தங்க முட்டையும் தள்ளாடும் கிழவியும் கதை | The little boy and grandma the story Tamil

வணக்கம் நண்பர்களே இந்த ஒரு கதையில் நம் வித்தியாசமான நீங்கள் இதுவரை எதிர்பார்க்காத ஒரு புதுவித கற்பனையுடன் உருவாக்கப்பட்ட கதையை தான் இந்த பத்தியில் நம் காண உள்ளோம்

ஒரு அழகிய காட்டுப்பகுதியில் ஒரு தனிமையில் வாழும் ஒரு பாட்டியின் கதையை தான் இந்த ஒரு கதையில் பார்க்க போகிறோம் அந்த ஒரு பாட்டிக்கு யாருமே இல்லை அந்த ஒரு பாட்டி காட்டிற்கு சென்று விறகுகள் வெட்டிக்கொண்டு அதை சந்தையில் விற்று அதில் வரும் காசை வைத்து அன்றாட வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பாட்டி.

எப்பவும் போல் அந்த ஒரு பாட்டி காட்டிற்கு சென்று விறகுகளை வெட்டிக் கொண்டிருக்கும் பொழுது அவர் கண்ணில் ஒருவித ஒளி அவர் கண்ணை கூச செய்தது என்னது என்று தெரியாமல் அந்த பாட்டி அந்த ஒளி மின்னும் இடத்தில் போய் பார்த்தார் அப்பொழுது அவர் அங்கு ஒரு மஞ்சள் கலரில் ஒரு தங்க முட்டையை எடுத்துக்கொண்டு இதை சாப்பிடலாம் என்று அதை வீட்டிற்கு கொண்டு சென்றார்.

அந்த ஒரு பாட்டி அன்று இரவு நேரத்தில் அவர் சமைக்க அந்த ஒரு முட்டையை எடுத்து உடைக்க ஆரம்பித்தார் ஆரம்பத்தில் அந்த ஒரு முட்டையை உடைப்பது கடினமாக இருந்தது அந்த ஒரு முட்டையில் இருந்து ஒரு வித சத்தமும் அசைவும் ஏற்பட்டதால் பாட்டிக்கு பயம் ஏற்பட்டது அந்த முட்டையை அவர் தட்டில் வைத்து விட்டார்.

சிறிது நேரத்தில் அந்த முட்டை உடைந்து அதிலிருந்து ஒரு குள்ளச் சிறுவன் வெளியே வந்தான் அந்தப் பாட்டி அந்த குள்ள சிறுவனை பார்த்ததும் பெரும் அதிர்ச்சி அடைந்தார் யாரப்பா நீ இதிலிருந்து வருகிறாய் என்று கேட்டார் அந்த ஒரு சிறுவன் பாட்டி நான் கடவுளிடம் இருந்து வருகிறேன் என்றான் அந்தப் பாட்டி இவ்வளவு சிறியவனாக இருக்கிறாயே என்னால் எப்படி உன்னை பார்த்துக் கொள்ள முடியும் என்று கேட்டால்.

அதற்கு அந்தச் சிறுவன் பாட்டி நான் கடவுளிடமிருந்து வருகிறேன் நீ என்னை பார்த்துக் கொள்ள வேண்டாம் நான் உன்னை பார்த்து கொள்வேன் என்று கூறினான் அந்த ஒரு பாட்டி அதனைக் கேட்டதும் சிரித்தாள். சரிப்பா நீ எனக்கு என்ன உதவி செய்வாய் என்று கேட்டால்

அந்தக் குள்ள சிறுவன் பாட்டி நான் உங்களுக்கு நீங்கள் செய்யும் அன்றாட வேலையை நானும் செய்து கொடுப்பேன் என்று கூறினான் அந்தப் பாட்டி அவனை நீ காட்டிற்கு சென்று விரகுகளை வெட்டிக்கொண்டு அதனை கடைவீதியில் விற்றுவிட்டு வருவாயா என்று கேட்டால்.

அதற்கு அந்த ஒரு குள்ள சிறுவன் பாட்டி என்னை வேற யாரும் பார்த்து விட்டால் அவர்கள் என்னை ஏதும் செய்து விடுவார்கள் அதனால் நீங்கள் விரகுகளை விற்று விடுங்கள் நான் உங்களுக்காக விறகுகளை வெட்டிக்கொண்டு வருகிறேன்.

அந்த ஒரு குள்ள சிறுவனும் காட்டிற்கு சென்று விறகுகளை வெட்டிக்கொண்டு அதனை எடுத்துக்கொண்டு பாட்டியின் வீட்டிற்கு சென்றான் இதை பார்த்ததும் பாட்டி பரவாயில்லையே நன்றாக விறகுகளை வெட்டி அதை கட்டிக் கொண்டு வந்து உள்ளாயே என்று பாராட்டினார்.

அந்த ஒரு குள்ள சிறுவன் அந்தப் பாட்டிற்கு நன்கு உதவிகள் செய்து கொண்டு அந்தப் பாட்டியும் அந்த குள்ள சிறுவனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top