ஒரு ஊரில் ஒரு பெரிய கிணறு இருந்தது. அந்த கிணற்றில் நிறைய தவளைகள் குடும்பம் குடும்பமாக வாழ்ந்து வந்தது. அதில் வாழும் எல்லாத் தவளைகளும் பெருசு பெருசா இருக்கும்.
ஒரு குடும்பத்தில் வாழும் தவளை மட்டும் ரொம்ப சிறிதாக மெலிந்து இருந்தது. மற்ற தவளைகள் எல்லாம் அந்த கிணற்றில் கிடைக்கும் உணவுகளை அடித்து பிடித்து எப்படியாவது பகிர்ந்து சாப்பிட்டுக் கொள்ளும். இந்த தவளையால் அந்தத் தவளை எங்களிடம் சண்டை போட முடியாமல் இந்த மெலிந்த தவளையும் அதன் பெண் தவளையும் உணவு இல்லாமல் இருந்தது.
அப்படி இருக்க ஒரு நாள் அந்த தவளை கிணற்றை விட்டு வெளியேறியது. இப்போது வழியில் ஒரு பாம்பை பார்த்தது. உடனே தவளைக்கு ஒரு யோசனை வந்தது இந்தப் பாம்பிடம் நாம் ஒரு உதவி கேட்கலாமா என்று நினைத்தது. சரி கேட்டு தான் பார்ப்போம் என்று அந்த பாம்பின் அருகே தவளை சென்றது.
உடனே பாம்பு அந்த தவளையை பிடிக்க பாய்ந்தது. உடனே தவளை பாம்பை பார்த்து நண்பா என்னை பிடித்து விடாதே நான் உனக்கு ஒரு வழியை சொல்கிறேன் அதன்படி செய்தால் உனக்கு நிறைய தீனிகள் கிடைக்கும் என்னுடன் வருகிறாயா என்று கேட்டது. சற்று பாம்பு யோசித்தது. சரி என்ன வழி என்று பாம்பு தவளையிடம் கேட்டது.
தவளை பாம்புடன் கூடியது நான் ஒரு கிணற்றில் என் மனைவியுடன் வாழுகிறேன். அங்கு என் சொந்த பந்தங்கள் எல்லாம் நிறைய இருக்கின்றன எனக்கு ரொம்ப தொல்லை கொடுக்கிறது எனவே நீ அங்கு வந்தால் அதை எல்லாம் பிடித்து சாப்பிட்டு விடலாம் எப்படியும் ஒரு மாதத்திற்கு உனக்கு உணவு பிரச்சனை இருக்காது என்று பாம்பிடம் தவளை கூறியது. சரி என்று பாம்பு ஒத்துக் கொண்டது.
தவளை பாம்பை அந்தக் கிணற்றுக்கு அழைத்துச் சென்றது. ஒரு ஓரத்தில் அந்த பாம்பு தங்கிக் கொண்டது. மற்ற தவளைகள் அந்த பாம்பின் அருகில் செல்லும்போதெல்லாம் அதைப் பிடித்து சாப்பிட்டுக் கொண்டே இருந்தது. ஒரு மாதத்திற்குள் அந்த கிணற்றில் இருந்த அனைத்து தவளைகளையும் பிடித்து சாப்பிட்டு விட்டது. அதன் பின் அந்தப் பாம்பிற்கு சாப்பிட உணவு ஏதும் இல்லாததால் இந்த தவளையிடம் எனக்கு ஏதேனும் உணவு வேண்டும் இல்லை என்றால் உன் மனைவியை நான் பிடித்து சாப்பிட்டு விடுவேன் என்றுமிரட்டியது.
