முறுக்கு வியாபாரியின் இரண்டு மகன்கள் கதை தமிழ்| A story of two sons of a biscuit merchant

வணக்கம் நண்பர்களே நம் எப்போதுமே மர்மமான கதையை பற்றி தான் பார்த்திருப்போம் ஆனால் இன்னைக்கு நம்ம பாக்க போற கதை பாத்தீங்கன்னா அது மாதிரி இல்லாம கொஞ்சம் புத்திசாலித்தனமாக இருக்கிற மாதிரி கதையை தான் இன்னைக்கு நம்ம பாக்க போறோம்.

ஒரு ஊரில் முன்பு ஒரு காலத்தில் ஒரு முறுக்கு வியாபாரி பல வருடங்களாக முறுக்கு விற்று வாழ்ந்து வந்தார். அவர் எல்லா ஊர்களுக்கும் சென்று அவர் முறுக்குகளை விற்று அவர் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். ஒரு மகனின் பெயர் ராஜேஷ் மற்றொரு மகனின் பெயர் சுரேஷ்.

ஒரு நாள் அந்த முறுக்கு வியாபாரி இரண்டு மகன்களை அழைத்து வந்து ஆளுக்கு 50 முறுக்கு வீதம் இரண்டு பேருக்கும் மொத்தம் 100 முறுக்குகள் கொடுத்து அனுப்பி விற்று வர சொன்னார். இவங்க ரெண்டு பேரும் எப்படி முறுக்கு விற்கிறார்கள் என்று அவர் பார்க்க ஆசைப்பட்டார் அதேபோல் இவர்களுக்கு சரிபாதியாக முறுக்குகளை கொடுத்து வேறு ஒரு ஊருக்கு அனுப்பி வைத்தார்.

இந்த ராஜேஷ், சுரேஷ் இருவரில் ராஜேஷ் என்பவன் கொஞ்சம் அறிவாளி, ஆனால் சுரேஷ் என்பவன் கொஞ்சம் முட்டாள். முதலில் சுரேஷ் தன்னுடைய 50 முறுக்குகளை எடுத்துக் கொண்டு ஊருக்குள்ளே சென்று விற்கத் தொடங்கினான்.

விற்றுக் கொண்டிருக்கும்போது அவனுக்கு பசிக்க தொடங்கியது.அப்போது அவன் 50 முறுக்குகளில் இருந்து இரண்டு முறுக்குகளை எடுத்து உண்டான். மீதம் 48 முறுக்குகளை விற்றுவிட்டு அந்த காசை அப்பாவிடம் கொண்டு ஒப்படைத்தான்.தன் அப்பாவிடம் அப்பா எனக்கு பசி ஏற்பட்டதால் இரண்டு முறுக்குகளை சாப்பிட்டு மீதம் 48 முருங்கைகளை விற்று உங்களிடம் அதற்கான காசை கொடுக்கிறேன் என்று கூறினான்.

சிறிது நேரத்தில் ராஜேஷ் முறுக்குகளை விற்றுவிட்டு அங்கு வீட்டுக்கு வந்தான். முறுக்கு வியாபாரி தன் மகனிடம் ராஜேஷ் உனக்கு பசி ஏற்பட்டதா? என்று கேட்டார் ?. அதற்கு ராஜேஷ் ஆமாம் அப்பா எனக்கு பசி ஏற்பட்டது. இருந்தாலும் 50 முற்களுக்கான காசு உங்களுடன் ஒப்படைத்துள்ளேன் என்று கூறினான். முறுக்கு வியாபாரி உன் பசிக்கு நீ முறுக்கு களை சாப்பிடவில்லையா என்று கேட்டார்.

அதற்கு ராஜேஷ் சாப்பிட்டேன் அப்பா இருந்தாலும் 50 முறுக்குகளை விற்று விட்டேன் என்று கூறினான். குழம்பிப்போன முறுக்கி வியாபாரி அது எப்படி சாத்தியம் என்று கேட்டார்? .அதற்கு புத்திசாலியான ராஜேஷ் “அப்பா ஒவ்வொரு முறுக்குக்கும் மொத்தம் ஆறு வட்டங்கள் உள்ளன. நான் 50 முறுக்குகளில் இருந்து ஒவ்வொரு முருக்குகும் ஒரு வட்டத்தை சாப்பிட்டேன். எனவே எனது பசியும் மறந்து 50 முறுக்குகளை விற்று அதற்கான காசை உங்களிடம் ஒப்படைத்துள்ளேன் என்று சிரித்தபடியே கூறினான் “.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top