நம்ம எல்லாரும் கடல் கன்னி அப்படிங்கறத புத்தகத்தில் தான் படித்திருப்போம் ஆனால் நம் முன்னோருக்கெல்லாம் முன்னோர்கள் இந்த ஒரு கடல் கன்னியை தேடி பயணித்தார்கள் என்பதை உங்களால் நம்ப முடியுமா… இந்த ஒரு கதையில கடல் கொள்ளையர்கள் எப்படி கடல் கன்னிய கண்டுபிடிச்சாங்க அப்படிங்கற விஷயத்தை பார்ப்போம்.
இந்தக் கடல் கன்னி வேட்டை கிறிஸ்தவர் பிறப்பதற்கு முன்னாடி இருந்து ஆரம்பமான கதை. அப்ப உள்ள ராஜாக்கள் கடல் கன்னி அப்படிங்கிற மனிதர் போல் இருக்கும் மீனை எப்படியாவது நம்ம பிடிச்ச ஆகணும் அப்படின்னு ஆசை நிறைய ராஜாக்களுக்கு இருந்துச்சு.
ஆனா இந்த கடல் கன்னியை தேடி கடலுக்குப் போனவங்க போனதாக தான் இருந்துச்சு தவிர அங்க போனவங்க யாரும் திரும்பி வரல. உண்மையாகவே போனவங்களுக்கு என்ன நடந்து இருக்கும். இந்தக் கடல் கன்னிய யாரு தேடிப் போனாலும் அவங்க பெரிய ஆபத்துல மாட்டிகிடுவாங்க அப்படின்னு நிறைய பேர் பேசிக்கிட்டாங்க.
அதுலயும் ஒரு ராஜா அந்த கடல் கன்னிய எப்படியாவது பிடிச்சு வரலாறுல யாரும் முறியடிக்க முடியாத தன்னுடைய பெயர் வரணும்னு ஆசைப்பட்டாரு. இதனால நாட்டுல இருக்கிற எல்லோருக்குமே ஒரு செய்தி ஒன்றை அனுப்புகிறார் யார் இந்த கடல் கன்னியை கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு என் ராஜ்யத்தில் பாதி எழுதி வைக்கிறேன் என்று கூறுகிறார்.
இந்த செய்தி நாட்டுக்குள் சென்று ரொம்ப நாட்கள் ஆகியும் யாருமே அந்த கடல் கன்னி வேட்டைக்கு தயாராக இருப்பதாக தெரியவில்லை இதனால் ராஜா கடும் கோபம் கொண்டார். தன் ராஜ்ஜியம் முழுவதையுமே எழுதி வைக்கிறேன் எனக்கு கடல் கன்னியை பிடித்த பெயர் மட்டும் வரலாறில் இருந்தால் போதும் என்று கூறுகிறார்.
ஒரு அயல் நாட்டவர் இந்த ராஜா நாட்டிற்கு வரும் பொழுது இந்த ஒரு செய்தியை கேட்கிறார் இந்த செய்தியை கேட்டதும் அவருக்கு ரொம்ப வியப்பாக இருந்தது யார் இந்த ராஜா இந்த கடல் கன்னியை பிடித்துக் கொடுத்தால் ஏன் இவர் ராஜ்ஜியத்தை தருகிறேன் என்று கூறுகிறார் என்று யோசித்துப் பார்த்தார்.
அந்த ராஜாவின் முன் போய் அந்த மானிடன் நான் அந்தக் கடல் கன்னியை கொண்டு வருகிறேன் எனக்கு உங்கள் ராஜ்யத்தை எழுதி வைப்பீர்களா என்று கேட்டான் அதற்கு அந்த ராஜா சிரித்தவாறு உனக்கு என் ராஜ்ய மட்டும் அல்ல என்னிடம் இருக்கும் எல்லாத்தையும் உன்னிடம் தருகிறேன் என்று வாக்களித்தார்.
இதற்கு இந்த மானிடம் சரி நான் கடலில் பயணிக்க எனக்கு ஒரு பெரிய கப்பல் ஒன்று தேவை அதற்கு அப்புறம் எனக்கு போதுமான உணவும் சில ஆயுதமும் தேவை என்று ராஜாவிடம் வினாவினான். ராஜா அவனுக்கு பயணத்திற்கு என்னவெல்லாம் தேவையோ அதையெல்லாம் ராஜா அவனுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்.
வீரனும் கடல் கன்னி வேட்டைக்கு தயாரானான். ராஜா வீரனிடம் இந்த கடல் கன்னி வேட்டைக்காக ஏகப்பட்டோர் உயிர் பறி போயிருக்கிறது. போனவர் திரும்பி வந்ததாக சரித்திரமே இல்லை. நீ திரும்பி வருவாயா என்று கூட எனக்கு தெரியவில்லை ஆனால் உனக்கு நான் இவ்வளவு பிரமாண்டமான கப்பல் ஒன்றை தயார் செய்து உள்ளேன் என்று கூறினார்.
வீரனும் கப்பலில் கடலில் பயணம் செய்ய ஆரம்பித்தான் அவன் கையில் ஒரு வரைபடம் ஒன்று இருந்தது அதை பார்த்துக்கொண்டு கப்பலை அதை நோக்கி நகர்ந்த ஆரம்பித்தான். அன்று கடற்கரையில் மட்டும் ஏராளமான மக்கள் வீரனை அன்போடு வழிய அனுப்பி வைத்தனர்.
வீரன் தன்னுடன் ஒரு குரங்கு ஒன்றை வைத்திருந்தான் அதுக்கப்புறம் ஒரு கழுகும் அவனிடமிருந்தது இந்த விலங்குகள் எப்போதும் வீரனுக்கு துணையாகவும் ஆபத்து நேரங்களில் உதவக்கூடியதாகவும் இருந்தது.
இந்த ஒரு கதை இதோடு முற்றும்… இதில் நிறைய அத்தியாயம் உள்ளது வீரன் கடல் பயணத்தில் என்னென்ன ஆபத்துக்களை சந்திக்கப் போகிறான் என்று நம் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.