வணக்கம் நண்பர்களே இந்த ஒரு உலகத்துல யாரா இருந்தாலும் அவர்களிடம் சின்னதா ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினால் அவர்களின் வாழ்க்கை தானாகவே மாற்றமடையும். இந்த ஒரு தலைப்பை நீங்கள் முழுமையாக படிக்கும் பொழுது இதில் ஒரு சில நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் நடந்திருக்கக்கூடும் ஆகையால் சில விஷயங்கள் கூட நீங்கள் இந்த ஒரு தலைப்பினை படித்து உங்கள் வாழ்வில் இன்னும் சில மாற்றங்களை கொண்டு வர முடியும்.
ஆடை / Drees
பொதுவா எல்லாருமே பாத்தீங்கன்னா புதிய புதிய ஆடைகளை அணிவதும் நம் அணியும் ஆடைகளை மற்றவர்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்று எல்லோர் மனதிலும் இருக்கக்கூடிய ஒரு ஆசை தான். நீங்கள் அணியும் ஆடையை யாராவது நல்லா இருக்கு அப்படின்னு சொல்லும் பொழுது உங்களிடம் ஒரு தனித்துவமான ஒரு தன்னம்பிக்கை ஒன்று வெளிப்படும் இந்த ஒரு விஷயம் இன்னொரு வாழ்விலும் நடந்திருக்க கூடும். ஆகையால் ஒரு ஆடை கூட உங்களின் தன்னம்பிக்கையை வளர்க்கக் கூடிய அளவிற்கு சக்தி உள்ளது.
கைக்கடிகாரம் / watch
ஒரு சிலருக்கு கைக்கடிகாரம் அணிவது பிடிக்காது ஆனால் கைகடிகாரம் அணிவதன் மூலம் நம்மிடம் ஒரு தன்னம்பிக்கையான பேச்சுத் திறன் வெளிப்படும் இந்த ஒரு விஷயம் அறிவியல் பூர்வமாக சொல்லப்படுகிறது ஆகையால் நீங்கள் ஏதும் ஒரு பேச்சு கூடத்தில் பேசும் பொழுது கையில் கைக்கடிகாரம் கட்டிக்கொண்டு பேசிப் பாருங்கள் உங்களின் தன்னம்பிக்கை அங்கே உங்களுக்கு தெரியும்.
செப்பல் / shoe 👟
செப்பல் அணிவதன் மூலம் என்ன ஒரு மாற்றத்தை கொண்டு வரலாம் என்று உங்களின் பல சந்தேகம் ஏற்படும். நீங்கள் சாதாரணமாக ஒரு செப்பலை அணிந்து நடக்கும் பொழுதும் ஒரு ஷூ அணிந்து நடக்கும்பொழுதும் உங்களிடம் ஒருவித மாற்றத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் ஆகையால் நம் அணியும் ஆடையில் இருந்தும் அடி பாதத்தில் இருக்கும் ஷூ வரை நம் வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வரலாம்.
நீங்கள் பின்பற்ற வேண்டிய ஐந்து வழிமுறைகள்
- நீங்கள் மற்றவர்களிடம் பேசும் பொழுது அவர்கள் உங்களிடம் கேட்கும் கேள்விக்கு மட்டும் நீங்கள் பதில் அளித்தால் மட்டுமே போதும் உங்களுக்குத் தெரிந்த அனைத்துமே சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதனால் நீங்கள் அவர்களிடம் ஒருவித தனித்துவமான நபராக தெரிவீர்கள்.
- உங்களுக்கு மதிப்பு இல்லாத இடத்தில் நீங்கள் பேசுவது தவறு.
- நீங்கள் மற்றவரிடம் பேசுங்கள் ஆனால் அளவாக பேசுங்கள்.
- எப்பொழுதும் யாரையும் சார்ந்து இருக்காதீர்கள் உங்களுக்கென ஒரு அடையாளத்தை உருவாக்குங்கள்.
- அதிகம் பேசும் நபர்களை விட பேசுவதை கேட்கும் நபர்களை அதிகம் பிடிக்கும் என அறிவியல் பூர்வமாக சொல்லப்படுகிறது.