ஒரு மர்ம தொடர் வண்டி பாகம் 2| A Mystery Train Part 2

நம்ம இதுக்கு முன்னாடி பார்த்த கதைல ஒரு செய்தியாளர் அந்த மர்மத் தொடர்வண்டியை பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு அந்த செய்தியை எடுக்கப் போனவரு அவரே காணாம போயிட்டார செய்தியா வந்தாரு. நீங்க இந்த கதையின் இரண்டாம் பாகத்தை படிக்கிறீங்க அப்படின்னா முதல் பாகம் உள்ளது அதை படித்துவிட்டு நீங்கள் இந்த இரண்டாம் பாகத்தை படித்தால் உங்களுக்கு இந்த கதை முழுமையாக புரியும்.

அடுத்த ஒரு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய செய்தியாளர் வேலைக்கு சேருகிறார் அவர் இந்த ஒரு செய்தியை முதல் மறையாக படிக்கும் பொழுது இந்த செய்தியாளர் அப்படி என்னதான் தேடிப் போயிருப்பார் எப்படி காணாமல் போய் இருப்பார் என்று இவருக்கு பல யோசனைகள் வந்தது.

இவரும் அந்த செய்தியாளரைப் பற்றி நமக்கு தெரிந்து கொள்ளலாம் என்று ஆசைப்பட்டால் அப்போது இதைப்பற்றி அவங்க கம்பெனில பேசும் பொழுது அதை யாரும் அவ்வளவா பொருட்படுத்தவில்லை நீயும் இந்த வேலையை விட்டு வேகமாக காணாமல் போக போறியா அப்படின்னு நிறைய பேரு கேலி கிண்டலும் செஞ்சாங்க.

அதையெல்லாம் பொருட்படுத்தாத இவர் நம் அந்த இடத்திற்கு சென்று என்ன நடந்திருக்கும் என்பதை ஆராய நினைத்தார் அந்த செய்தியாளர் எப்படி எல்லாம் அந்த மர்ம தொடர்வண்டியை பற்றி தெரிந்து கொண்டாரோ அதேபோல் இவரும் படிப்படியாக ஒவ்வொரு செய்தியையும் சேகரிக்க ஆரம்பித்தார்.

அப்போது அந்த கிராமத்தில் வயதான தாத்தா ஒருவர் இருந்தார் அந்த தாத்தா இந்த செய்தியாளரிடம் தம்பி நீ தேடி வந்தது எல்லோர் கண்களில் தெரியும் தொடர் வண்டி அல்ல அது யாரை கொலை செய்ய நினைக்கிறதோ அவங்க கண்ணுக்கு மட்டும் தான் அந்த ஒரு தொடர் வண்டி தெரியும் என்று சொன்னார் இதைக் கேட்டதும் இந்த செய்தியாளருக்கு ஒன்றும் புரியவில்லை. இதனால் செய்தியாளர் கொஞ்சம் குழப்பத்தில் இருந்தார்.

அந்த செய்தியாளரின் மனதில் ஏகப்பட்ட கேள்விகளும் குழப்பங்களும் ஓடிக்கொண்டே இருந்தன இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் நாமளே அந்த ஒரு காட்டிற்குள் சென்றால்தான் இதற்கான விடையை தேட முடியும் என்று நினைத்தார். அவர் அந்தக் காட்டின் நடுவே போகும் தண்டவாளத்தில் நடந்து செல்ல ஆரம்பித்தார்

இவர் ரொம்ப தூரம் தண்டவாளத்தில் நடந்து நடந்து சென்று கொண்டிருந்தார் அப்பொழுது அவரை அறியாமலேயே அவர் உடம்பு புல்லரித்தது. சிறிது தூரத்திலிருந்து ஏதோ தொடர் வண்டி வருவது போல் இவருக்கு காதில் சத்தம் கேட்டது. அப்போதுதான் அவர் கண்ணில் ஒருவித பயம் தோன்றியது கை கால்கள் நடுங்கத் தொடங்கின. காணாமல் போன செய்தியாளருக்கு எப்படி இந்த தொடர்வண்டி தெரிந்ததோ அதேபோல் இவருக்கும் அந்த தொடர்வண்டி தெரிந்தது.

எந்த ஒரு ஆளில்லாமல் அந்த மர்ம தொடர் அந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது அதை பார்த்ததும் இவர் கண்ணில் ஒருவித பயமும் கை கால் நடுக்கத்துடன் அந்த ஒரு ரயிலில் அவர் ஏறினார் இவராவது இந்த மர்ம தொடர்வண்டியை பற்றி தெரிந்து கொள்வாரா இல்ல இவரும் செய்தியாக வருவாரா என்று நம் பார்க்கலாம்.

