ஒரு ஊரில் ஒரு விறகு வெட்டி தனியாக வாழ்ந்து வந்தான். அவனுக்கு குடும்பம் என்று ஒன்றும் இல்லை. அதனால் அவனுக்கு அதிகம் சம்பாதிக்கணும் என்ற எண்ணமும் இல்லை.
அன்றாடம் விறகுகள் வெட்டி பக்கத்து ஊரில் கொண்டு விற்று அதை வைத்து சாப்பிட்டு வந்தான் அவன் தினமும் விறகும் வெட்டும் போது அங்கு ஒரு குரங்கு அவனிடம் எப்போதும் சேட்டை செய்து கொண்டே இருந்தது.
அந்தக் குரங்கு ஒரு சில நேரம் கோடாரியை தூக்கிக் கொண்டு மரத்தில் வைத்துக் கொள்ளும் ஒரு சில நேரம் அருவாளை மறைத்து வைத்து விடும் இப்படி சின்ன சின்ன சேட்டைகள் செய்து வந்தது.
அவனுக்கு அந்த குரங்கின் மீது அதிக கோபம் இருந்தது. என்றாவது ஒருநாள் என்னிடம் சிக்குவாய் அன்றுஉன்னை பார்த்துக் கொள்கிறேன் என்று வெறியோடு காத்திருந்தான். ஒரு நாள் அந்த விறகு வெட்டி பெரிய மரம் ஒன்றை உடைக்க தொடங்கினான். அதை உடைக்கும் போது நடுவே ஒரு ஆப்பு ஒன்று வைத்தான்.
அந்த ஆப்பை எடுத்தால் மறுபடியும் அந்த மரம் ஒன்றாக ஒட்டிக் கொள்ளும் அதனால் அந்த ஆப்பு நடுவில் இருந்தது அவனுக்கு பசிக்க ஆரம்பித்து விட்டது அதை அப்படியே வைத்து விட்டு சாப்பிட போய் விட்டான். அன்றும் அந்த குரங்கு அங்கு வந்தது அந்த மரக்கட்டையின் மேல் உட்கார்ந்து கொண்டு அந்த ஆப்பை புடுங்க தொடங்கியது
அதன் இடைவெளியில் இதன் வால் சிக்கி இருந்ததை கவனிக்கவில்லை. எப்படியோ ஆட்டி ஆட்டி அந்த ஆப்பை புடுங்கி விட்டது. ஆப்பு வெளியே வந்ததும் குரங்கின் வால் உள்ளே சிக்கிக் கொண்டது அதற்கு வழி பொறுக்காமல் கிச்சுகிச்சு என்று கத்தியது.
அங்கும் எங்கும் துள்ளியது அப்போது சத்தம் கேட்டு அந்த மரவெட்டி ஓடி வந்தான். அதற்குள் இந்த குரங்கு பதட்டத்தில் படக்கின்ற வாலை புடிங்கி கொண்டு ஓடிவிட்டது மரத்தில் நின்று கொண்டு திரும்பி பார்க்கும் போது அதன் வால் காணவில்லை அது அழுது கொண்டே உட்கார்ந்து இருந்தது.
அந்த விறகு வெட்டி குரங்கை பார்த்து இனி என்னிடம் வைத்துக் கொள்ளாதே இன்று வாளோடு போய்விட்டது இனி என்னிடம் சேட்டை செய்தால் உன் தலையை போய்விடும் ஜாக்கிரதை என்றான் விறகு வெட்டி.அதிலிருந்து அந்த குரங்கு அந்தப் பக்கமே வருவதில்லை