அன்னைக்கு ஒரு மாலைப் பொழுதில் ஒரு பூங்காவில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தனர் குழந்தைகள் விளையாடிக் கொண்டும்,பெரியவர்கள் பேசிக் கொண்டும், இன்னும் சிலர் அந்தப் பூங்காவில் நடந்து கொண்டிருந்தார்கள்.
அப்போது அந்த பூங்காவில் ஒருவன் முகத்தில் ஒரு பதட்டத்துடனும் அவன் கையில் எதுவும் மறைத்துக் கொண்டு அங்கும் இங்கும் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.
நான் அவனைப் பார்த்ததை அவன் பார்த்ததும் அவன் உடனே என்னை நோக்கி வேகமாக வந்தான். அப்போது அவன் கையில் வைத்திருந்த ஒரு வைர கல்லை என்னிடம் காட்டினான் அதைப் பார்த்ததும் என்ன அறியாமலே என் கண்கள் ஜொலிக்க ஆரம்பித்தன.
அவன் என்னைப் பார்த்து இந்தக் கல்லுக்கு நீதான் சரியான ஆளாக இருப்பாய் என்று அந்த வைரக்கல்லை என்னிடம் கொடுத்து விட்டு அவன் அந்த இடத்தை விட்டு வேக வேகமாக நடந்து சென்றான். எனக்கு ஒன்றும் புரியவில்லை யார் இவன் இந்த வைரக்கல்லை எதுக்கு என்னிடம் கொடுத்து சென்றான் என்றும் எனக்கு விளங்கவில்லை.
சரி நாம் இந்த வைரக்கல்லை காவல்துறையிடம் ஒப்படைத்து விடலாம் என்று நினைத்தேன் அந்த பூங்காவை விட்டு அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு சென்றேன் அங்கு சென்றதும் இந்த வைரக்கல்லை பற்றி முழு தகவலையும் காவல்துறையிடம் சொல்லி விடலாம் என்று எண்ணினேன்.
அப்போது அந்தக் காவல் நிலையத்திற்கு சென்ற எனக்கு என் கண்ணால் நம்ப முடியாத ஒரு அதிர்ச்சி ஒன்று நடந்தது. என்னிடம் இந்த வைரக்கல்லை யார் கொடுத்தானோ அவன் புகைப்படம் அங்கு இருந்தது அவன் இறந்து இரண்டு நாட்கள் மேலாகின என்றும் இருந்தது.
இதைப் பத்தி அங்கு இருக்கும் காவல்துறையிடம் கேட்கும் பொழுது இவன் யாரென்று தெரியவில்லை ஆனால் மர்மமான முறையில் இறந்து கிடந்தான் என்பது மட்டும் தெரிவித்தார்கள். இந்த நிலைமையில் நான் இந்த கல்லை பற்றி இவரிடம் கூறினால் நம்மளை பைத்தியக்காரன் என்று கூறுவார்கள் என்று இந்த வைரக்கல்லை வீட்டிற்கு எடுத்துச் சென்றேன்.
என் மனதில் ஏகப்பட்ட கேள்விகளும் குழப்பங்களும் ஏற்பட்டன யார் இவன் என்னிடம் இந்த ஒரு கல்லை கொடுத்தான் நான் தான் இந்த கல்லுக்கு சரியானவன் என்றும் ஏன் கூறினேன் என்று எனக்கு பல கேள்விகள் எழும்பினார். அப்போதே அந்தக் கல்லை புகைப்படம் எடுத்து googleளில் இந்தக் கல்லைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்.
இந்த ஒரு வைரக்கல்லை கூகுளில் தேடும் பொழுது யாரும் இந்த கல்லை பற்றி குறிப்பிடவில்லை ஆனால் ஒருவர் இந்தக் கல்லை வச்சிருக்கிற மாதிரி ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். சரி இவரை வைத்து நாம் இந்த கல்லை தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்.
அவர் இருப்பிடத்தை கண்டுபிடித்து அவர் இருக்கும் இடத்திற்கு சென்றேன் அப்பவும் எனக்கு ஒரு பெரும் ஏமாற்றம் அந்த வைரக்கல் வைத்திருந்த நபர் ஆல்ரெடி இறந்தவர் ஆவார். அங்க இருக்கிறவங்க கிட்ட விசாரிக்கும் போது அவங்களுடைய தாத்தா தான் என்று சொன்னார்கள்.
அவர்களிடம் பேசிய படியே இந்த ஒரு வைரக் கல்லை காட்டும் பொழுது அவர்கள் கண்ணில் ஒருவித பயமும் என்னை உடனே இந்த இடத்தை விட்டு நீங்க வெளியே போங்க அப்படின்னு அவங்க என்ன போக சொன்னாங்க. ஆல்ரெடி உங்களுக்கு இந்த கல்லை பற்றி தெரியுமா கேட்டேன் அவர்கள் இது ஒரு சபிக்கப்பட்ட கல் இந்த கல்லை யார் யாருக்கு கொடுக்கிறார்களோ அவர்கள் கூடிய விரைவில் இறந்து விடுவார்கள் என்று என் தாத்தா எங்களிடம் சொல்லி இருக்கிறார்.
இதைக் கேட்டதும் என்னால் ஒருபோதும் நம்ப முடியவில்லை எப்படி இந்த சபிக்கப்பட்ட கல் வந்தது இது யாரால் உருவாக்கப்பட்டது என்று உங்களுக்கு தெரியுமா என்று கேட்ட பொழுது அதெல்லாம் எங்களுக்கு தெரியாது இதுனால்தான் எங்கள் தாத்தா எங்களை விட்டு சென்றார் மீண்டும் இந்த கல் எங்களிடம் வந்து விடுமோ நீங்கள் இனிமேல் எங்களை பார்க்க வர வேண்டும் என்று கூறினார்கள்.
இந்தக் கதையின் இரண்டாம் பாகத்தில் மீதியுள்ள கதையை நாம் பார்ப்போம்……