இந்தத் தவளை பாம்பிற்கு பயந்து கிணற்றுக்கு வெளியில் சென்று அன்றாடம் புழு பூச்சிகளை பிடித்துக் கொண்டு பாம்பிடம் கொடுத்தது. இந்த சமயத்தில் அந்த பெண் தவளைக்கு இரண்டு குட்டி தவளை பிறந்தது. அதைப் பார்த்த பாம்பிற்கு இந்த குட்டி தவளை எப்படியாவது சாப்பிட்டு விட வேண்டும் எண்ணம் தோன்றியது. ஒரு நாள் ஆண் தவளை வெளியில் சென்று பாம்புக்கு இறைத் தேடியது. இறைஏதும் கிடைக்காமல் தவளை மட்டும் தனியே வந்தது . பாம்பிடம் சென்று இன்று ஏதும் இறை எனக்கு சிக்கவில்லை அதனால் இன்று ஒரு நாள் பொறுத்துக்கொள் நாளை நான் எப்படியாவது உனக்கு இதைத் தேடிக் கொண்டு வந்து தருகிறேன் என்றது.
அதற்குப் பாம்பு சரி பரவாயில்லை நான் பார்த்துக் கொள்ளுகிறேன் என்று சொல்லிவிட்டு பொந்துக்குள் மறைந்தது. தவளை அதன் இருப்பிடத்திற்குள்நுழைந்தது. பெண் தவளை அழுது கொண்டு இருந்தது. அதைப் பார்த்ததும் ஆண் தவளை ஏன் அழுகிறாய் என்று கேட்டது. நம் குழந்தைகள் இரண்டையும் அந்த பாம்பு சாப்பிட்டு விட்டது என்று கதறி அழுதது. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றது. மறுநாள் இந்த பாம்பிடம் இருந்து நம் மனைவியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று திட்டம் தீட்டியது.
பாம்பிடம் தவளை சென்று இன்று எனக்கு உடல்நிலை சரியில்லை அதனால் என் மனைவி தான் உனக்கு இறை தேட வெளியில் செல்கிறாள் என்று சொன்னது. யார் சென்றாலும் எனக்கு உணவு வந்தால் போதும் என்று பாம்பு கூறியது. பெண் தவளையை வெளியே அனுப்பி வைத்தது. நெடுநேரம் ஆகியும் பெண் தவளை வரவில்லை. பாம்பு ஆண் தவளிடம் ஏன் இன்னும் உன் மனைவி வரவில்லை என்று கேட்டது. உடனே அந்த தவளை நான் போய் என் மனைவியை தேடிக் கொண்டு வருகிறேன்
அப்படியே உனக்கும் உணவு கொண்டு வருகிறேன் என்று தவளை கூறியது. சிறிதும் யோசிக்காமல் பாம்பு சரி போய் வா என்று அனுப்பி வைத்தது. வெளியில் சென்ற தவளை மூன்று நான்கு நாள் ஆகியும் திரும்பவில்லை. பாம்புக்கு உணவு ஏதும் இல்லாததால் மயங்கும் நிலையில் இருந்தது. அங்கு ஒரு பல்லி வருவதை பாம்பு கண்டது. அந்தப் பல்லியிடம் இங்கு வாழும் தவளை வெளியில் சென்று நான்கு நாட்கள் ஆகிவிட்டது.
இன்னும் ஏன் வரவில்லை என்று தெரிந்து கொண்டு வருவாயா என்று கேட்டது. சரி என்று பல்லி கிளம்பி விட்டது. சற்று நேரத்தில் பள்ளி கிணற்றுக்குள் வந்தது . பல்லியிடம் விவரம் கேட்டது. அதற்கு பள்ளி கூறியது நீ தவளைக்கு துரோகம் பண்ணி விட்டாயா அதன் குழந்தைகளெல்லாம் தின்று விட்டாயா அதனால் இங்கிருந்து தப்பித்தால் போதும் என்று தந்திரமாக இரண்டு பேரும் தப்பித்து விட்டார்களாம் இனி உன்னை பார்க்கவே வரமாட்டார்களாம் தவளைக்கு நல்ல பாடம் கற்பித்து விட்டாயாம் உனக்கு நன்றி கூறச் சொல்லியது என்று பல்லி கூறியது.