ஒரு அழகான கிராமத்தில் தனிமையில் வாழும் ஒரு வயதான முதியவரும் அவரின் மனைவியும். இவர்கள் இருவரும் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு யாரும் இல்லாததால் தனிமையில் இருந்தார்கள் இவர்கள் வீடும் தனிமையான இடத்தில்தான் இருந்தது.
தாத்தாக்கு சரியாக கண்ணு தெரியாது, அதேபோல் பாட்டிக்கும் சரியாக பேச வராது இப்படிப்பட்ட வயதான முதியவர்களின் வாழ்க்கையில் அடுத்தடுத்து என்ன நடக்கப்போவது என்பதை நாம் பார்க்க போறோம்.
ஆரம்ப காலத்தில் தாத்தா ஒரு ராணுவ வீரனாகவும் பாட்டி ராணுவத்தில் மருத்துவராகவும் பணிபுரிந்தார்கள் அங்கே இவர்களுக்கு காதல் வந்ததால் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களுக்கு ஒரு பையன் ஒருவன் இருக்கிறான் அவன் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
இந்த தாத்தா பாட்டி வீட்டில் அதிக பொன்னும் பொருளும் இருப்பதால் இவர்கள் வயதான காலத்தில் வேலைக்கு செல்வதில்லை வீட்டில் இருந்தபடியே இவர்களின் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து இவர்களின் வீட்டை நோட்டமிட்ட ஒரு மூன்று வாலிபர்கள் இந்த வீட்டில் எப்படியாவது திருட வேண்டும் என்று நினைத்தார்கள்.
இந்த மூன்று வாலிபரும் சரியாக திட்டம் போட்டு நம் எப்படியாவது அங்கே இருக்கும் காசும் பொருளையும் திருடு விட வேண்டும் என்று நினைத்தார்கள். நம் திருடும் பொழுது அந்த வயதானவர்கள் ஏதேனும் இடைஞ்சல் கொடுத்தால் நம் அவர்களை கொன்று விடலாம் அவர்களை கொன்றால் யாருக்கு தான் தெரியப்போகிறது என்று பேசிக்கொண்டே சிரித்தார்கள்.
தாத்தாவும் பாட்டியும் சந்தோசமாக வாழ்ந்து வந்த நாட்களில் இனிவரும் நாட்கள் இவர்களுக்கு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. ஒரு நாள் இரவு அந்த மூவரும் இந்த வீட்டினை நோட்டமிட்டார்கள். அப்புறம் வீட்டினுள் நுழைவதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்படியே ஒரு வழி இருந்தது இதை பார்த்து அவர்கள் உள்ளே நுழைந்தார்கள்.
இருவரின் கையில் கத்தியும் ஒருவனின் கையில் ஒரு கம்பியும் வைத்திருந்தான் அந்த முதியவர்கள் ஏதேனும் சத்தமிட்டால் அவர்களை கொன்று விடலாம் என்று. அந்த திருடர்கள் ஒரு ஒரு அரைக்கும் சென்று அவர்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் சற்றும் எதிர்பாராத ஒரு சத்தம் ஒன்று கேட்டது கையில் கம்பியோடு நின்றவன் நெற்றியில் ரத்தம் சொட்ட சொட்ட கீழே விழுந்தான் இதை பார்த்ததும் அங்கு இருக்கும் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை எதிரே பார்த்தால் கண்ணு தெரியாத தாத்தா கையில் ஒரு துப்பாக்கி ஒன்று இருந்தது.
உடனே அந்த இருவர்களும் அந்த இடத்தை விட்டு வெளியேறிவிடலாம் என்று நினைத்தார்கள் ஆனால் அவர்கள் நினைத்ததோ தப்பு இவர்களிடம் அந்த முதியவர்கள் சிக்கவில்லை முதியவர்களிடம் தான் இவர்கள் சிக்கிருக்கிறார்கள் என்று நினைத்தார்கள் அந்த வீட்டுக்குள் ஓடி ஒழிந்தன இவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை நம் வந்தது எப்படி இந்த தாத்தாவிற்கு தெரியும் சாதாரண முதியவர் என்று பார்த்தால் கையில் துப்பாக்கி வரை வைத்திருக்கிறாரே என்று நினைத்தார்கள்.
