சிங்கத்தை ஏமாற்றிய நரி | The fox who tricked the lion

ஒரு ஊரில் ஒரு சிறிய காடு ஒன்று இருந்தது.

அந்தக் காட்டில் ஒரு சிங்கம் வாழ்ந்து கொண்டிருந்தது. அது சிறிய காடு என்பதால் அங்கு இருந்த சிறு சிறு விலங்குகளை எல்லாம் அடித்து சிங்கம் சாப்பிட்டு விட்டது.

ஒருநாள் சிங்கம் இரைதடசென்றது. அப்போது அந்த சிங்கத்திற்கு இறையொன்றும் சிக்கவில்லை அங்கும் இங்கும் அலைந்து திரிந்து களைத்து போய்விட்டது. அப்போது அங்கு ஒரு நரி வாழும் குகை ஒன்று இருந்தது. அதைப் பார்த்ததும் சிங்கத்திற்கு மனத்திற்குள் ஒரு சின்ன சந்தோசம்.

எப்படியும் நரி இங்குதான் தூங்குவதற்கு வரும் நாம் உள்ளே ஒளிந்து கொள்வோம் அது வந்தவுடன் அதை அடித்து சாப்பிட்டு விடுவோம் என்று திட்டம் தீட்டியது. அந்த சிங்கம் குகைக்குள் ஒளிந்து கொண்டது. சிறிது நேரம் கழித்து நரி அந்த குகைக்குள் அடைவதற்காக வந்தது.

குகைக்கு அருகில் வந்ததும் நரிக்கு ஒரு சந்தேகம் வந்தது. குகைக்குள் போகும் வழியில் சிங்கத்தின் கால் தடங்கல் கிடப்பதை உற்றுக் கவனித்தது. உடனே நரிக்கு சந்தேகம் அதிகரித்தது.

உள்ளே சிங்கம் இருக்கா இல்லையா என்று எப்படி நாம் கண்டுபிடிப்பது என்று யோசித்தது. உடனே நரிக்கு ஒரு யோசனை வந்தது. நரி வெளியில் நின்று கொண்டு குகையைப் பார்த்து ஏய் குகையே ஏய் குகையே என்று கத்தியது.

குகைக்குள் இருக்கும் சிங்கத்திற்கு ஒன்றும் புரியவில்லை ஏன் இப்படி இந்த நரி வெளியில் நின்று கத்துகிறது என்று யோசித்தது. மறுபடியும் நரி அதை போல் கத்த ஆரம்பித்தது. சிங்கத்திற்கு ஒன்றும் புரியவில்லை. மறுபடியும் நரி கத்தியது ஏ குகையே நீ என்னிடம் பேசினால் தானே நான்உள்ளே வருவேன் நீ ஏன் இன்று அமைதியாய் இருக்கிறாய் என் மீது ஏதாவது கோபமா இருக்கிறாயா என்று நரி கேட்டது.

அதன் பின்பு தான் சிங்கத்திற்கு புரிந்தது இந்த குகை பேசும் போல நாம் குகை பேசுவது போல் பேசுவோம் என்று நினைத்தது. அதன் பின் சிங்கம் பேச ஆரம்பித்தது உன் மீது எனக்கு ஒன்றும் கோபம் இல்லை நான் வேறு ஒரு சிந்தனையில் இருந்தேன் என்று சொல்லியது. உடனே நரி உஷாராகி விட்டது கொஞ்சம் தள்ளி தூரத்தில் போய் நின்று கொண்டு கலகலவென்று சிரித்தது.

சிரிப்பு சத்தம் கேட்டு சிங்கம் வெளியே வந்தது. நரி சிங்கத்தை பார்த்து கேட்டது அடே முட்டாள் சிங்கமே என்றைக்காவது குகை பேசுமாடாஎன்று. அதற்குப் பிறகுதான் சிங்கத்திற்கு நரி நம்மை ஏமாற்றியுள்ளது என்று புரிந்தது. நரி தப்பித்து ஓடிவிட்டது சிங்கம் ஏமாற்றத்துடன் அதன் குகைக்கு திரும்பியது. நம்ம தான் புத்திசாலி என்று யாரையும் குறைவாக எடை போட்டு விடக்கூடாது. நமக்கும் மேல் ஒரு புத்திசாலி இருக்கிறான்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top