ஒரு அழகான கிராமத்தின் அருகில் ஒரு பெரிய ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருக்கும். அந்த ஆற்றின் அருகில் உளள கிராமங்களில் இருக்கும். மனிதர்கள் அங்குதான் மீன் பிடிப்பார்கள். அந்த ஆற்றின் அருகே இருந்த கிராமத்தில் ஒரு அப்பாவும் மகனும் வாழ்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களிடம் போதுமான வசதி இல்லாம இருந்தாலும் அவர்களின் வாழ்வாதாரம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
ஒரு நாள் அந்த அப்பாவும் மகனும் ஆற்றில் மீன் பிடிக்க சென்றார்கள். எப்போதும் அவர்களுக்கு மீன் கம்மியாக தான் கிடைக்கும் ஏனென்றால் அவர்களிடம் சரியான வலை எதுவும் இல்லை. அவர்களுக்கு அன்றாட உணவு தேவைக்கும் மற்றும் சந்தையில் விற்பதற்குமான அளவிற்கு மீன்கள் கிடைக்கும்.
அவர்கள் சிறிது மீன்களை தங்கள் உணவுக்காகவும் மற்ற மீன்களை சந்தையில் விற்று அதில் வரும் பணத்தை அன்றாட தேவைக்காகவும் பயன்படுத்திக் கொண்டு வந்தனர். இப்படி சாதாரணமாக போகும் இவர்களின் வாழ்க்கை இன்னும் சில நாட்களில் யாரும் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு மாறப்போது என்று யாருக்கும் தெரியாது.
ஒரு நாள் அந்த சிறுவன் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு மீன் மிகவும் அரிதாக இருந்தது இதை நாம் வீட்டில் வைத்து வளர்க்கலாம் என்று ஆசைப்பட்டான் அவன் அப்பாவிடம் கூறும் பொழுது அவனின் அப்பாவும் மிகவும் சந்தோஷமாக சரி வளர்த்துக் கொள் என்று கூறினார்.
அந்த சிறுவன் அந்த மீனை அவன் வீட்டில் ஒரு கண்ணாடி குவளையில் வைத்து வளர்க்க ஆரம்பித்தான். அவன் தூங்கும் பொழுது எப்போதும் அந்த கண்ணாடிக் குவளை அவன் அருகில் தான் இருக்கும் நெடு நாட்களாக அவன் தூங்கும் பொழுது அவன் கண்ணில் ஒருவித ஒளி ஒன்று தெரியும் ஆனால் அவன் கனவில்தான் ஏதோ தெரிகிறது என்று அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அதேபோல் ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருக்கும்போது ஒரு வெளிச்சம் அவன் கண்ணை திறந்து பார்க்க வைத்தது. என்ன வெளிச்சம் எங்கிருந்து வருகிறது என்று அவன் கண் வழித்து பார்க்கும் பொழுது அந்த கண்ணாடி குவளயில் இருந்த மீன் ஒரு தங்கம் போல் ஜொலித்தது. உடனே அவன் சிறிது அரிசியை அந்த மீனுக்கு உணவாக போட்டான்.
அவன் அந்த கண்ணாடி குவளையில் போட்ட சில அரிசிகள் தங்கமாக மாறியது. இதைப் பார்த்ததும் அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்த மீன் ஒரு கடவுளாக தான் இருக்க வேண்டும் என்று எண்ணினான்.
இந்த விஷயத்தை அவங்க அப்பாவிடம் கூறினான். அவங்க அப்பா மிகவும் சந்தோஷமானார். இதேபோல் இவர்கள் அந்த மீன் கண்ணாடி குவலையில் சில கற்களை போட்டு அதை தங்கமாக மாற்றி சந்தையில் விற்க ஆரம்பித்தனர். இவர்களிடம் நிறைய பேர் எப்படி உங்களுக்கு தங்கம் கிடைத்தது என்று கேட்கும் பொழுது அவர்கள் நாங்கள் அந்த ஆற்றில் தான் எடுத்தோம் என்று கூறினார்கள்.
இதைத்தொடர்ந்து ஏகப்பட்ட மக்கள் அந்த ஆற்றில் அலசி ஆராய்ந்தனர். அப்போதே அவர்களுக்கும் சில தங்க கற்கள் கிடைத்தன. இதைத்தொடர்ந்து அந்த கிராம மக்களும் சில பேர் பணக்காரர்கள் ஆகினார்கள். அந்த ஊர் மக்கள் அந்த ஆர்டிற்கு தங்க ஆறு என்று பெயரும் சூட்டினார்கள்.
ஆனால் கடைசிவரை இந்த அப்பாவும் மகனும் தங்களிடம் இருக்கும் மீனை பற்றி எவரிடமும் கூறவில்லை. மற்றவர்களுக்கு ஆற்றில் தங்க கற்கள் கிடைத்ததால் இவர்கள் மீதும் எந்த ஒரு சந்தேகமும் வரவில்லை ஏனென்றால் அப்பா தான் ஏகப்பட்ட கற்களை தங்கமாக மாற்றி அந்த ஆற்றில் வீசினார் அப்போதுதான் யாருக்கும் நம்மை சந்தேகம் வராது என்றும் எண்ணினார்.
இதைப்போல் ஒரு வித்தியாசமான கதையில் சந்திப்போம்….