பாம்பை பழிவாங்கிய காகம் | The crow took revenge on the snake

ஒரு ஊரில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அந்த ஆலமரத்தில் நிறைய காக்கைகள் கூடு கட்டி வாழ்ந்தது.

அந்த ஆலமரத்தில் ஒரு பெரிய பொந்து ஒன்று இருந்தது. அந்த பொந்தில் ஒரு நல்ல பாம்பு வாழ்ந்து வந்தது. அந்த ஆலமரத்தில் வாழும் காக்கைகள் அதன் கூட்டத்தில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.

அந்தக் காக்கைகள் இடும் முட்டையை அந்த ஆலமரத்தில் வாழும் நல்ல பாம்பு முட்டையை தினமும் குடித்து விடும். ஒரு கூட்டில் கூட முட்டையை விட்டு வைக்காது. அந்த மரத்தில் வாழும் காக்கைகள் அனைத்தும் கவலையோடு வாழ்ந்து வந்தது.

அந்தப் பாம்பை அந்த காக்கைகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்படி இருக்க ஒரு நாள் அந்த வழியாக ஒரு நரி வந்தது. காக்கைகள் எல்லாம் கவலையோடு இருந்ததை கவனித்து ஏன் இப்படி எல்லோரும் கவலையோடு இருக்கிறீர்கள் என்று நரி கேட்டது.

அதற்கு அங்கிருந்த காக்கா நரியிடம் கூறியது நாங்கள் இடும் முட்டைகள் எல்லாவற்றையும் இந்த மரத்தில் வாழும் நல்ல பாம்பு குடித்து விடுகிறது எங்களால் ஒரு குஞ்சு கூட பொரிக்க முடியவில்லை என்று வருத்தத்தோடு நரியிடம் கூறியது. அந்தப் பாம்பை எப்படி கொள்வது என்று எங்களுக்கு புரியவில்லை நீங்கள் தான் ஏதாவது ஒரு வழி சொல்ல வேண்டும் என்று காக்கா நரியை பார்த்து கேட்டது.

அதற்கு நரி நான் ஒரு யோசனை கூறுகிறேன் அதன்படி செய்யுங்கள் இந்த பாம்பை இல்லாமல் செய்துவிடலாம் என்று நரி கூறியது. சரி நீங்கள் சொல்லுங்கள் நாங்கள் அது படியே செய்கிறோம் என்று காக்கா கூறியது. நரி யோசனை கூறியது அதோ அங்க தூரத்தில் தெரிகிறது பாருங்கள் ஒரு அரண்மனை அந்த அரண்மனையில் மகாராணி நகைகள் எல்லாம் கழட்டி வைத்துவிட்டு கொல்லப்புறத்தில் குளிக்க செல்லும் போது நீங்கள் அந்த நகையில் ஏதாவது ஒன்றை எடுத்து வந்து அந்த பொந்துக்குள் வைத்து விடுங்கள் என்று கூறியது.

அப்போது காக்கைக்கு ஒன்றும் புரியவில்லை, சரி நரி சொல்லும் படியே செய்து விடுவோம் என்று ஒரு காகம் மட்டும் அரண்மனையை நோக்கி பறந்து சென்றது. மகாராணி குளிக்க வரும் வரை காத்திருந்தது. மகாராணி குளிக்க செல்லும் போது கழுத்தில் இருந்த நகைகள் அனைத்தையும் கழட்டி வைத்தாள். அதைப் பார்த்துக் கொண்டிருந்த காக்கா ஒரு நகையை மட்டும் வாயில் கவி கொண்டு பறந்து வந்தது.

அதைப் பார்த்ததும் மகாராணி கத்த ஆரம்பித்து விட்டாள் நகையை காக்கா தூக்கி விட்டு செல்கிறது அதை போய் புடிங்கள் என்று. உடனே காவலாளிகள் எல்லாம் பின்னாடியே ஓடி சென்றார்கள். அந்தக் காகம் நகையை கொண்டு பாம்பு வாழும் பொந்துக்குள் போட்டது.

அதைப் பார்த்த காவலாளிகள் அந்த பொந்தை ஈட்டியால் குத்தினார்கள். முதலில் பாம்பு சீறிக்கொண்டு வெளியே வந்தது அதை பார்த்ததும் காவலாளிகள் ஈட்டியால் ஒரே குத்தாக அந்த பாம்பை குத்தி கொன்றுவிட்டார்கள். பின்பு அந்த நகையவும் மீட்டு எடுத்துச் சென்று விட்டார்கள்.

அப்போதுதான் காகத்திற்கு நரி சொன்னது புரிந்தது. இப்போது அனைத்து காக்கைகளும் அந்த மரத்தில் சந்தோசமாக முட்டையிட்டு குஞ்சு பொரித்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top