ஒரு கண்ணில் பயத்துடனும் காலில் நடுக்கத்துடனும் அந்த அறை முழுவதும் தப்பிக்க ஏதாவது வழி இருக்கிறதா என்று அமைதியாக தேடினார்கள் அப்போது அவர்களின் கண்ணில் இன்னும் பயம் கலந்த ஒரு விஷயத்தை பார்த்தார்கள். இவர்களின் கூட வந்த ஒருவனின் உடம்பை அந்த வயதான பாட்டி ஏதோ கரி வெட்டுவது போல் உடம்பை தூண்டுதுண்டாக வெட்டிக் கொண்டு இருந்தார். இதைப் பார்த்ததும் இவர்களுக்கு இன்னும் பயமாயிற்று.
உடனே இவர்கள் அந்த வீட்டின் பழைய பொருட்கள் வைக்கும் இடத்தில் மறைந்து கொண்டன. அப்போது அவர்களுக்கு இன்னொரு அதிர்ச்சியான ஒரு விஷயத்தை பார்த்தார்கள் அங்கு மனிதர்களை எவ்வாறெல்லாம் துன்புறுத்தி சாகடிக்கலாம் அப்படிங்கற நிறைய கருவிகள் அங்கு இருந்தது. அங்கு சில செய்தித்தாள்களும் இருந்தது அதை பார்க்கும் பொழுது மர்மமான முறையில் ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி ஏகப்பட்ட ஒரு கொடூரமான முறையில் சாகடிக்கப்பட்டிருக்கிறார்கள் ஆனால் அது யாரால் கொல்லப்பட்டது என்று இன்றுவரையும் கண்டுபிடிக்கவில்லை என்று சொல்லப்பட்டிருந்தது.
அப்போதுதான் இந்த இருவருக்கும் இந்த முதியவர்கள் ஒரு சீரியல் கில்லர்கள் என்று தெரியவந்தது. திருட வந்த இடத்தில் தெரியாத்தனமாக சிக்கிக் கொண்டோம் அழுதார்கள். அப்போது அவர்கள் இருக்கும் அறையின் கதவு மெதுவாக திறக்க ஆரம்பித்தது. அப்போது இவர்களின் கண்ணில் அந்த முதியவரும் அவரின் மனைவியும் சிரித்தபடி நின்று கொண்டிருந்தார்கள்.
அந்த தாத்தா நீ என்னை ஒரு சாதாரண கிழவன் என்று நினைத்தாயா என்று சொல்லிக்கொண்டு சிரித்தார் அவர் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து அவன் தலையை தெறிக்க விட்டார். பாட்டி உங்களுக்கு வயதானாலும் உங்களுடைய கூறி தவறவில்லை என்று கூறினார். இதைக்கேட்ட அப்படியே மயங்கினான்…
ஒரு இரண்டு மாதங்களுக்குப் பிறகு…. இந்த தாத்தாவும் பாட்டியும் இளமையில் ஏகப்பட்ட கொலைகளை செய்திருக்கிறார்கள் கொலையெல்லாம் செய்து சலித்துப்போன இவர்களுக்கு சரி இனியாவது நம் ஒரு சந்தோஷமான வாழ்க்கையை வாழலாம் என்று நினைத்தார்கள் ஆனால் இந்த திருடர்கள் இவர்களை சாதாரணமான முதியவர்கள் என்று நினைத்ததால் அவர்களின் உயிர் பரிபோனது. எப்போதும் நம் எவரையும் சாதாரணமாக நினைக்கக் கூடாது.,…..