வணக்கம் நண்பர்களே நீங்கள் யாருமே எதிர்பார்க்காத ஒரு கதை தான் இந்த ஒரு பத்தியில் பார்க்க போறோம் இது ஒரு கற்பனை மட்டுமே ஆனால் இது உண்மையாகவே இருந்தால் எப்படி இருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
அமெரிக்காவில் 2050 காலகட்டத்தில் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஜான் என்பவர் அன்றாட வேலைகளை செய்து அவருக்கு தேவையான தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு வாழ்ந்து கொண்டு வந்தார் அவருக்கு அந்த ஒரு காலகட்டத்தில் நிறைய தேவைகள் இருந்தும் அவரிடம் எந்த ஒரு பணமும் அவ்ளோ பெரிதாக இல்லை இதனால் அவரால் அவர் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை.
ஒருநாள் அவர் வாழ்க்கையை நினைத்துக் கொண்டு சோகமாக நடந்து கொண்டு சாலையில் சென்று கொண்டிருந்தார் அப்பொழுது ஒரு குப்பைத் தொட்டியில் ஒருவித ஒளியுடன் ஒரு கருவி இருந்தது இது என்னவென்று தெரியவில்லை ஆனால் இதை விற்றால் நன்கு காசு வரும் என்று நினைத்து அதை எடுத்துக் கொண்டு அவருடைய வீட்டுக்கு சென்றார்.
அந்த ஒரு கருவியானது நம்மால் யாரும் செல்ல முடியாத நம்ம இறந்த காலத்திற்கு கொண்டு செல்லும் டைம் டிராவல் இப்படிப்பட்ட ஒரு மிஷினை அவர் என்னவென்று தெரியாமல் இதனை விற்று விடலாம் அப்படி என்று நினைத்தார். சிறிது நேரம் கழித்து அவர் இந்த ஒரு கருவி என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்து அந்த ஒரு கருவியை அவர் ஆராய்ச்சி செய்தார்.
அப்பொழுதுதான் அவர் கை தவறுதலாக அதில் இருந்த ஏதோ ஒரு பட்டனை அழுத்தும் பொழுது அவர் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னாள் அவர் எங்கு இருந்தாரோ அதே இடத்தில் அவர் நின்று கொண்டிருந்தார் அவருக்கு ஒன்றுமே புரியவில்லை கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. உடனே அவர் இது எந்த மாதிரி கருவி என்று அவருக்கு சிறிது விளங்க ஆரம்பித்தது.
இந்த ஒரு கைவியை நம் விற்க வேண்டாம் இந்த கருவியை வைத்து நம்மால் ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்துக் கொண்டே நடக்கத் தொடங்கினார். அவருக்கு சிறுவயதிலிருந்தே வியாபாரம் செய்யும் ஆசை இருந்தது ஆனால் அவரிடம் போதுமான பணம் இல்லாததால் அந்த ஒரு வியாபாரத்தை அவரால் செய்ய முடியவில்லை இப்பொழுது தான் அவருக்கு ஒரு அருமையான யோசனை வந்தது.
இந்த ஒரு கருவியை வைத்து நம் இறந்த காலத்திற்கு சென்று இங்கு கிடைக்கும் சிறிய பொருட்களை அங்கு விற்றால் நிறைய பொற்காசுகள் கிடைக்கும் என்று நினைத்தார் அங்கு நம் ஏதாவது வாங்கினால் இப்ப உள்ள காலகட்டத்தில் நமக்கு அது சொந்தமாக இருக்கும் என்று நினைத்தார்.
அதனால் அவர் கையில் இருந்த காசை எல்லாம் வைத்து சிறு சிறு பொருட்களை வாங்கி அவர் 1990 இந்த ஒரு காலகட்டத்திற்கு பயணித்து வந்து அவர் வியாபாரத்தை தொடங்கினார் அங்கு உள்ள சிலோர் இவர் அணிந்திருக்கும் உடை மற்றும் பொருட்களை பார்த்து மிகவும் வியந்தனர் இவர் வெளிநாட்டவர் என்று நினைத்தனர் எந்த ஒரு நாட்டில் இப்படி ஒரு ஆடை இருக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பினர் அவர் வைத்திருக்கும் பொருள் எல்லாம் அவர்களுக்கு பார்த்தவுடன் வாங்கனும் போல் தோன்றியது. இந்தோ வியாபாரத்தை நன்றாக அன்று முடித்துவிட்டு அவருக்கு தேவையான பொருட்களை அதே ஊரில் வாங்கிக் கொண்டு அவருடைய காலகட்டத்திற்கு சென்றார்.
