ஒரு பெரிய காடு ஒன்று இருந்தது அந்த காட்டில் நிறைய யானைகள் வாழ்ந்து வந்தது. அந்த யானைகளின் வயதில் மூத்த யானை தான் ராஜாவாக வாழ்ந்துவந்தது. அந்த யானையின் பெயர் தந்தன்.
அந்தப் காட்டில் மழை ஏதும் பெய்யாமல் இருந்ததால் மரங்கள் எல்லாம் வாடி நீர் வளங்கள் எல்லாம் வற்றி விட்டன. யானைகள் எல்லாம் என்ன செய்வதென்று அறியாமல் தவித்தன. உடனே எல்லா யானைகளும் நமது ராஜாவிடம் சென்று என்ன செய்யலாம் என்று யோசனை கேட்போம் என்று புறப்பட்டன. தத்தன் எனும் ராஜா யானையிடம் எல்லா யானைகளும் முறையிட்டன இங்கு நீர் நிலைகள் எல்லாம் வற்றி மரங்கள் எல்லாம் வாடி விட்டன என்ன செய்யலாம் என்று கேட்டனர்.
அதற்கு ராஜா யானை நாம் இங்கிருந்து ஐந்து நாள் பயணம் செய்தால் பாதாள கங்கை வரும் அங்கு எப்போதுமே நீர் வற்றவே வற்றாது எல்லோரும் அங்கு சென்று விடுவோமா என்றது. உடனே எல்லா யானைகளும் சரி என்று புறப்பட்டன. ஐந்து நாள் பயணத்திற்கு பின் அந்த பாதாள கங்கையை அடைந்தது.
நீர் நிலையை கண்டதும் எல்லா யானைகளுக்கும் சந்தோசம் தாங்க முடியவில்லை தண்ணீரில் இறங்கி அங்கும் எங்கும் ஓடிக்கொண்டு சந்தோசமாக ஒன்றோடு ஒன்று விளையாடிக் கொண்டு குளித்தது. நெடு நேரத்திற்குப் பிறகு ஒவ்வொன்றாக கரை ஏற துவங்கியது. அந்தக் கரையில் இருக்கும் மரப்பொந்துகளுக்குள் நிறைய முயல்கள் வாழ்ந்து கொண்டிருந்தது. அதை கவனிக்காத யானைகள் மட மட வென்று மிதித்துச் சென்றது. அதில் நிறைய முயல்கள் இறந்து விட்டது ஒன்று இரண்டு முயல்கள் கால் ஒடிந்தது மற்ற முயல்கள் ஓரளவுக்கு தப்பித்தது.
நாம நிம்மதியாக இங்கு வாழ்ந்து கொண்டிருந்தோம் எங்கிருந்து இந்த யானை கூட்டம் வந்ததோ தெரியவில்லை நம் இனத்தில் பாதியை அழித்து விட்டது இப்படியே தினமும் இங்கு வந்து சென்றால் நாம் அனைவரும் இறந்து விடுவோம் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று முயல்கள்திட்டம் தீட்டியது. அதில் இருந்த ஒரு முயல் கூறியது நான் ஒரு வழி சொல்லுகிறேன் அதன்படி செய்தால் நாம் யானைகளை இங்கு வரவிடாமல் தடுத்து விடலாம் என்றது. எல்லா முயல்களும் சரி என்ன வழி என்று சொல் என்றது.
நம் கூட்டத்தில் யார் பயமில்லாமல் இருக்கிறார்களோ அவர்களின் ஒருவன் அந்த யானையை பார்த்து நான் சொல்லும் விஷயத்தை சொல்ல வேண்டும் என்றது. அந்தக் கூட்டத்தில் நெட்டை காரன் என்னும் ஒரு முயல் இருந்தது அந்த முயல் நான் செல்கிறேன் என்னிடம் கூறு என்றது. அந்த முயலிடம் விசயத்தை கூறியது. சரி என்று நெட்டை காரன் முயல் புறப்பட்டது. அந்த யானைகள் இருக்கும் கூட்டத்தில் அருகில் ஒரு பெரிய கல் ஒன்று இருந்தது அந்த கல்லின் மீது அமர்ந்து கொண்டது அந்த முயல்.
