ஒரு மேளத்தை சாப்பிட முயன்ற நரிக்கு நேர்ந்த கொடுமை| The sad story of the cunning fox

ஒரு ஊரில் ஒரு மலை இருந்தது. அந்த மலையின் அடிவாரத்தில் ஒரு கிராமம் அமைந்திருந்தது. அந்தக் கிராமத்தில் நிறைய ஏழை மக்கள் குடிசை போட்டு வாழ்ந்து வந்தனர்.

அடிக்கடி அந்த மலையில் இருந்து யானை நரி சிங்கம் என நிறைய விலங்குகள் கீழே இறங்கி தண்ணீர் குடிப்பதற்காக இரவு நேரங்களில் வரும். அதனால் மக்கள் அதிகம் இரவு நேரங்களில் நடமாட மாட்டார்கள். சில நேரம் ஆடு மாடு கோழி இதையெல்லாம் அடித்து சாப்பிட்டு விட்டு சென்றுவிடும்.

இதைக் கட்டுப்படுத்த ஊர் மக்கள் சேர்ந்து ஒரு யோசனை செய்தார்கள். விலங்குகள் கீழே இறங்கி வராமல் இருக்க அந்த காட்டுக்குள் ஒரு மரத்தின் மேல் ஒரு பெரிய முரசு ஒன்றை கட்டி தொங்க விட்டார்கள்.

காற்றடிக்கும் போது அந்த இலை தலை எல்லாம் முரசின் மேல் உரசும் போது சத்தம் வரும் அதைக் கேட்டு விலங்குகள் எல்லாம் பயந்து ஓடிவிடும். இது தெரியாமல் ஒரு நாள் ஒரு நரி அந்த பக்கம் வந்தது.

அதேபோல் அந்த சத்தம் வந்தது அதைக் கேட்டதும் நரி பயந்து ஓட்டம் பிடித்தது உச்சி மலையின் மேல் நின்று கொண்டு சுற்றும் மற்றும் பார்த்தது.. அந்த நரி நினைத்தது இந்த முரசுக்குள் ஏதோ ஒரு விலங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று. அதை எப்படியாவது அடித்துக் கொன்று விட்டால் நாம் அதிக நாள் வைத்து சாப்பிடலாம் என்று நினைத்தது.

அந்த நரி பக்கத்தில் செல்லும்போது அந்த சத்தம் கேட்கும் பயன் திரும்பவும் ஓடிவிடும். எல்லா நரிகளும்அதனிடம் கேட்டது எங்கு சென்று சென்று வருகிறாய் என்று அதற்கு அந்த நரி ஏதேனும் விலங்குகள் கிடைக்குமா என்று பார்க்க சென்று வருகிறேன் என்று பொய் சொல்லியது எப்படியாவது தான் மட்டும் தனியாக அடித்து சாப்பிட வேண்டும் என்று திட்டம் தீட்டியது.

ஒரு நாள் மரத்தின் மேல் ஏறி நின்று கொண்டு தைரியமாக அந்த முரசை கையால் அடித்து உடைக்க தொடங்கியது. அதால் முடியவில்லை அப்படி இருந்தும் கஷ்டப்பட்டு வாயாலும் கை கால்களாலும் பிடித்து கிழித்து எறிந்தது. கை கால் வாயெல்லாம் ரத்தம் கொட்டி சோர்ந்து போனது.

அதன் பின் அந்த முரசுக்குள் எட்டிப் பார்த்தது உள்ளே ஒன்றும் இல்லை வெறும் கூடு தான் இருந்தது. இதற்கு அவமானமாக ஆகிவிட்டது இப்படி ரத்தத்தோடு சென்றால் எல்லோரும் நம்மளை பார்த்து சிரிப்பார்களே என்று யோசித்தது.

பின்பு அந்த நரி இருப்பிடத்திற்குச் சென்றது எல்லா நரிகளும் ஓடி வந்து பதட்டத்துடன் என்னவென்று கேட்டது. அதற்கு அந்த நரி எனக்கும் ஒரு பெரிய விலங்குக்கும் சண்டை நடந்தது அந்த விலங்கை நான் அடித்து கொன்று விட்டேன் அதனால் எனக்கு ஏற்பட்ட காயம் தான் இது என்று பொய் சொல்லியது. அதன்பின் வலியால் துடிதுடித்துக் கொண்டிருந்தது அந்த நரி தான் மட்டும் தான் அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தால் இதுதான் தண்டனை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top