ஒரு பெரிய மலையின் அடிவாரத்தில் நிறைய விலங்குகள் வாழ்ந்து வந்தன. அதில் கதிரவன் எனும் நரி ஒன்று இருந்தது.
ஒரு நாள் அந்த நரி இறை தேடி அலைந்து கொண்டிருந்தபோது இறந்து கிடந்த ஒரு யானை யின் உடலை பார்த்தது. அதைப் பார்த்ததும் நரிக்கு தலைகால் புரியவில்லை இன்று வசமாக நமக்கு தீனி கிடைத்து விட்டது என்று அந்த யானையை சுற்றி சுற்றி வந்தது.
ஆனால் அந்த நரிக்கு யானையின் தோலை எப்படி உரிப்பது என்று தெரியவில்லை அதன் கைகளிலும் கால்களிலும் அந்த அளவிற்கு நகங்கள் இல்லை என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தது. யாராவது இந்த வழியில் வந்தால் தந்திரமாக பேசி அவர்களை உதவிக்கு அழைக்கலாம் என்று நினைத்தது. அப்போது அந்த வழியில் ஒரு சிங்கம் வந்தது. சிங்கத்தைப் பார்த்ததும் அந்த நரிக்கு ஒரு பயம். யானையை சிங்கம் தின்று விடுமோ என்று நினைத்தது.
சிங்கம் அருகில் வந்ததும் நரி அந்த சிங்கத்திடம் வாங்கண்ணே எந்த பக்கம் வந்து இருக்கிறீர்கள் என்ற சொல்லி ஒரு வணக்கத்தை வைத்தது. அந்த சிங்கத்திற்கு ஒன்றும் புரியவில்லை எதற்காக இது நமக்கு வணக்கம் வைக்கிறது நீ யார் என்று கேட்டது. அதற்கு அந்த நரி அண்ணே நீங்கள் தானே இந்த யானையை வேட்டையாடி இங்கு வைத்திருக்கிறீர்கள் அதை நான் பாதுகாத்துக் கொண்டு இருக்கிறேன் என்று சொன்னது. அதற்கு அந்த சிங்கம் இதை நான் அடித்துக் கொள்ளவில்லை அதுவாய் இறந்திருக்கலாம் அல்லது வேற யாராவது கொன்றிருக்கலாம். இப்போதைக்கு எனக்கு இதன் இறைச்சி வேண்டாம் என்று அது புறப்பட்டது.
நல்ல வேலை சிங்கம் போய்விட்டது என்று நரி பெரும் மூச்சுவிட்டுக் கொண்டிருந்தத வேலையில் அந்தப் பக்கம் ஒரு புலி வந்தது. அந்த புலி நரியை பார்த்து ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறாய் என்று கேட்டது. அதற்கு அந்த நரி சிங்கம் இந்த யானையை வேட்டையாடி இங்கு வைத்துள்ளது. என்னை காவலுக்கு இருக்க சொல்லிவிட்டு குளிக்கப் போய் இருக்கிறது என்று பொய் சொன்னது. இதைக் கேட்டதும் புலி நமக்கு எதற்கு வம்பு நாம் சென்று விடுவோம் என்று திரும்பிச் சென்றது.
அதன் பின் அந்த வழியாக ஒரு குரங்கு வந்தது. அந்தக் குரங்கு நண்பா ஏன் இங்கே நிற்கிறாய் என்று கேட்டது. நரிக்கு ஒரு யோசனை வந்தது குரங்கு சைவம் தானே அசைவம் சாப்பிடாதல்லவா அதனால் இதனிடம் உதவி கேட்கலாம் என்று நினைத்தது. குரங்கைப் பார்த்து நண்பா உன்னை பார்க்கவே முடியவில்லை என்று கேட்டது. அதற்கு குரங்கு இப்போது என்னை பார்த்து விட்டாய் அல்லவா என்னவென்று சொல் என்றது. நரி குரங்கிடம் ஒரு சிங்கம் இந்த யானையை வேட்டையாடி என்னை பாதுகாப்பிற்காக இங்கு இருக்கச் சொல்லிவிட்டு குளிக்கப் போயிருக்கிறது அது வருவதற்குள் நானும் இந்த யானையின் இறைச்சியை ருசி பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என்னால் இதன் தோலை உரிப்பதற்கு என் கை கால்களில் வலு கிடையாது என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கிறேன் நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் உன் கை கால்களில் நகம் நன்றாக உள்ளது எனவே இந்த யானையின் தோலை உரித்து தருவாயா என்று கேட்டது. குரங்கும் சரி என்று சொல்லி யானையின் தோல்களை நன்றாக உரித்து இதை நீ சாப்பிடு நான் சென்று வருகிறேன் என்று குரங்கு புறப்பட்டது.
உடனே இந்த நரி சந்தோசத்தில் யானையின் இறைச்சியை உண்ண ஆரம்பித்தது. அந்த நரி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது சற்று தூரத்தில் நரியின் இனங்கள் எல்லாம் வந்து கொண்டிருந்தது அதைப் பார்த்ததும் இந்த நரிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் குடுகுடுவென்று அந்த நரிகளை பார்த்து ஓடியது.
இந்த நரி ஓடி வருவதை பார்த்து அங்கு வந்து கொண்டிருந்த நரிகள் எல்லாம் அப்படியே நின்று விட்டது. ஏன் இப்படி ஓடி வருகிறாய் என்று கேட்டது. அதற்கு இந்த கதிரவன் என்னும் நரி அங்கு செல்ல வேண்டாம் அங்கு நிறைய சிங்கங்கள் ஒரு யானையை அடித்து சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது நாம் அங்கு சென்றால் நம்மளையும் கொன்றுவிடும் நானே தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்து விட்டேன் வாருங்கள் ஓடிவிடலாம் என்று மற்ற நரிகளை எல்லாம் திருப்பி அனுப்பி விட்டது.
சிறிது தூரம் இந்த நரியும் ஓடுவது போல் ஓடி பாதியிலேயே ஒரு புதருக்குள் ஒளிந்து கொண்டது. எல்லா நரியும் சென்ற பிறகு இந்த நரி மட்டும் அந்த யானையின்அருகில் வந்து அதன் இறைச்சியை அளவுக்கு மீறி தின்றது. தின்று முடித்தவுடன் நரியால் கொஞ்சம் கூட அங்கும் இங்கும் நகர முடியவில்லை. அதற்கு தலை சுற்றியது மயக்கம் வருவது போல் இருந்தது உதவிக்கு கூட அருகில் யாரும் இல்லை என்ன செய்வதென்று தெரியாமல் அங்கேயே மயங்கி விழுந்தது.
அப்போதுதான் உணர்ந்தது நம் இனம் நம்மோடு இருந்திருந்தால் இப்போது நமக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்காது நம்மளை காப்பாற்றி இருப்பார்கள் தவறு செய்து விட்டோம் என்று வருந்தியது.