கொடுக்கவில்லை கொடுக்கவும் மாட்டேன்” என்றாள்..
அதான் பின் பேருந்தை விட்டு இரங்கியதும் மல்லியிடம்.. “மல்லி!மல்லி!நாம் சந்தேகப்பட்டது உண்மை ஆகிற்று”என்று கூறினாள். அவளும் மீராவை போல் ஷாக் ஆகி போனாள்!!. பாதி நாள் கடந்தது. மணிக்கு கோதையின் போன்நம்பர் கிடைத்தது.. அவனும் அவளுக்கு மெசேஜ் அனுப்பினான்..
அதை பார்த்த கோதை “நீங்கள் யார்?”என்று கேட்டாள்.. அதற்கு அவன் நான் தான் மணி என்று கூறினான்.. பின்பு இவள் மீரா, மல்லியிடம் மணி எனக்கு மெசேஜ் செய்தான் என்று கூறினாள். அதற்கு அவளது தோழிகள் “அவனை பார்த்தால் நல்லவன் போல் தெரியவில்லை..நீ அவனிடம் பேசாதே” என்று கூறினார்கள். இவளும் பேசாமல் இருந்தால் ஆனால் அவன் மெசேஜ் செய்தால், இவள் பதில் மெசேஜ் செய்வாள் இப்படி சில நாட்கள் நடந்தது..
பிறகு அவள் மணியிடம் பேசுவதை நிறுத்தி விட்டு நம்பரை பிளாக்(block) செய்துவிட்டாள்.அதான் பின் முதல் செமஸ்டர் தேர்வுகள் ஆரம்பமானது. அதில் மிகவும் கவனம் செழுத்தியதால் அவனை கோதை கண்டுகொள்ளவில்லை.அவனும் கோதையிடம் பேசுவதற்கு நிறைய முயற்சிகள் செய்தான்.ஆனால் அவன் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடித்தது. தேர்வுகள் அனைத்தும் முடிந்த நிலையில் கல்லூரிக்கு இரண்டு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டது.
விடுமுறைக்கு பின், கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டது. வழக்கம்போல் அனைவரும் கல்லூரிக்கு வருகிறார்கள்.கோதை அவளது தோழிகளிடம் “லீவுக்கு அப்பறம்மா உங்களை பார்த்ததில்ல எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு”என்றாள். அடுத்த செமஸ்டர் ஆரம்பமானது.சிறிது நாள் கழித்து கோதைக்கு மறுபடியும் ஒரு புதிய நம்பரிலிருந்து மெசேஜ் வந்தது..
“அது யார்?”என்று அடுத்த பாகத்தில் காணலாம்.
தொடரும்….
மீனா..✍🏻