வணக்கம் நண்பர்களே இந்த ஒரு பதிவில் நீங்கள் நம்ப முடியாத சில உண்மைகளை காண உள்ளோம் இந்த ஒரு செய்தி உங்களில் ஒரு சிலருக்கு தெரிந்தாலும் பலருக்கு தெரியும் பொழுது மிகவும் வியப்பாக இருக்கும். அப்படி எந்த ஒரு மர்மத்தை நாம் பார்க்க போக உள்ளோம் என்றால் பிரமிடு பற்றிய மர்மமான ஓவியங்கள்.
சில ஓவியங்கள் பார்க்க சாதாரணமாக இருந்தாலும் அதில் சில உண்மைகளையும் மர்மங்களையும் மறைந்துள்ளன. கல்வெட்டுகளில் பதியப்படாத சில உண்மைகளை இதுபோல் ஓவியங்களில் வெளிப்படுத்தி உள்ளனர் நம் முன்னோர்கள். இதில் சில ஓவியங்களுக்கு இப்போதும் வரை ஆராய்ச்சியாளர்கள் அந்த ஓவியத்தில் இருக்கும் யுக்தியினை கண்டுபிடிக்க முடியவில்லை அவர்கள் அந்த ஒரு ஓவியத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது கூட இப்ப வரை மர்மமாக உள்ளது.
அதேபோல் நம் பார்க்கப் போவதும் அதேபோல் ஓவியம் தான் இந்த ஒரு ஓவியம் பிரமிடு சுவற்றில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு ஓவியம் அப்படி அந்த ஒரு ஓவியத்தில் என்னதான் இருக்கு அப்படின்னு ஒவ்வொருக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே போகும் அந்த ஓவியத்தை பார்த்த பிறகு உங்களுக்குள் ஒருவேளை இப்படி இருந்திருக்குமோ அப்படி என்ற ஒரு சிந்தனை கூட உங்கள் மனதில் ஓடும்.
இந்த ஒரு ஓவியத்தில் பார்க்கும் படத்தினை நீங்கள் உன்னிப்பாக கவனித்துப் பாருங்கள் அந்த இரண்டு தூண்களும் எவ்வளவு உயரமாக உள்ளது அதே தூண்களின் ஓவியமும் அதன் பக்கத்தில் ஒரு மனிதனும் நிற்பது போல் ஓவியமும் அந்த பிரமிடில் வரையப்பட்டுள்ளது ஒரு வேலை மனிதர்கள் அவ்வளவு உயரமாக அந்த ஒரு காலகட்டத்தில் இருந்தார்களா என்று பலருக்கும் அறியப்படாத ஒரு மர்மமாக உள்ளது.
பிரமிடு கட்டப்பட்ட கற்களை பார்த்தீங்கன்னா அது ஒரு ஆள் உயரத்திற்கு மேல் இருக்கும ஆனால் அந்தக் கற்களை இந்த ஒரு மனிதர்கள் தூக்கிக்கொண்டு செல்வதே மிகவும் வியப்பாக உள்ளது இந்த ஒரு ஓவியத்தில்.
நான் சிறுவயதில் இருக்கும் பொழுது என் பாட்டி சொல்லும் ஒரு கதையில் ஒரு காலத்தில் பனை மரத்தை பிடிங்கி பல் துலக்குவார்கள் என்று கூறுவார் அப்போது எனக்கு அது ஒரு வேடிக்கையாக இருந்தாலும் இந்த ஒரு ஓவியங்களை பார்க்கும் பொழுது உண்மையாகவே ஒரு மனிதர்கள் அவ்வளவு உயரமாக இருந்து இருப்பார்கள் என்று தோன்றுகிறது.
இந்த உலகில் இன்னும் விடை கிடைக்காத சில மர்மங்களுக்கு சில ஓவியங்கள் அதற்கு விடையாக அமையலாம். சில மர்மங்களை தெரிந்து கொள்ளாமல் இருப்பதே நம்மளுக்கு நல்லது.