அவர் எந்த ஒரு வியாபாரத்தை நம் இன்னும் பெரிதாக கொண்டு செல்ல வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு நாம் ஏதாவது நிலங்களை வாங்கி அவற்றை நன்கு பராமரித்து கொண்டால் இந்த ஒரு காலகட்டத்தில் அது நல்ல விலைக்குப் போகும் என்று நினைத்தார்.
போகப்போக அவருக்கு ஆசை என்பது பேராசையாகவும் மாறியது இதனால் அவர் அதிகப்படியான பணங்களை வைத்திருந்தார் கோடீஸ்வரர்களில் இவரும் ஒருவராக திகழ ஆரம்பித்தார். இவருக்கும் குடும்பங்கள் குழந்தைகள் என தோன்றின
இவர் வைத்திருந்த டைம் ட்ராவல் கருவி மூலம் தான் இவர் இவ்வளவு பெரிய பணக்காரர் ஆக இருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது அவர்கள் குடும்பத்திற்கு கூட தெரியாது இந்த ஒரு கருவியை அவர் யாருக்கும் தராமல் தனக்கு மட்டும் தெரிந்த ஒரு இடத்தில் அதை மர்மமாக வைத்திருந்தார். அவரிடம் அதிக பணம் இருந்ததால் அவருக்கு அதிக சொந்தங்கள் உண்டாகின. எந்த ஒரு தேவையாக இருந்தாலும் இவரிடம் மட்டுமே வந்து அவர்கள் கேட்பார்கள் இவருக்கு அது பெரும் ஒரு மகிழ்ச்சியாக இருந்தது.
காலங்கள் போக போக அவருக்கு பணத்தின் மேல் இருந்த ஆசை குறைந்தது அவரால் சரியாக நிம்மதியாக தூங்க கூட முடியவில்லை அப்போதுதான் அவர் நினைத்தால் நம்மிடம் காசு இல்லாதபோது கூட நம் நிம்மதியாக தூங்கினோம் ஆனால் இப்பொழுது நம்மிடம் போதும் என்கிற அளவைவிட பணம் அதிகமாக இருந்த பொழுதிலும் நம்மால் தூங்க முடியவில்லை. அவரின் பசங்களும் பணத்தின் மீது பேராசை கொண்டு சொத்தின் மீது எனக்கு தான் அதிக உரிமை உள்ளது என்று சண்டை போட்டுக் கொண்டிருந்தனர் இந்த ஒரு பிரச்சனையும் அவர் மண்டையில் ஓடிக்கொண்டிருந்தது. பணம் இருந்தால் நிம்மதியான வாழ்வையும் மகிழ்ச்சியாக வாழலாம் என்று நினைத்த அவர் இவ்வாறு நடக்கும் என்று அவர் ஒருபோதும் நினைக்கவில்லை பணத்தின் மீது இவ்வளவு பேராசை கொண்ட நம் நம் பசங்களும் அதன் மீது இவ்வளவு பேராசை வைத்துள்ளனர் என்று தெரிந்து கொண்டார
இதனால் அவர் ஒரு முடிவு எடுத்தார் இந்த ஒரு டைம் ட்ராவல் வைத்து நம் பழைய நிலைமைக்கு திரும்பி விடலாம் இந்த ஒரு வாழ்க்கை நமக்கு வேண்டாம் என்று நினைத்தார். உடனே அவர் பழைய காலகட்டத்திற்கு சென்று அவர் வாங்கிய எல்லா பொருட்களையுமே அவர் அங்கு உள்ள அனாதைகளுக்கு தானமாக வழங்கிவிட்டு ஒரு பெரும் மன நிம்மதியுடன் அவருடைய காலகட்டத்திற்கு வந்து பார்த்தார் அப்போது எல்லாமே மாறி இருந்தது அவருடைய பழைய வீடு அவர் எப்படி இருந்தாரோ அப்படியே இருந்தது அவர் எல்லாம் இறந்த காலத்தில் மாற்றியதால் அவருடைய எதிர்காலத்திலும் அனைத்தும் மாறிவிட்டது.
அந்த ஒரு இரவு அவர் நன்கு சாப்பிட்டுவிட்டு அந்த வானத்தைப் பார்த்துக் கொண்டு நடந்தது எல்லாம் ஒரு கனவு போல் நினைத்துக் கொண்டு நிம்மதியாக தூங்கினார். அந்த ஒரு டைம் டிராவல் எங்கு எடுத்தாரோ அங்கேயே வைத்துவிட்டார்.
உங்களுக்கு டைம் டிராவல் கிடைத்தால் உங்கள் எதிர்காலத்தை மாற்றுவீர்களா இல்லை அதை வைத்து நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை கூறுங்கள்.