ஒரு ஊரில் ஒரு பண்ணையார் வாழ்ந்து வந்தார். அந்தப் பண்ணையாருக்கு நிறைய தோப்பு வயல் காடு என்று நிறைய இருந்தது . அந்த ஊர் மக்கள் எல்லாம் அவர் காட்டுக்குத்தான் வேலைக்கு செல்வார்கள்.
அப்படி ஒரு நாள் எல்லோரும் வேலைக்கு செல்லும் போது ஒருவர் மட்டும் அங்கு வரவில்லை. அவர் பெயர் மாணிக்கம். அதைக் கவனித்த பண்ணயார் மாணிக்கம் மட்டும் ஏன் இன்னும் வேலைக்கு வரவில்லை என்று கேட்டார்.
யாருக்கும் தெரியவில்லை என்று வேலையாட்கள் சொன்னார்கள். உடனே பண்ணையார் ஒரு ஆளை வரவழைத்து மாணிக்கம் வீட்டில் போய் அவர் எங்கே என்று பார்த்து வரச் சொன்னார். அந்த வேலையால் வீட்டிற்கு சென்று மாணிக்கத்தை ஏன் இன்னும் வேலைக்கு வரவில்லை என்று கேட்டார். உடனே மாணிக்கம் இதோ வந்து விட்டேன் என்று அவசர அவசரமாக கிளம்பி பண்ணைக்கு வந்து விட்டார்.
மாணிக்கத்திடம் பண்ணையார் கேட்டார் ஏன் இவ்வளவு நேரம் வரவில்லை என்று. அதற்கு மாணிக்கம் என் மகன் காலையிலிருந்து அழுது கொண்டே இருக்கிறான் எவ்வளவு சமாதானப்படுத்தியும் நிறுத்தவில்லை அதனால் தான் இவ்வளவு நேரம் என்று சொன்னான். அதற்கு பண்ணையார் சிரித்துக் கொண்டே இதெல்லாம் ஒரு காரணமா நானாக இருந்திருந்தால் சுலபமாக சமாதானப்படுத்தி இருப்பேன் நீ என்னவென்றால் குழந்தை மாதிரி பதில் சொல்கிறாய் என்றார் பண்ணையார்.
அதற்கு மாணிக்கம் இல்லை ஐயா உங்களால் முடியாது வேண்டுமென்றால் நான் குழந்தை போல் நடித்துக் காட்டுகிறேன் உங்களால் சமாதானப்படுத்த முடிந்தால் சமாதானப்படுத்துங்கள் என்றார். அதற்கு பண்ணயார் சிரித்துக் கொண்டே சரி என்று சொல்லிவிட்டார். குழந்தை போல் அழ ஆரம்பித்தார்.
உடனே பண்ணையார் மாணிக்கத்தை பார்த்து உனக்கு மிட்டாய் வேண்டுமா பொம்மை வேண்டுமா என்று கேட்டார். அதற்கும் மாணிக்கம் பதில் சொல்லாமல் அழுது கொண்டே இருந்தார். பண்ணையாருக்கு கோபம் வந்துவிட்டது உனக்கு என்னதான்டா வேணும் கேட்டு தொலை என்று சத்தமாக கத்தினார் பண்ணையார்.
அதன் பின் மாணிக்கம் மெதுவாக எனக்கு கரும்பு வேண்டும் என்றார உடனே வேலையாட்களிடம் சொல்லி கரும்பு ஒன்றும் முழுசாக கொண்டு வரச் சொன்னார். அதை மாணிக்கத் திடம்கொடுத்தார் பண்ணையார் .
அதை வாங்கியதும் மாணிக்கம் தூக்கி எறிந்து விட்டான். பண்ணையாருக்கு பயங்கர கோபம் வந்துவிட்டது. கரும்பு தானடா கேட்டாய் கொண்டு வந்து கொடுத்து விட்டேனே இன்னும் எதற்காக அழுகிறாய் என்றார் பண்ணையார். எனக்கு சிறு சிறு துண்டுகளாக வெட்டி தர வேண்டும் என்றார். உடனே வேலையாட்கள் சிறு சிறு துண்டுகளாக வெட்டி கையில் கொடுத்தார்கள். அப்போதும் மாணிக்கம் வேகமாக அழ தொடங்கினான்.
மறுபடியும் பண்ணையாருக்கு கோபம் அதிகமாகிவிட்டது. இன்னும் என்னடா செய்ய வேண்டும் என்று கத்தினார். எனக்கு உடைந்த துண்டுகளை மறுபடியும் ஒன்றாக ஒட்ட வைத்து தர வேண்டும் என்று அழுதான். உடனே பண்ணையாருக்கு சிரிப்பு வந்துவிட்டது, வேலையாட்களும் கலகலவென்று சிரித்து விட்டார்கள்.
பண்ணையார் மாணிக்கத்தை பார்த்து உண்மைதான்டா குழந்தைகள் அழுகையை நிறுத்தவே முடியாது போல என்னை மன்னித்துவிடு என்றார்