ஒரு அழகிய கிராமத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் மக்கள் பகலில் என்னதான் இவர்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் அவர்கள் கிராமத்தில் இரவு ஆனதும் அனைவரின் கண்ணிலும் ஒருவித பயம் தெரியும். இவர்களின் பயத்திற்கு காரணம் இவர்கள் கிராமத்தில் அருகில் இருக்கும் ஒரு அடர்ந்த காடு.
இந்த கிராமத்தின் மக்கள் அந்த அடர்ந்த காட்டினுள் தான் வேட்டையாட செல்வார்கள் ஆனால் பொழுது சாயும் முன் அவர்கள் அனைவரும் வேகமாக வீட்டிற்கு திரும்பி விடுவார்கள். அப்படி யாராவது பொழுது சாயும் முன் வரவில்லை என்றால் அவர்களின் நிலைமை அவ்வளவுதான். இதனால் அந்தக் காடு ஒரு சபிக்கப்பட்ட காடு என்று அந்த ஊர் மக்கள் நம்பினார்கள்.
அந்த கிராமத்தில் இருந்த நான்கு சிறுவர்கள் அந்தக் காட்டின் பயத்தை அறியாமல் அந்தக் காட்டிலும் செல்லலாம் என்று முடிவு எடுக்கிறார்கள். நம் பொழுது சாயும் முன் நம் வீட்டிற்கு திரும்பி விடலாம் என்று நினைக்கிறார்கள். அவர்கள் விளையாட்டுத் தனமாக அந்த ஒரு காட்டினுள் செல்கிறார்கள்.
அந்த சிறுவர்கள் எந்தப் பகுதிக்குள் செல்லக்கூடாது என்று இருக்கிறதோ அந்தப் பகுதியை நோக்கி செல்லத் தொடங்குகிறார்கள். அவர்கள் செல்லும் பாதையில் ஏகப்பட்ட மரங்களில் ஒருவித மர்ம பொம்மை ஒன்றை தொங்க விட்டிருந்தார்கள். ஏகப்பட்ட மரத்தில் ஒருவித மந்திர வார்த்தைகளும் எழுதப்பட்டிருந்தது. இதையெல்லாம் வேடிக்கையாக பார்த்துக் கொண்டு அவர்கள் மேலும் மேலும் காட்டுக்குள் செல்லத் தொடங்கின.
அப்போது அந்தக் காட்டினுள் மையப்பகுதியில் ஒரு தன்னந்தனிமையில் வீடு ஒன்று இருப்பதை அந்த சிறுவர்கள் கவனித்தார்கள் சரி நம் அந்த வீட்டினுள் போய் பார்க்கலாம் என்று நினைத்தார்கள். அவர்கள் அந்த வீட்டின் அருகே சென்றார்கள்.
அப்போதே அந்த வீட்டினில் இருந்து ஒரு வயதான முதியவர் வெளியே வந்தார். அவரைப் பார்க்க சாதாரண மனிதரைப் போல் இருந்தது. இதைப் பார்த்ததும் சிறுவர்களுக்கு நீங்கள் எப்படி தனிமையாக இங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் பிறந்ததிலிருந்து இங்கே தன் இருக்கிறேன் என்று கூறினார். வந்த சிறுவர்களுக்கு அந்த முதியவர் சாப்பிட கொஞ்சம் பிஸ்கட் கொடுத்தார். அதை சாப்பிட்டுவிட்டு அந்தக் குழந்தைகளை வீட்டிற்கு பத்திரமாக செல்லுங்கள் என்று கூறினார் வழியில் யாரும் கூப்பிட்டாலும் அவர்களை கண்டு கொள்ளாமல் செல்லுங்கள் என்றார்.
