இந்த ஒரு கதையை படிக்கும் பார்வையாளர்களுக்கு எனது மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் இந்த ஒரு கதை கடவுளையும் குறிக்கும் . இது கதை மட்டுமல்ல என் கனவில் நடந்த ஒரு நிகழ்வையும் குறிப்பிட்டு கூறியுள்ளேன்.
நம் வாழும் இந்த அழகிய உலகத்தை உருவாக்கியவர் கடவுள்தான். இந்த உலகத்தில் மரங்கள் பறவைகள் விலங்குகள் என அனைத்தையும் உருவாக்கி இந்த பூமியை அழகு பார்த்தார். இன்னும் இந்த பூமியை அழகாக உருவாக்க இரண்டு மனிதர்களை படைத்தார் மனிதர்களாகிய நாமலே நிறைய தவறு செய்தும் பொழுது கடவுள் செய்த ஒரு சின்ன தவறுதான் இந்த மனிதர்கள்.
ஆரம்ப காலகட்டத்தில் இந்த பூமியை மனிதர்கள் அழகாக வைத்திருந்தாலும் போகப்போக இந்த மனிதர்களிடையே போட்டிகள் பொறாமைகள் போன்ற கெட்ட எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன. இதை இவர்களுக்கு தவறு என்று புரிய வைத்து நல்வழிப்படுத்த கடவுள் இந்த மனிதர்களுக்கு பஞ்சம் பட்டிணி நோய் ஆகியவற்றை கொடுத்தார். அப்படி இருந்தும் இந்த மனிதர்கள் திருந்தவில்லை.
சரி கடவுள் இவர்களை திருத்த ஒரு முடிவு செய்தார் தன் மகனின் ஒருவனை இந்த பூமிக்கு அனுப்பி வைத்தார். அவரின் மூத்த மகனை வைத்து இந்த பூமியில் இருக்கும் மனிதர்களை திருத்தி விடலாம் என்று எண்ணினார் இது கடவுளின் இரண்டாம் தவறு.
கடவுள் தன் மூத்த மகனை பூமியில் இருக்கும் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறக்க வைத்தார். அன்று பூமியில் ஒரு அழகிய கிராமத்தில் இரவு பொழுதில் ஆண்டவர் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறக்கிறார். அன்று வானத்தில் ஒரு நட்சத்திரம் மட்டும் நன்றாக ஜொலித்துக் கொண்டிருந்தது.
ஏழை குடும்பத்தில் பிறந்த ஆண்டவர், நாட்கள் வேகமாக கடந்தன இப்போது ஆண்டவருக்கு 20 வயது ஆகிவிட்டது. அனைவருக்கும் உதவி செய்யும் எண்ணமும் மனதில் எந்த ஒரு கெட்ட எண்ணமும் இல்லாத ஒரு புதிய மனிதனாக ஆண்டவர் அந்த கிராமத்தில் திகழ்ந்தார்.
தன் மூத்த மகனை பூமிக்கு அனுப்பி வைத்த கடவுள் இனி நம் மகன் பூமியை பார்த்துக் கொள்வான் என்று கடவுள் பூமியை கண்டு கொள்ளாமல் விட்டார் இது கடவுளின் மூன்றாம் தவறு.
ஆண்டவர் இருந்த காலகட்டம் அரசர்கள் ஆட்சி செய்யும் காலகட்டமாகும். ஆண்டவர் எல்லோருக்கும் உதவி செய்யும் ஒரு நபராக இருந்ததால் அந்த நாட்டில் ஆண்டவரை எல்லோருக்கும் பிடித்திருந்தது. ஒருவரை தவிர. அந்த அரசருக்கு இந்த ஆண்டவரே சுத்தமாக பிடிக்கவில்லை இவரை எப்படியாவது நம் பழி வாங்க வேண்டும் என்று எண்ணினார்.
அதற்கான காலமும் அந்த அரசருக்கு வந்தது. கடவுள் இந்த மனிதர்களை திருத்த வேண்டும் என்பதற்காக ஆண்டவரை இந்த பூமிக்கு அனுப்பி வைத்தார் ஆனால், இந்த மனித ஜென்மங்கள் பொற்காசுகளுக்காக இந்த ஆண்டவரை காட்டிக் கொடுத்தனர்.
ஆண்டவரை அந்நாட்டு அரசு பல தண்டனைகள் கொடுத்து அவரை சித்திரவதைப்படுத்தி கொன்றனர்…… அந்த நாட்டின் மக்களால் ஆண்டவருக்கு எந்த ஒரு உதவியும் செய்ய முடியவில்லை……
இது நடந்து மூன்று காலகட்டத்திற்கு அப்புறம் கடவுள் நம் மகன் இந்த பூமியை எவ்வாறு வைத்திருக்கிறான் என்று பார்க்க நினைத்தார். அப்போதே அவர் இரண்டு கண்களும் கலங்கின. இதுவரை கோபம் இல்லாத கடவுள் தன் மகனை இவ்வாறு இந்த மனிதர்கள் செய்துவிட்டார்கள் என்று பெரிதும் கோபம் கொண்டார். அதற்காக கடவுள் இந்த பூமியை ஒரு அடியாக அளிக்கவில்லை.
கடவுளின் தன் இரண்டாம் மகனை இந்த பூமிக்கு அனுப்ப முடிவு செய்தார். கடவுளின் முதல் மகன் மனித உறவில் இருக்கும் ஆண்டவர் ஆவார். ஆனால் கடவுளின் இரண்டாம் மகன் ஆட்டுக்குட்டியின் தலையை உடைய ஒரு சாத்தான் ஆவான்…..
சாத்தான் பூமிக்கு வருகை……
பாகம் 2 தொடரும்……