வணக்கம் நண்பர்களே இந்த ஒரு கதையில் நம் ஒரு வித புதிதான மாயாஜால கதையை தான் பார்க்க உள்ளோம் இந்த ஒரு கதை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மிகவும் பிடித்ததாக இருக்கும் என நம்புகிறோம் இந்தக் கதை ஆரம்பத்தில் முடியும் வரை விறுவிறுப்பான கதையாக இருக்கும்..
முன்னோர் காலத்தில் மனிதர்கள் கண்ணுக்கு தெரியாத ஒரு மாயாஜால உலகம் உள்ளது இந்த ஒரு மாயாஜால உலகத்தில் ஏகப்பட்ட மாயாவிகள் மந்திரத் தந்திரங்களால் வாழ்ந்து கொண்டு வந்தனர் இவர்களின் வேலையே மனிதர்கள் என்ன என்ன செய்கிறார்கள் என்பதை பார்ப்பதே இவங்களது வேலையாகும். இப்படிப்பட்ட மாயாஜால உலகத்தில் நல்லதுன்னு ஒன்னு இருந்தா கெட்டதுன்னு ஒன்னு இருக்கும் அதே போல தான் நரகவாசல் இந்த ஒரு நரகவாசலில் ஏகப்பட்ட சாத்தான்கள் இருந்தன
இந்த ஒரு சாத்தான்கள் பூமிக்கு சென்று விடாமல் இந்த மாயாஜால உலகத்தினர் இதனை கட்டுப்படுத்திக் கொண்டு வந்தனர் இந்த ஒரு சாத்தான்கள் பூமிக்குள் ஊடுருவி விட்டால் அங்கு பல மனிதர்கள் காணாமல் போய்விடுவார்கள் ஏனென்றால் சாத்தான் அல்லவா கெட்டது மட்டும் தான் செய்யும் அதுகளிடமிருந்து நம் நல்லதுகளை எதிர்பார்க்கக் கூடாது.
பூமியில் எப்படி பறவைகள் விலங்குகள் இருக்கிறதோ அதேபோல் மாயாஜால உலகத்திலும் நரகவாசலிலும் விலங்குகள் பறவைகள் இருந்தன. அந்த நரகவாசலை பாதுகாத்துக் கொண்டு வரும் ஒரு ஐந்து காலுடன் இருக்கும் சிங்கம் இப்படிப்பட்ட ஒரு விலங்கு மாயாஜால உலகத்தினரை ஏமாற்றிவிட்டு எப்படியோ பூமிக்குள் ஊடுருவி விட்டது இது பலகாலமாக மாயாஜால உலகத்தினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அந்த ஐந்து கால் சிங்கம் பல மனிதர்களை வேட்டையாடி உள்ளது இதனைப் பற்றி ஒரு சில பூமி வாசிகள் இது என்ன ஒரு மிருகம் இது எங்கிருந்து வந்தது என்று தெரியாமல் பலரும் மூளை குழம்பிப் போயிருந்தன. இந்த ஒரு மிருகத்தை பிடிக்க மாயாஜால உலகத்தினர் இந்த ஒரு பூமிக்கு வரத் தொடங்கின.
அந்த ஒரு மாயாஜால உலகத்தினர் பூமிக்கு வந்து அந்த ஒரு மிருகத்தை தேடத் தொடங்கினர் என்னதான் மாயாஜால உலகத்தினராக இருந்தாலும் அவர்கள் பூமியில் எந்த ஒரு மாயாஜால சக்தியையும் உபயோகிக்க கூடாது என்று மாயாஜால உலகத்தின் கட்டுப்பாடு. அந்த மிருகத்தை பிடிக்க மாயஜல உலகத்தினர் அடர்ந்த காட்டில் அதனை தேட தொடங்கினார் பல மாதங்களாக அந்த மிருகத்தை தேடிக்கொண்டு அந்தக் காட்டுக்குள் அலைந்து கொண்டிருந்தனர்.
ஒருவழியாக ஒரு அடர்ந்த குகைக்குள் அந்த மிருகத்தின் உறுமல் சத்தம் கேட்டது அந்த சத்தத்தை கேட்டதும் என்னதான் மாயாஜால உலகத்தினராய் இருந்தாலும் அவர்களுக்குள் ஒரு பயம் ஏற்பட்டது. அவர்கள் நினைத்தது சாதாரண மிருகம் ஆனால் அந்த நரகத்திலிருந்து வெளிவந்தது நரகவாசலை பாதுகாக்கும் ஐந்து கால் சிங்கம்
அந்த ஐந்து கால் சிங்கத்தை இவர்கள் ரொம்ப சிரமப்பட்டு அதை ஒரு வழியாக பிடித்து விட்டன இந்த ஒரு ஐந்து கால் சிங்கத்தை அவர்களின் நரகவாசலுக்கே அனுப்பி வைத்தன. இந்த மிருகம் என்னதான் நரகவாசலில் இருந்து தப்பித்து பூமிக்குள் ஊடுருவினாலும் பல மனிதர்களை காவு வாங்கியுள்ளது இது மாயாஜால உலகத்தினரின் தவறுதலால் ஏற்பட்ட ஒரு விபத்து. இதனை சரி செய்ய அவர்கள் இறந்து போனவர்களை மீண்டும் வர வைத்து இந்த மிருகத்தைப் பற்றி தெரிந்த எல்லோருக்குமே இந்த ஒரு நினைவுச் அந்த மாயாஜால உலகத்தினர் அழித்துவிட்டன.
அந்த மாயாஜால உலகத்தினர் அவ்வளவுதான் நடந்த தவறை நாம் சரி செய்து விட்டோம் இனி நம் பூமிக்கு வர தேவையில்லை என்று அவர்கள் பூமியிலிருந்து கிளம்பிவிட்டன
மாயாஜால உலகத்தினர் என்னதான் மனிதர்களின் நினைவை அளித்தாலும் அவர்கள் ஒரு சில புத்தகங்களிலும் ஒரு சில கல்வெட்டுகளிலும் அந்த மிருகத்தின் ஓவியத்தை வரைந்து வைத்திருந்தனர் இந்த ஒரு கல்வெட்டும் புத்தகங்களில் இருக்கும் கதைகளும் இன்னும் அந்த நரகத்தின் மிருகங்களை பற்றி பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்
நம் அடுத்து வரும் கதையில் இன்னும் சுவாரசியமான கதைகளை பார்ப்போம்.