அந்த தொடர்வண்டிக்குள் யாராவது இருப்பார்களா என்று அவர் அந்த தொடர் தேடிப் பார்த்தார் அவருக்கு யாரும் இல்லாதது போல் தான் இருந்தது ஆனால் அந்த ஒரு தொடர்வண்டியில் மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் ஏராளமானது கிடந்தது அதையெல்லாம் அவர் கேமராவால் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அந்தத் தொடர் வண்டி அடர்ந்த இருட்டுக்குள் போகத் தொடங்கியது அந்த தொடர் வண்டியில் எந்த ஒரு ஒளியும் இல்லாததால் எதிரே என்ன இருக்கு என்பது கூட தெரியாமல் அவர் பயத்தில் அந்தத் தொடர் வண்டியின் இருக்கைக்கு அடியில் ஒளிந்து கொண்டார். அப்போது தூரத்தில் ஒரு சிவப்பு ஒளி தெரிந்தது.

அந்த ஒளியில் ஏதேதோ மனிதர்கள் நிற்பது போல் இவருக்கு தெரிந்தது ஆனால் தொடர்வண்டி கிட்ட நெருங்க நெருங்க அவர்கள் மனிதர்கள் அல்ல மனிதர்கள் போல் இருக்கும் நரகவாசிகள் அவர்கள் எப்படி இருந்தார்கள் என்றால் தலையில் இரண்டு கொம்புகளும் அவர்களின் பின்னால் வாழும் இருந்தது அவர்கள் ரொம்ப சிவப்பாக இருந்தார்கள்.

இவர்களைப் பார்க்கும் பொழுது எனக்கு சிறுவயதில் எங்கள் பாட்டி சொன்ன கதை ஞாபகம் வந்தது இந்த பூமிக்கு அடியில் நரகவாசிகள் இருக்கிறார்கள் அவர்கள் மனிதர்களுக்கு தண்டனை கொடுப்பார்கள் என்று கூறுவார். இதைப் பார்த்ததும் எனக்கு பாட்டி சொன்னது கதையா இருக்குமா இல்ல அவர்களுக்கு இதை யார் சொல்லி இருப்பா என்று ஒரு கேள்வி எழும்பியது. அந்த செய்தியாளர் பார்த்தது எல்லாத்தையும் ஒரு புத்தகத்தில் எழுதினார்.

அப்புறம் அதை சில புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். இந்த புத்தகத்தை நீங்கள் இந்த தொடர்வண்டியில் படித்தால் இந்த புத்தகத்தை எடுத்துக்கொண்டு உடனே இந்த தொடர் வண்டியில் இருந்து தப்பித்து விடுங்கள் நீங்கள் அந்த அடர்ந்த இருட்டுக்குள் சென்று விட்டால் திருப்பி உங்களால் இந்த பூமிக்கு வர இயலாது என்று எழுதி இருந்தால்

எப்போதும் போல் நம் மர்ம கதைகளில் ஒரு திருப்பம் இருக்கும் அதே போல் தான் இந்த கதையிலும் ஒரு திருப்பம் அந்தப் புதிய செய்தியாளர் அடர்ந்த இருட்டுக்குள் செல்வதற்குள் இந்த பழைய செய்தியாளர் எழுதிய புத்தகத்தை முழுவதையும் வாசித்து விட்டார் நீங்க கேட்டது எல்லாம் இந்த புதிதாக வந்த செய்தியாளர் ஒரு புத்தகத்தில் படித்தது இந்த புத்தகத்தை எழுதியது வேறு யாரும் இல்லை அந்த பழைய செய்தியாளர் தான்

தூரத்தில் ஒரு அடர்ந்த இருட்டு தெரியும் பொழுது இவர் அந்த மர்ம தொடர் வண்டியிலிருந்து கீழே குதித்து விட்டார். இவர் தேடிய எல்லா கேள்விகளுக்கும் இந்த புத்தகத்தில் அந்த பழைய செய்தியாளர் எல்லா விடையும் கொடுத்து சென்று இருக்கிறார்.

இந்தக் கதையின் தொடக்கத்தில் எவ்வளவு மர்மம் இருந்தாலும் இந்த இரண்டாம் பாகத்தில் அதற்கான விடைகள் கிடைத்திருக்கும் ஆனால் அந்த பழைய செய்தியாளர் என்ன ஆயிட்டார் என்று யாருக்கும் தெரியாது. அந்த புதிய செய்தியாளரும் இதைப்பற்றி யாருக்கும் தெரிவிக்காமல் தனக்குள் வைத்துக் கொண்டார்……

மீண்டும் நான் ஒரு மர்ம கதையுடன் உங்களை சந்திக்கிறேன்…..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top