![](https://goldenfacts11.com/wp-content/uploads/2024/03/Picsart_24-03-23_07-27-13-195-1024x694.jpg)
ஒரு வயதான முதியவர் வயிற்றுப் பசிக்காக ஒரு ஹோட்டலில் உணவு உண்ண செல்கிறார். அங்கு உள்ள உணவு பரிமாறுபவர்கள் அந்த முதியவரை மேலும் கீழுமாக பார்த்தனர்.
ஒரு உணவு பரிமாறுபவர் அந்த முதியவரிடம் ஐயா உங்களுக்கு சாப்பிட என்ன வேண்டுமென்று கேட்டார்.
அதற்கு அந்த முதியவர் விலை குறைவாக என்ன உணவு உள்ளது என்று கேட்டார்.
இதைக் கேட்டதும் உணவு பரிமாறுபவர் தயிர் சாதம் பத்து ரூபாய் தக்காளி சாதம் 15 ரூபாய் என்று கூறினார்.
அந்த முதியவர் தக்காளி சாதம் அதிகம் ரூபாய் உள்ளது என்னிடம் 15 ரூபாய் மட்டும் தான் உள்ளது என்று கூறினார்.
அதற்கு அந்த உணவு பரிமாறுபவர் மிகவும் கஞ்சத்தனம் உள்ள முதியவர் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார்
அந்த முதியவர் எனக்கு தயிர் சாதம் மட்டும் போதும் என்று கூறினார்.
அந்த உணவு பரிமாறுபவர் அந்த முதியவருக்கு தயிர் சாதம் மட்டும் கொடுத்துவிட்டு மட்டும் சென்றார்.
சிறிது நேரம் கழித்து அந்த முதியவர் அந்த உணவை உட்கொண்ட பிறகு அந்த உணவு பரிமாறுபவரை கூப்பிட்டு அவரிடம் 15 ரூபாய் கொடுத்தார்.
இதனைப் பார்த்த உணவு பரிமாறுபவர் ஐயா நீங்கள் சாப்பிட்டது தயிர்சாதம் பத்து ரூபாய் மட்டும் தான் என்று கூறினார்.
அதற்கு அந்த முதியவர் எனக்கு அது தெரியும் நீ எனக்கு பரிமாறியதால் உனக்கு நான் ஏதாவது பரிசு அளிக்க வேண்டாமா அதனாலதான் இந்த ஐந்து ரூபாய் உனக்கு என்று கூறினார்.
இதனைக் கேட்ட இந்த உணவு பரிமாறுபவர் முதியவர் நினைத்தால் அந்த தக்காளி சாதத்தை சாப்பிட்டு இருக்கலாம் தமக்கு ஐந்து ரூபாய் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அவர் தயிர்சாதம் சாப்பிட்டு இருக்கிறார் என்று நினைத்தார்.
அந்த முதியவரிடம் இவர் மனதில் நினைத்ததை சொல்லி அவரிடம் மன்னிப்பு கேட்டார்.
அந்த முதியவர் பரவாயில்லப்பா அப்படி என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்றார்..
இந்த ஒரு உண்மை கதையை நீங்கள் படிக்கும் பொழுது உங்கள் மனதில் என்ன தோன்றியது என்பதை கமெண்டில் சொல்லவும்.