ஆயிரம் யானைகளைக் கொன்ற ஊமையன் கதை || The story of a cruel hunter

வணக்கம் நண்பர்களே நான் உங்கள் செல்வா, நம்ம இன்னைக்கு ரொம்ப வித்தியாசமான ஒரு கதையை தான் பார்க்க போறோம். இந்தக் கதை எங்க பாட்டிமா எனக்கு சொன்னது, இந்த ஒரு கதையை உங்களிடமும் பகிர்ந்து கொள்ளலாம் என்று ஆசைப்பட்டேன் வாங்க கதைக்குள்ள போலாம்.

ஒரு ஊருல வாய் பேச முடியாத ஒரு ஊமையன் ஒருத்தன் இருந்தான். எல்லோருமே இவனை ஊர்ல வாய் பேச முடியாதனால ஊமையன் அப்படித்தான் அழைப்பாங்க. இவன் வாய் பேச முடியாததால இவனை நீங்க சாதாரணமா எடை போட்டிட வேண்டாம்.

இந்த ஊமையன்கிட்ட ஒரு பெரிய திறமை ஒன்னு இருந்துச்சு அது என்னன்னா வேட்டையாடுவது சாதாரணமான மானு முயலு அப்படிங்கற அப்பாவியான விலங்குகள் இல்லாம ஒரு மதம்கொண்ட யானையவே சர்வ சாதாரணமாக வேட்டையாடுவான்.

இவன் எப்படி வேட்டையாடுவான் என்றால் யானையின் பின்னால் சென்று யானை திரும்பும் பொழுது யானையின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து சுடுவான். இப்படி இவன் ஏகப்பட்ட யானைகளை வேட்டையாடியுள்ளான்.

நம்ம ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்களே ஊமையன் சும்மா இருந்தாலும் அவன் கை சும்மா இருக்காதுன்னு. அது மாதிரி தன் இந்த ஊமையினும். எப்பவுமே இவ வாய் பேசாது இவன் துப்பாக்கி தான் பேசுவான் அப்படிங்கற மாதிரி இருப்பான்.

இவன் சின்ன வயசுல இருந்து இவங்க அப்பா கூட காட்டுக்கு சென்று விலங்குகளை வேட்டையாடியதால். இவனுக்கு இந்த வேட்டையாடுதல் தொழில் ரொம்பையும் புடிச்சு போனது அதனால எப்படியாவது நம்ம சாகறதுக்குள்ள ஆயிரம் யானைகளை கொள்ளணும் அப்படிங்கிற ஒரு ஆசைய மனசுக்குள்ள வச்சிருந்தான்.

அதை வாழ்க்கையில அவன் நினைச்ச மாதிரி ஏகப்பட்ட யானைகளை வேட்டையாடினான். ஒரு நாள் அவன் 999 யானைகளை வேட்டையாடினான் இன்று நம் ஒரு யானையை மட்டும் கொன்றால் நம் கனவு நினைவாகிவிடும் என்று நினைத்தான் அதனால் காட்டிற்கு ரொம்பையும் ஆசையாக யானையைத் தேடி அலைந்தான்.

அப்போது ஒரு யானை ஆற்றில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது இதை பார்த்ததும் அவனுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. இன்னைக்கு இந்த யானை தான் நமக்கு ஆயிரம் ஆவது யானை என்று நினைத்தான்.

யானையின் முதுகு பின்னால் சென்று யானை திரும்பும் வரை காத்திருந்தான் யானை திரும்பும்போது துப்பாக்கியை வைத்து யானையின் நெற்றியில் சுட்டான்.

சந்தோசமாக அவன் அந்த யானையை கொன்றுவிட்டு திரும்பும் பொழுது அவன் கண்ணில் ஒருவித பயம் தெரிந்தது ஏனென்றால் அவன் முன்னால் ஒரு யானை நெருக்கமாக நின்று கொண்டிருந்தது அவன் துப்பாக்கியை தூக்குவதற்குள் அந்த யானை அவனை தும்பிக்கையை வைத்து வளைத்து பிடித்து அவனை சரமாரியாக பக்கத்தில் இருந்த மரத்தில் அடித்து தூக்கி எறிந்தது.

எத்தனையோ யானையை இவன் கொன்று இருந்தாலும் கடைசியில் ஒரு யானையின் கையால் தான் இறந்து போனான். இதே போல் தான் நம் வாழ்வில் ஒரு தவறை மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருந்தால் ஒரு நாள் அந்த தவறை நம்மளை கொன்றுவிடும்.

Selva…✍️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top