ஒரு ஊரில் வண்ணான் ஒருவன் வெகு நாட்களாக வாழ்ந்து வந்தான். அவனிடம் ஒரு கழுதையும் இருந்தது.
அந்த கழுதையை அழைத்துக் கொண்டு ஊருக்கு சென்று ஊர் மக்களிடம் துணிகளை வாங்கிக் கொண்டு ஊருக்கு வெளியே உள்ள ஆற்றங்கரைக்கு சென்று அந்தத் துணிகளை அலசி துவைத்து உலர வைத்து மறுபடியும் ஊருக்குள் சென்று அவரவரிடம் துணிகளை ஒப்படைத்து அந்த துணிக்கான கூலியையும் பெற்றுக் கொள்வான். இப்படியே பல வருடங்களாக தன் தொழிலை செய்து வருகிறான் இந்த வண்ணான்.
காலப்போக்கில் அனைத்து வீடுகளிலும் வாஷிங் மெஷின் வந்துவிட்டது. எனவே ஊர் மக்களில் பலர் இந்த வண்ணாரிடம் துணியை கொடுப்பதில்லை. இதனால் பெரிதும் முடங்கிப் போனது இவனது தொழில். உணவிற்கு கூட வழியில்லாமல் திண்டாடிக் கொண்டிருந்தான் இந்த வண்ணான்.
மேலும் அவனது கழுதைக்கு கூட தீனி வாங்க போட காசு இல்லாமல் இருந்தான். பெரிதும் உணவு உட்கொள்ளாத அந்த கழுதையானது மேலும் உடல் மெலிந்தது. தன் கழுதையின் நிலையைக் கண்டு மிகவும் வருந்தினான் இந்த வண்ணான்.
ஒரு நாள் ஆற்றங்கரை ஓரத்தில் நடந்து கொண்டிருக்கும் பொழுது கீழே கிடந்த புளித்தண்ணானது இந்த வண்ணானின் கண்ணில் பட்டது. அந்த புலி தோலை எடுத்து தன் கழுதைக்கு போர்த்தி விட்டான்.
அன்று இரவு பொழுதில் ஆற்றங்கரைக்கு சென்ற சிலர் இந்த புலித்தோல் போர்த்திய கழுதையை பார்த்து புலி தான் வந்துவிட்டது என்று பயந்து ஓடினர். இதைக் கண்ட வண்ணானுக்கு ஒரு நல்ல யோசனை கிட்டியது.
புலித்தோல் போர்த்திய தன் கழுதையை வயல்வெளிகளில் மேய செய்தால் இந்த வண்ணான். ஊர் மக்களும் அது புலி தான் வந்துவிட்டது என்று அதை விரட்டாமல் பயந்து ஓட தொடங்கினர். தன் கழுதையும் வயிறார உணவு உண்ணத் தொடங்கியது.
இதே போல் பல நாட்களாக வயல்வெளிகளில் மேயச் செய்தான். அன்று ஒரு நாள் வழக்கம் போல் தன் கழுதையை அழைத்துக் கொண்டு புலித்தோலை போர்த்தி விட்டு வயல்வெளிகளில் மேயச் செய்யும்போது அருகிலிருந்த பெண் கழுதையானது கனைக்க தொடங்கியது. இதே கண்டது இந்த புலித்தோல் போர்த்திய கழுதையானது கனைக்க தொடங்கியது.
இதைக் கண்டது ஊர் மக்கள் கழுதை தான் புலித்தோல் போர்த்தி இருக்கிறது என்று கண்டறிந்து அந்த கழுதை பிடித்து அடித்தனர். மேலும் அந்த வண்ணானை கண்டித்தனர் ஊர் மக்கள். இந்த கதையில் இருந்து நாம் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் மற்றவர் பொருட்களுக்கு நாம் என்றும் ஆசைப்படக்கூடாது என்பதே ஆகும்.