ஒரு காட்டில் மல்பெரி என்னும் பழம் பழுக்கும் மரம் ஒன்று இருந்தது.அந்த மரம் பெரிய ஆலமரம் போல் அகன்று இருக்கும். அந்த வழியாக செல்லும் மக்கள் அனைவரும் அந்த மரத்தின் அடியில் களைப்பாரி செல்வார்கள்.
அந்த மரத்தில் இருந்து விழும் பழம் ரொம்ப சுவையாக இருக்கும். அந்தப் பழங்களை எடுத்து சாப்பிட்டு விட்டு பசியாறிச் செல்வார்கள். அந்தப் பழம் ஒரு கோழிக்குண்டு அளவு தான் சிவப்பாக இருக்கும். ஒரு நாள் அந்த ஊர் பெரியவர் அந்த மரத்தின் அடியில் வந்து களைப்பாரிக் கொண்டு இருந்தார். அப்போது பக்கத்து ஊரிலிருந்து ஒரு வழிப்போக்கன் அந்த வழியாக வந்து கொண்டிருந்தான்.
வெயில் அதிகமாக அடித்தது. வெயில் தாங்காமல் அந்த மரத்தின் அடியில் வந்து அமர்ந்தான். அந்த மரத்தில் இருந்த பழங்களை எடுத்து சாப்பிட்டான் .சற்று நேரத்தில் அவனுக்கு தூக்கம் கண்ணை கட்டியது.
அதனால் அந்த மரத்தின் வேரில் தலை வைத்து அப்படியே கண்ணயர்ந்து விட்டான். அந்த மரத்தில் நிறைய பறவைகள் கூடு கட்டி இருந்தது. இந்தப் பறவைகளின் சத்தத்தில் வழிப்போக்கன் கண்விழித்து விட்டான்.
சிறிது நேரம் அந்த மரத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே படுத்திருந்தான். இதை அந்த மரத்தின் அடியில் கலப்பாரிக் கொண்டு இருந்த பெரியவர் கவனித்தார். என்ன தம்பி ரொம்ப நேரமாக மேலே பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டார் அதற்கு அந்த வழிப்போக்கன் கடவுளுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை இவ்வளவு பெரிய மரத்தில் ஒரு கோழி குண்டை விட சிறு பழங்களை படைத்திருக்கிறான் இவ்வளவு பெரிய மரத்தில் பெரிய பெரிய பழங்களை படைத்திருக்கலாம் ஒரு பழம் சாப்பிட்டாலும் வயிறு நிறைந்து விடும் என்றான்.
அதற்கு அந்த பெரியவர் பொன் சிரிப்பாக சிரித்தார். அதற்கு அந்த வழிப்போக்கன் என்ன பெரியவரே நான் சொன்னதுக்கு சிரிக்கிறீர்கள் என்றான் . அவர் பதில் ஒன்றும் கூறாமல் அமைதியாக இருந்தார். சிறிது நேரத்தில் சலசலவென்று ஒரு காற்று அடித்தது அந்த காற்றில் பழங்கள் எல்லாம் பொது பொதுவென்று விழுந்தது. அதில் சில பழங்கள் அந்த வலிப்போக்கனின் தலையில் விழுந்தது. அதையெல்லாம் தட்டிவிட்டு அந்த வழிப்போக்கன் எழுந்து நின்றான்.
அப்போது அந்த பெரியவர் கூறினார் கடவுளுக்கு அறிவில்லை என்று சொன்னாயே அவர் அறிவோடு இந்த மரத்தில் பெரிய பழங்கள் இருந்திருந்தால் இப்போது உன் தலையில் சிறு சிறு பழங்கள் விழுந்ததல்லவா அது பெரிய பெரிய பழங்களாக இருந்திருந்தால் உன் நிலை என்னவாகும் உன் தலை வெடித்து சிதறி இருக்கும் என்றார். அதன் பின் அந்த வழிப்போக்கன் தன் தவறை உணர்ந்து நான் சொன்னது தவறு தான் ஐயா என்னை மன்னித்து விடுங்கள் என்றான்.