Microsoft’s operating system, applications and services are affected worldwide.
Various services have been affected due to the sudden glitch in the Windows of the famous software company Microsoft. Especially the employees of IT companies are suffering as their computers are down. A change in software update is said to be the cause of the glitch.
This results in the ‘Blue Screen Error’ Blue Screen of Death (BSOD) on Windows users’ systems.
Microsoft has said that changes in the Crowdstrike update have caused a glitch in Microsoft software. Many companies, banks and government offices have been affected by this sudden problem. Indian airlines are sharing on their websites that they are facing service disruptions due to this issue.
Airport service impact:
Companies like the recently launched Agasa Airlines have been affected by this. Likewise, the Windows service disruption has also affected service at airports. Services at airports like Chennai, Delhi and Mumbai have been affected.
A Microsoft company error has been detected
Crowdstrike has identified a platform bug that caused Microsoft services to crash, its chief says. He explained that it has been rectified immediately and alternative files have been uploaded, adding that the services will gradually improve. It has also been reported that computers running Mac and Linux operating systems are not affected.
மைக்ரோசாப்ட் இயங்குதளம், செயலிகள் மற்றும் சேவைகள் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன.
பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸில் ஏற்பட்ட திடீர் கோளாறால் பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐடி நிறுவன ஊழியர்களின் கம்ப்யூட்டர்கள் முடங்கியதால், தவித்து வருகின்றனர். சாப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல் தான் கோளாறு ஏற்படுவதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
இதனால் விண்டோஸ் பயனர்களின் சிஸ்டம்களில் ‘ப்ளூ ஸ்க்ரீன் எரர்’ Blue Screen of Death (BSOD) காண்பிக்கிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளதில் Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் மைக்ரோசாப்ட் சாப்ட்வேரில் குளறுபடி ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த திடீர் சிக்கலால் பல நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்திய விமான நிறுவனங்கள் இந்த சிக்கலால் சேவை குறைபாடுகளை எதிர்கொண்டுள்ளதாக தங்கள் வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றன.
விமான நிலைய சேவை பாதிப்பு:சமீபத்தில் தொடங்கப்பட்ட ஆகாசா ஏர்லைன்ஸ் போன்ற நிறுவனங்கள் இதனால் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. அதேபோல், வின்டோஸ் சேவை பாதிப்பால் விமான நிலையங்களிலும் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, டெல்லி, மும்பை போன்ற விமான நிலையங்களில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
லண்டனில் சேனல் முடக்கம்: லண்டனை சேர்ந்த ஸ்கை நியூஸ் விண்டோஸ் சேவை பாதிப்பால் ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது.
மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்க காரணமான Crowdstrike இயங்குதள கோளாறு கண்டறியப்பட்டுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார். உடனடியாக அது சரி செய்யப்பட்டு மாற்று ஃபைல்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ள அவர், படிப்படியாக சேவைகள் சரியாகும் என்று தெரிவித்துள்ளார். Mac, Linux ஆகிய Operating Systemஇல் இயங்கும் கம்ப்யூட்டர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது