நீங்கள் படிக்கிறது இந்த கதையின் இரண்டாம் பாகம். சரியாக 30 வருடங்கள் கழித்து ஐந்து நண்பர்கள் அவர்களின் கோடை விடுமுறையை கழிக்க ஒரு காட்டிற்கு பயணம் மேற்கொள்கின்றனர் இந்த ஒரு பயணம் அவர்களின் வாழ்க்கையை இவ்வாறு மாற்றப் போகிறது என்று தெரியாமல் இந்த ஒரு பயணத்தை மேற்கொள்கின்றனர்.
ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு அடர்ந்த காட்டின் நடுவில் ஒரு ஆறு ஒன்று ஓடுகிறது அந்த ஆற்றின் ஓரத்தில் இவர்கள் கூடாரம் அமைத்து இரண்டு நாள் தங்குவது என்று முடிவு எடுக்கின்றனர் அனைவரும் ஒரு உற்சாகத்துடன் அந்த காட்டிற்குள் செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர்.
பயணத்தின் போது ஐந்து நண்பர்களின் ஒருவன் தனது பாட்டி சொல்லிருக்கிறார் இந்த ஒரு காட்டில் ஒரு சூனியக்காரி வாழ்ந்து வந்ததாகவும் பல பேரை ஆவல் காவு கொடுத்ததாகவும் சொல்லி இருக்கிறார் இதனைக் கேட்ட நான்கு நண்பர்களும் வேடிக்கையாக எடுத்துக் கண்டு சிரித்தனர்.
ஒரு வழியாக அவர்கள் அந்த அடர்ந்த காட்டினை அடைந்தனர் அங்கு ஓடும் அந்த ஆற்றினை கண்டுபிடித்து அவர்கள் கூடாரம் அமைத்து அன்று இரவு அவர்கள் நன்றாக ஓய்வெடுத்தனர் அந்த ஒரு சமயத்தில் அவர்கள் நாளை இந்த ஒரு ஆற்றில் நம் படகு சவாரி செய்யலாம் என்று கூறினார். அப்பொழுது அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருத்தன் அந்த சூனியக்காரி வீடு இங்கு இருந்தால் நம் கண்டுபிடித்து அங்கு செல்லலாம் என்று கூறினான். இதனைக் கேட்ட மற்ற நண்பர்கள் இது வெறும் கட்டுக்கதை தான் இதனை நம்பி நாம் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கூறினான்.
மறுநாள் பொழுது விடிந்தது அந்த நண்பர்கள் மிகவும் உற்சாகத்துடன் அந்த ஒரு ஆற்றில் படகு சவாரி செய்ய எல்லா ஏற்பாடுகளும் செய்து கொண்டிருந்தனர் அப்பொழுது அவர்கள் அந்த ஆற்றில் படகு சவாரி மேற்கொண்டனர். இந்த ஒரு சமயத்தில் அவர்கள் எதிர்பாராத நேரத்தில் படகு பாறையில் மோதி அவர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். அவர்கள் அந்த ஆற்றின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஒரு சில கிலோமீட்டர் தூரத்தில் கரை ஒதுங்கினர். அந்த ஐந்து நண்பர்களுக்கும் நாம் எந்த இடத்தில் உள்ளோம் என்று ஒரு குழப்பமாக இருந்தது
அவர்கள் அந்த ஆற்றின் எதிர் திசையை நோக்கி நடக்கத் தொடங்கினர். அந்த ஐந்து நண்பர்களும் பேசிக்கொண்டே இன்னும் எவ்வளவு தூரம் தான் உள்ளது என்று நடந்து கொண்டு அவர்கள் இருப்பிடத்தை தேடி அலைந்தனர் அப்பொழுது தான் அவர்கள் எதிர்பாராத ஒரு பாலடைந்த ஒரு வீடு ஒன்றை கண்டுபிடித்தனர். இந்த வீட்டினுள் நாம் சென்று உதவி கேட்கலாம் என்று நினைத்தனர் அப்பொழுது ஒருவர் இது அந்த சூனியக்காரி வீடாக கூட இருக்கலாம் என்று கூறினார்.
இதனைக் கேட்ட மற்றொரு நண்பர் இன்னும் இந்த காலத்தில் இப்படி எல்லாம் கட்டுக்கதையை நம்பிக் கொண்டு இருக்க வேண்டாம் நம் உயிர் பிழைக்க வேண்டும் என்றால் உதவி கேட்க தான் வேண்டும் என்று கூறினார். அந்த ஒரு வீட்டினுள் இந்த ஐந்து நண்பர்களும் சென்று வீட்டினுள் யாராவது இருக்கிறீர்களா என்று கேட்டார்கள்
அந்த ஒரு வீட்டினுள் இருந்து எந்த ஒரு சத்தமும் வெளிவரவில்லை அதனால் இவர்கள் இந்த வீட்டில் யாரும் இல்லை என்று தெரிந்து கொண்டனர் அதனால் இன்று இரவு மட்டும் நாம் இங்கு தங்கி செல்லலாம் என்று நினைத்தார்கள். அந்த ஒரு வீட்டில் என்னென்ன இருக்கிறது என்று இவர்கள் அலசி ஆராய்ந்தனர் அந்த ஒரு சமயத்தில் அவர்களுக்கு ஒரு புத்தகம் ஒன்று கிடைத்தது என்ன புத்தகம் என்று தெரியாமல் அவர்கள் அதை பார்த்துக் கொண்டிருந்தனர் அந்த ஒரு புத்தகத்தை சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது ஏதேனும் மொழிகளும் அமானுஷ்ய ஓவியங்களும் அந்த புத்தகத்தின் மேல் வரையப்பட்டிருந்தது.
ஏன் இந்த ஒரு புத்தகத்தை இவர்கள் இவ்வாறு கட்டி வைத்துள்ளனர் என்று தெரியாமல் அதில் ஒரு நண்பர் இதை நாம் கழட்டி இந்த புத்தகத்தில் என்ன எழுதி இருக்கு என்று நாம் பார்க்கலாம் என்று யோசித்தனர். அதில் இன்னொரு நண்பரும் நமக்கு எதுக்கு தேவையில்லாத வேலை நம் நாளை காலை நம் வீட்டிற்கு சென்று விடுவோம் தேவையில்லாத இந்த புத்தகத்தை நாம் ஏன் பிரித்து படிக்க வேண்டும் என்று கேட்டார்.
இதனைக் கேட்காத ஒரு நண்பர் அந்த புத்தகத்தைப் பிரித்து அந்த ஒரு புத்தகத்தில் என்ன எழுதப்பட்டிருக்கு என்று பார்த்தார் அந்த ஒரு புத்தகத்தின் உள் எந்தவொரு எழுத்தும் இல்லை வெறும் வெற்று பேப்பராக மட்டும்தான் இருந்தது இவர்கள் இந்த ஒரு புத்தகத்தை இவர்கள் கட்டி வைத்திருந்தன என்று அந்த ஒரு புத்தகத்தை தூக்கிப்போட்டு அந்த இடத்தை விட்டு சென்றார்.
அன்று ஒரு இரவு அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுதே ஒருவருக்கு அவசரமாக உச்சா வந்ததால் அவர் அந்த ஆற்றின் அருகில் போய் உச்சா போயிட்டு வரலாம் என்று அந்த ஆட்டின் பக்கம் சென்றார் அப்போது அந்தப் புத்தகத்தினை பிடித்துப் பார்த்த அவருடைய நண்பர் ஆற்றின் ஓரமாக இறந்து கிடந்தார் இதனைப் பார்த்ததும் அவருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது உடனடியாக அவர்கள் நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு வேகமாக சென்று இந்த மாதிரி நம் நண்பன் ஒருவன் இறந்து இந்த ஆற்றின் பக்கத்தில் இருக்கான் என்று கூறினான் அப்பொழுது அந்த இறந்த நண்பன் வரும்பொழுது இவர்கள் நால்வரும் அந்த ஒரு இடத்தை விட்டு ஓடத் தொடங்கினார் அப்பொழுது அந்த ஆற்றின் பக்கம் இன்னொரு நண்பனும் இறந்து கிடப்பதே அந்த நண்பர்களில் ஒருவன் பார்க்கும் பொழுது மிகவும் பயத்தில் அதிர்ச்சியானான். இன்னொரு நண்பன் வேகமாக ஓடும் பொழுது பாறைக்குள் சிக்கி இருந்த அவனின் உடலின் சடலத்தை பார்த்து பயந்து போனான் அப்பொழுது முதலில் இறந்து சடலமாக பார்த்த அந்த நண்பன் இவர்கள் ஐ பார்த்து ஒரு அதிர்ச்சியான ஒரு விஷயத்தை கூறினான்.
நண்பர்களே நம் அந்த படகில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது நம் படகு உடைந்து நம் ஆற்றில் அடித்துச் செல்லும் பொழுதே நம் ஐவரும் இறந்து விட்டோம் நம் இறந்ததுக்கு அப்புறம் தான் நம் கண்ணிற்கு அந்த ஒரு வீடு தெரிந்தது இதனைக் கேட்டதும் அந்த ஐவரும் மிகவும் அதிர்ச்சியாக அந்த வீட்டை பார்த்தபடி நின்றனர்.
இதன் முதல் பாகம் வேண்டும் என்றால் நீங்கள் காத்திருக்கவும்……