ஒரு ஊரின் ஆற்றங்கரை பகுதியில் ஒரு பாம்பானது ஊர்ந்து வந்தது. அந்தப் பாம்பானது மிகுந்த வருத்தத்துடன் காணப்பட்டது ஏனெனில், அன்று காலை முழுவதும் தனக்கான இறையை தேடி மிகவும் சோர்வடைந்துள்ளது.
சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு மீண்டும் தனக்கான இறையை தேட ஆரம்பித்தது அந்த பாம்பு. ஆற்றின் உள்ளே தவளைகள் எல்லாம் குதித்து விளையாடிக் கொண்டிருப்பதை தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தது .
இந்த பாம்பு. அந்த தவளைகளை எப்படியாவது தமக்கு உணவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. உடனே அந்த தவளைகளுக்கு அருகில் இந்த பாம்பானது சென்றது.அங்கு விளையாடிக் கொண்டிருந்த தவளைகளில் ஒன்று பாம்பைப் பார்த்து ஏன் சோர்வாய் இருக்கிறாய் ? என்று கேட்டது .
. இந்த பாம்பானது தனது முகத்தை மிகவும் சோகமாக வைத்துக் கொண்டு வைத்துக்கொண்டு ஒரு பொய்யை கூற ஆரம்பித்தது, ” நான் இன்று காலையில் எனக்கான இறையைத் தேடிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு எலியை பார்த்தேன், அந்த எலியானது புதரில் சென்று மறைந்து கொண்டது எனவே நானும் அதன் பின்னே சென்றேன்,
நான் அந்த எலியை கடிக்க முயலும் போது தற்செயலாக எலிக்கு பதிலாக அங்கே தவம் செய்து கொண்டிருந்த முனிவரின் காலை கடித்து விட்டேன். அதற்கு அந்த முனிவர் என் தவத்தை நீ கெடுத்து விட்டாய் என்று, எனக்கு “நீ ஊரில் உள்ள தவளைகள் எல்லாவற்றையும் முதுகில் சுமந்து செல்ல வேண்டும் ” என்று சபித்து விட்டார் “.
அதனால் தான் நான் மிகவும் சோகமாக உள்ளேன் என்று அந்த தவளை இடம் கூறியது. அந்தத் தவளையோ இந்த பாம்பு சொன்ன எல்லாவற்றையும் உண்மை என நம்பியது. அந்த தவளை ஆனது தன் தவளை மன்னரிடம் போய் இந்த செய்தியை கூறியது. அந்த தவளை மன்னரோ பாம்பின் முதுகில் சவாரி செய்து காட்டை வளம் வருமாறு மற்ற பாம்பிடம் ஆணையிட்டது. மற்ற தவளைகளும் மன்னவரின் ஆணைக்கிணங்க பாம்பின் முதுகில் ஏறி சவாரி செய்ய தொடங்கியது.
தொடர்ந்து இரண்டு நாட்களாக சவாரி செய்ததில் பாம்பானது சோர்வானது. இந்த பாம்பானது நான் சாப்பிட்டு இரண்டு நாட்களுக்கு மேல் ஆனது என்று மன்னரிடம் கூறியது. உடனே மன்னர் தவளையோ, ” சரி உன் பசிக்கு ஏற்ப சின்ன தவளையை சாப்பிட்டுக் கொள் என்று ஆணையிட்டது. அந்தப் பாம்பும் தன் பசிக்கு ஏற்ப சின்ன தவறுகளை சாப்பிட ஆரம்பித்தது.
நாட்கள் செல்ல செல்ல ஒவ்வொரு தவலையா சாப்பிட ஆரம்பித்தது இந்த பாம்பு. இறுதியில் மன்னர் தவளையையும் காட்டை முழுவதும் சவாரி செய்து விட்டு மன்னர் தவளையும் சாப்பிட்டது.
இந்த கதையில் இருந்து நாம் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் பகைவர் எவராக இருந்தாலும் அவரை வேரோடு அழித்துவிட வேண்டும். இல்லையெனில் அவர் நம்மளை அழித்துவிடுவார் என்பதே ஆகும்.