பொழுது சாயப்போகும் நேரத்தில் அந்த சிறுவர்கள் கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். அன்று பொழுது வேகமாக இருள் சூழ்ந்ததால் காடு ஒரு மயான அமைதியாக இருந்தது. இந்த சிறுவர்கள் நடந்து செல்லும் பொழுது வழியில் ஒரு சூனியக்காரி ஒருவள் நின்று கொண்டிருந்தால். இந்த சிறுவர்களை பார்த்ததும் என் வீட்டிற்கு வாருங்கள் இருள் சூழ்ந்து விட்டது பகலில் உங்கள் வீட்டிற்கு செல்லுங்கள் என்று கூறினாள். அந்த சிறுவர்கள் பகலில் தைரியசாலியாக இருந்தாலும் இரவில் அவர்களுக்கு பயம் ரொம்ப அதிகமாகிவிட்டது அது மட்டும் இல்லாமல் இந்த சூனியக்காரியை பார்த்ததும் இவர்களுக்கு இன்னும் பயமாகிவிட்டது.
அந்த சிறுவர்கள் அந்த சூனியக்காரியை பார்த்தும் பார்க்காதது போல் நடந்து சென்றார்கள். அப்போது வழியில் இன்னும் நிறைய சூனியக்காரிகள் நின்று கொண்டிருந்தார்கள் எல்லோரும் சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சூனியக்காரி கையில் கத்தியுடன் இந்த சிறுவர்களை நோக்கி வந்தால். சிறுவர்களுக்கு ரொம்பயும் பயம் அதிகமானது.
அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரம் ஒரு ஓநாயின் சத்தம் காடையை அலற வைத்தது சூனியக்காரிகளின் கண்ணில் இருந்த அகோரப் பசி பயமாக மாறியது. சிறுவர்கள் திரும்பிப் பார்க்கும் பொழுது மனிதனைப் போல் ஒரு ஓநாய் மனிதன் நின்று கொண்டிருந்தான். அந்த ஓநாய் சத்தம் கேட்டதும் அனைத்து சூனியக்காரிகளும் பயந்து போட ஆரம்பித்தனர்.
அப்போது ஒரு சூனியக்காரி மட்டும் ஒரு சிறுவனை பிடிக்க பார்த்தாள் அப்போது அந்த ஓநாய் மனிதன் அந்த சூனியக்காரியை அடித்து தூக்கி எறிந்தான்.
சற்று நேரத்தில் ஓநாய் இருந்த மனிதன் வயதான முதியவராக மாறினான். அந்த குழந்தைகளுக்கு அந்த முதியவரை பார்த்ததும் மனதில் ஒரு சந்தோஷம். இந்தக் குழந்தைகளை முன்னாடி நடக்க விட்டு அந்த முதியவர் பின்னாடி இவர்கள் பத்திரமாக வீட்டுக்கு செல்கிறார்களா என்று பார்க்க நடந்து வந்தார்.
அந்த முதியவர் இந்த குழந்தைகளிடம் இந்த காடு ஒரு சபிக்கப்பட்ட காடு ஏகப்பட்ட சூனியக்காரிகளும் பேய்களும் இருக்கு அதனால் நீங்கள் தன்னந்தனியாக இந்த காட்டினுள் எப்போதும் வரக்கூடாது என்று கூறினார். இந்த காட்டினில் தனியாக மாட்டிக் கொள்வர் இந்த சூனியக்காரிகள் கொன்றுவிடுவார்கள் என்று கூறினார். நீங்கள் இங்கு பார்த்ததையும் என்னையும் பற்றி ஊர் மக்களிடம் கூறக்கூடாது என்றும் கூறினார் அந்த சிறுவர்கள் சரி என்று கூறினார்கள்.
அந்த முதியவர் இந்த சிறுவர்களை நோக்கி கிராமத்துக்கு பாதுகாப்பாக கூட்டி சென்றார். அப்போது அந்த கிராமத்தில் ஏகப்பட்ட மக்கள் குழந்தைகளை காணவில்லை என்று கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள் இந்த குழந்தைகளை பார்த்ததும் ஊர் மக்களுக்கு நல்லபடியாக வந்து விட்டார்கள் என்று நினைத்தார்கள்.
.
.
எங்களிடம் உங்கள் வீட்டு சுபகாரயங்களுக்கு தாம்பூல பைகளும் மற்றும் பத்திரிக்கைகளும் சிறந்த முறையில் செய்து தரப்படும்.