ஒரு கிராமத்தில் பண்ணையார் ஒருவர் யானை வளர்த்தார். அந்த யானையை பண்ணையார் வீட்டு வேலைக்காரன் தான் பராமரித்து வந்தான். யானைக்கு பசிக்கும்போது பண்ணையார் தோட்டத்தில் மேய்வதற்காக அவிழ்த்து விடுவான்.
அது மேய்ந்து விட்டு வந்ததும் கட்டிப் போட்டுவிட்டு வீட்டிற்கு சென்று விடுவான். அந்த யானை தினமும் கட்டை அவிழ்த்துக்கொண்டு பக்கத்து தோட்டத்தில் இருக்கும் பயிர்கள்,கரும்பு, வாழை இது எல்லாம் அடித்து நொறுக்கி தின்றுவிட்டு வந்துவிடும். இப்படி தினமும் செய்து கொண்டிருந்தது.இதை பார்த்த ஊர் மக்கள் பண்ணையாரிடம் எப்படி சொல்வது அவர் கோபப்படுவார் என்று பயந்து கொண்டு இருந்தனர்.
அப்படி யாராவது போய் பண்ணையாரிடம் கூறினால் அவர் கோபப்பட்டு அடித்து துரத்தி விடுவார்என் யானை அப்படி எல்லாம் செய்யாது என் தோட்டத்தில் தான் மேய்ந்து கொண்டு இருக்கிறது என்று சொல்லிவிடுவார். ரொம்ப நாள் இப்படியே அந்த யானை தொல்லை பண்ணிக் கொண்டிருந்தது என்ன செய்வதென்று தெரியாமல் ஊர் மக்கள் திகைத்து கொண்டு இருந்தனர்.
அப்போது பக்கத்து கிராமத்தில் இருந்து ஒரு விவசாயி வயதானவர் அந்த ஊர் பக்கம் வந்தார். மக்கள் எல்லாம் வருத்தத்தோடு இருப்பதைக் கண்டார். ஏன் இப்படி எல்லோரும் வருத்தமாக இருக்கிறீர்கள் என்று அந்த வயதான பெரியவர் கேட்டார். அந்த ஊர் மக்கள் நடந்ததை எல்லாம் அந்த பெரியவரிடம் கூறினார்கள்.
அந்த வயதானவர் நான் சொல்வதைப் போல் செய்யுங்கள் அந்த யானை உங்கள் தோட்டத்துக்குள் வரும்போது நீங்கள் அனைவரும் சேர்ந்து சங்கிலியால் அந்த யானையை கட்டி இழுத்து வாருங்கள். அதன் பிறகு நான் பார்த்துக் கொள்ளுகிறேன் என்றார். ஊர் மக்கள் எல்லோரும் ஐயையோ பண்ணையார் மிகவும் கோபக்காரர் அவர் யானையை நாங்கள் கட்டி இங்கு இழுத்து வந்து விட்டால் எங்களை உயிரோடு விட மாட்டார் என்றுபயந்தனர்.
அதற்கு அந்த வயதான பெரியவர் அப்படி ஒன்றும் நடக்காது நீங்கள் அந்த யானையை கட்டி இழுத்து வந்து இந்த ஆலமரத்தில் கட்டி போடுங்கள் என்றார். சரி என்று எல்லோரும் தோட்டத்தில் மறைந்திருந்தார்கள் அப்போது யானை வந்து அங்கு உள்ள பயிர்கள் கரும்பு,வாழை, எல்லாம் அடித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது ஊர் மக்கள் மொத்தமாக சென்று அந்த யானையை சுற்றி நின்று சங்கிலியான் அதை கட்டி இழுத்து வந்து ஆலமரத்தில் கட்டி போட்டனர்.
இதைப் பார்த்த பண்ணையார் வீட்டு வேலைக்காரன் பண்ணையாரிடம் போய் கூறினான். ஐயா நமது யானையை ஊர் மக்கள் அனைவரும் கட்டி இழுத்துக் கொண்டு ஆல மரத்தில் கட்டி வைத்திருக்கிறார்கள் நீங்கள் உடனே வாருங்கள் என்றான். உடனே பண்ணையாருக்கு கோபம் பயங்கரமாக வந்தது. ஊர் மக்கள் அனைவரையும் அங்கு அழைத்து வரச் சொன்னார். பண்ணையாரின் வேலைக்காரன் அங்கு சென்று உங்கள் அனைவரையும் பண்ணையார் அழைத்து வரச் சொன்னார் என்று கூறினான்.
உடனே அந்த பெரியவர் நீங்கள் யாரும் வர வேண்டாம் நான் போய் வருகிறேன் என்று அந்த வேலைக்காரனுடன் பண்ணையார்வீட்டுக்கு சென்றார். அந்தப் பெரியவரை பார்த்ததும் பண்ணையாருக்கு பயங்கரமாக கோபம் வந்தது என் யானையை எதற்காக நீ ஆலமரத்தில் கட்டி வைத்திருக்கிறாய் என்று கேட்டார்.
உங்கள் யானை திருமணம் செய்து வைக்கச் சொல்லி எங்களிடம் அடம் பிடித்தது அதனால் பெண் யானை தேடி கொண்டு இருக்கிறோம் அதற்காக உங்கள் யானையை நாங்கள் கட்டிப் போட்டு வைத்திருக்கிறோம் வேண்டுமென்றால் நீங்கள் வந்து உங்கள் யானையை விசாரிங்கள் என்றார்.
உடனே பண்ணையார் குதிரை வண்டியில் அமர்ந்து கொண்டு யானை கட்டி வைத்திருக்கும் இடத்திற்கு வந்து கொண்டிருந்தார். வரும்போது சுற்று முற்றும் பார்த்தார் அங்கு பயிர்கள், வாழை, தென்னை, என அனைத்து பயிர்களையும் அடித்து நொறுக்கி கிடந்தது. அதைப் பார்த்த பின்பு தான் பண்ணையாருக்கு புரிந்தது எதற்காக நம் யானையை கட்டி வைத்திருக்கிறார்கள் என்று. அதன் பின் தன் தவறை உணர்ந்து யார் தோட்டத்தில் எல்லாம் அதிகம் நாசம் பண்ணி இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் நஷ்ட ஈடாக நிறைய பொன்னும் பொருளும் வழங்கினார். அதை வைத்து மக்கள் சந்தோஷமாக மறுபடியும் விவசாயத்தை ஆரம்பித்தார்கள்.
பண்ணையார் அவர் யானையை தோட்டத்திற்கு அழைத்துச் சென்று நன்றாக கட்டி போடும்படி வேலைக்காரன் இடம் கூறினார்.