யானைகளைப் பார்த்து அடேய் அறிவு கெட்ட மிருகங்களா யாரைக் கேட்டுடா இந்த காட்டுக்குள் வந்தீர்கள் என்று கேட்டது. அந்தக் குரலை கேட்டதும் யானைகள் எல்லாம் பயந்து எழுந்தது. இந்த முயலை பார்த்ததும் இதுவா அப்படி கத்தியது என்று ஆச்சரியமாக பார்த்தது. அதில் ஒரு யானை முயலைப் பார்த்து யாருக்குடா அறிவு இல்லை என்கிறாய் என் பக்கத்தில் வந்தாய் என்றால் என் காலில் உன்னை வைத்து நசுக்கி விடுவேன் என்றது. என்னய்யா நசுக்கி விடுவேன் என்கிறாய் உங்கள் இனத்தை அழிக்க தான் எங்கள் சந்திரகாந்தன் என்னும் ராஜா என்னை அனுப்பி வைத்திருக்கிறார் மரியாதையாக இங்கிருந்து அனைவரும் ஓடிவிடுங்கள் இல்லை என்றால் அநியாயமாக உயிரை இழந்து விடுவீர்கள் என்றது.
அதற்கு அந்த ராஜா யானை உங்கள் ராஜா சந்திர காந்தனை நான் சந்தித்து விட்டு நாங்கள் இந்த காட்டை விட்டு கிளம்புகிறோம் எங்களை அங்கே கூட்டி போ என்றது ராஜா யானை. உடனே முயல் நான் உன்னை எங்கள் ராஜாவிடம் கூட்டிச் சென்றால் இங்கிருந்து சென்று விடுவாயா என்றது. யானை சரி என்றது. இன்று இரவு தான் சந்திரகாந்தன் எங்களை பார்க்க வருவார் கங்கைக்குள் தியானம் செய்து கொண்டு இருப்பார் அப்போது அவர் தியானத்தை யாரும் கலைத்து விடக்கூடாது அப்படி கலைத்து விட்டால் அவர் அனைவரையும் கொன்று விடுவார், அதனால் நீங்கள் கங்கைக்கு அமைதியாக வந்து பார்த்து விட்டு செல்லுங்கள் என்றது.
யானைகள் எல்லாம் பேசிக்கொண்டது யாராயிருந்தாலும் நம்மளை விடவா பெரிதாக இருப்பார்கள் நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அதை கொன்று விடுவோம் மற்ற முயல்களை எல்லாம் துரத்தி விடுவோம் என்று திட்டத்தோடு சென்றது. யானைகள் எல்லாம் கரைக்கு இந்த புறமும் முயல்கள் எல்லாம் கரைக்க அந்தப் புறமும் நின்று கொண்டது. அப்போது ராஜா யானை கேட்டது எங்கே உன் சந்திர காந்தன் பார்க்க வேண்டும் என்றது . அதற்கு அந்த நெட்டைக்காரன் முயல் அமைதியாக பேசுங்கள் தவத்தில் இருந்து சந்திரகாந்தன் கலைந்து விடுவார் அதன் பின் உங்கள் உயிருக்கு நாங்கள் பொறுப்பல்ல என்றது.
அதன்பின் முயல் யானையைப் பார்த்து கங்கையை நன்றாக உற்றுப் பார் அதில் தான் என் சந்திரகாந்தன் இருக்கிறார் என்றது. ஒரு யானை மட்டும் அருகில் சென்று உற்றுப் பார்த்தது. அதில் வட்டமாக சந்திரன் தெரிந்தது. அதைப் பார்த்ததும் அந்த யானைக்கு ஒன்றும் புரியவில்லை வாழும் இல்லை தலையும் இல்லை இது என்ன உருவம் என்று யோசித்தது. நீர் அசையும் போது அந்த சந்திரனும் அசைந்தது. அதைப் பார்த்ததும் அந்த யானைக்கு சிறிது பயம் ஏற்பட்டது ஒரு அடி பின்னால் சென்றது. அதைப் பார்த்ததும் எல்லா யானைகளும் அருகில் வந்து உற்று பார்த்துக் கொண்டிருந்தது.
அந்தக் கரையில் அமர்ந்திருந்த முயல்கள் ஒரு கல்லை எடுத்து தண்ணீருக்குள் எரிந்தது. தண்ணீர் களைந்ததும் அந்த நிலவும் கலைந்தது அந்த வேலையில் முயல்கள் அய்யய்யோ சந்திரகாந்தன் தவத்தை கலைத்து விட்டீர்கள் ஓடிவிடுங்கள் இல்லையென்றால் அது அனைவரையும் கொன்று விடும் என்று கத்திக் கொண்டே முயல் ஓடியது. இதைப் பார்த்ததும் யானைகள் பயத்தில் தலை தெரிக்க ஓடி வெகு தூரம் சென்றது. அதன் பிறகு முயல்கள் நிம்மதியாக அந்த காட்டில் வாழ்ந்து வந்தது.