நம்ம இன்னைக்கு பாக்க போற கதை எப்பவும் போல கொஞ்சம் வித்தியாசமான கதையை தான் நம்ம பாக்க போறோம். இந்த கதை உங்களுடைய சின்ன வயச கொஞ்சம் ஞாபகப்படுத்தலாம். இப்ப உள்ள சின்ன பசங்க மொபைல் போனை பார்த்துகிட்டு தான் சாப்பிடுறாங்க ஆனால் நான் சின்ன வயசா இருக்கும் போது எங்க அம்மா எல்லாம் எனக்கு நிலாவ பார்த்துதான் சோறு ஊட்டுவங்க.
அப்படி நிலவா பார்த்து சோறு கொடுக்கும்போது அப்ப ஒரு கதை ஒன்னு சொல்லுவாங்க அந்த நிலாவ பத்தி, அந்த நிலால ஒரு பாட்டி இருக்காங்க அவங்க முறுக்கு சுட்டுகிட்டு இருக்காங்க அப்படிங்கற ஒரு கதை சொல்லுவாங்க இதை கேட்டது உங்களுக்கு நிறைய பேருக்கு இந்த ஒரு கதை ஞாபகம் வந்திருக்கும்.
அதே மாதிரி இந்த கதையிலையும் ஒரு அம்மா ஒரு பையனுக்கு சோறு கொடுக்கும்போது இந்த மாதிரியான கதையை சொல்றாங்க இதைக் கேட்டதும் அந்தப் பையன் மனசுல உண்மையாகவே நிலால ஒரு பாட்டி முறுக்கு சுட்டுக்கிட்டு இருக்காங்களா அப்படின்னு யோசனை வந்துச்சு.
அவன் சின்ன வயசுல இருந்து நம்ம எப்படியாவது அந்த நிலாவுக்கு போயி அந்த பாட்டிய பாக்கணும் அப்படி எனகிற ஒரு ஆசை அவனுக்கு சின்ன வயசுல இருந்தே இருந்துச்சு. இப்படியே காலம் போகப் போக அவனும் வளர்ந்துகிட்டே வந்தான்.
அவன் ரொம்ப பெரியவனாகி விண்வெளி சம்பந்தப்பட்ட படிப்புகளையும் படிக்க ஆரம்பிச்சான் அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா நிலாவுக்கு போறத பத்தி திட்டங்களையும் போட ஆரம்பிச்சான். நிலாக்கு போறதுக்கான ஏற்பாடுகளையும் பண்ண ஆரம்பிச்சான்.
ஒரு நாள் அவன் எதிர்பார்த்த மாதிரி நிலாவுக்கு போற வாய்ப்பு அவனுக்கு கிடைச்சது இத வச்சி நம்ம நிலால முறுக்கு சுடுற பாட்டிய பாத்தே ஆகணும் அப்படிங்கிற ஒரு ஆசையும் வந்துச்சு. இப்ப தொடர்ந்து அவன் ராக்கெட் ல நிலாவை நோக்கி பயணம் செய்கிறான்.
ஒரு வழியா அவன் அந்த நிலாவுக்கு போயி அங்க அந்தப் பாட்டி இருக்காங்களா அப்படின்னு தேட ஆரம்பிச்சான் அவன் ரொம்ப நேரம் தேடியும் அங்கே யாருமே இல்ல.
அப்புறம் அவன் அங்க இருந்து நடந்து வரும்போது தூரமா ஏதோ புகை போற மாதிரி தெரிந்தது அந்த நோக்கியாவை நடக்க ஆரம்பிச்சான் அப்ப அவன் ரொம்ப ஆச்சரியமா பார்த்தான் அங்க ஒரு உண்மையாகவே முறுக்கு சுட்டு கிட்டு இருந்தாங்க.
அம்மா சொன்னது உண்மைதான் போல அப்படின்னு நெனச்சிட்டு அந்த பாட்டி கிட்ட போயி இவன் பேச ஆரம்பிக்கிறான். அந்த பாட்டியும் நான் காலங்காலமா இங்க தான் இருக்கேன் அப்படின்னு சொல்றாங்க உனக்கு வேணாம் கொஞ்சம் முறுக்கு வாங்கிட்டு போயன் அப்படின்னு சொன்னாங்க.
அவனும் அந்தப் பாட்டி நல்லா பேசிட்டு பூமிக்கு ரொம்ப மகிழ்ச்சியாக வந்தான். இது ஒரு கற்பனை கதையா இருந்தாலுமே நம்ம சின்ன வயசுல நம்ம அம்மா நமக்கு சோறு ஊட்டும் போது இப்படி கதை சொல்லுவாங்க ஆனா இந்த ஒரு கதையை யார் முதன் முதலில் யாரு சொல்லி இருப்பாங்கன்னு நீங்க நினைக்கிறீங்க….