ஒரு சிறிய காடு இருந்தது. அந்த காட்டில் ஒரு பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது.
![](https://goldenfacts11.com/wp-content/uploads/2024/07/1000067429-1024x1024.jpg)
அந்த ஆலமரத்தில் ஒரு தூக்கணாங்குருவி கூடு கட்டி குடும்பத்துடன் இருந்தது. அந்த மரத்தில் குரங்குகளும் வாழ்ந்தது. இரவு ஆனதும் தூக்கணாங்குருவிகள் அதன் கூட்டில் வந்து அமர்ந்து நன்றாக தூங்கும்.
![](https://goldenfacts11.com/wp-content/uploads/2024/07/1000067430-1024x1024.jpg)
அந்தக் குரங்குகள் மரத்தில் அமர்ந்தபடியே தூங்கிக் கொண்டிருக்கும். அப்படி இருக்க ஆண் தூக்கணாங்குருவி ஒரு குரங்கிடம்கேட்டது ஏன் இப்படி மரக்கிளையிலேயே தொங்கிக்கொண்டு தூங்குகிறீர்கள் எங்களைப் போல் ஒரு கட்டி இருந்தால் நன்றாக அமர்ந்து தூங்கலாமே என்று கேட்டது.
![](https://goldenfacts11.com/wp-content/uploads/2024/07/1000067431-1024x1024.jpg)
உடனே குரங்கிற்கு கோபம் வந்துவிட்டது. எங்களுக்கு தெரியும் நீ ஒன்னும் அறிவுரை கூற வேண்டாம் நாங்கள் கூடு கட்டுவோம் கட்டாமல் இருப்போம் உனக்கு என்ன உன் வேலையை பார் என்று குரங்கு கோபப்பட்டது. உடனே பெண் தூக்கணாங்குருவி ஆண் குருவியைபார்த்து உங்களுக்கு ஏன் தேவையில்லாத வேலை உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் அந்தக் குரங்கிற்கு அறிவுரை கூறப்போய் அது உங்கள் மேல் கோபப்படுகிறது அமைதியாக இருங்கள் என்று சொன்னது. அதற்கு ஆண் தூக்கணாங்குருவி கையில்லாத நாமலே அழகாக ஒரு கூடு கட்டி நம் குழந்தைகளோடு வாழ்கிறோம் அந்தக் குரங்கிற்கு கை கால்கள் நன்றாக இருக்கிறது அதன் குழந்தைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறதே என்று நல்ல எண்ணத்தோடு நான் கூறினேன் அது தப்பாகிவிட்டது என்றது. அதற்கு பெண் தூக்கணாங்குருவி போதும் இனி நீங்கள் அந்த குரங்கிடம் பேச்சு வைத்துக் கொள்ளாதீர்கள் என்று திட்டியது. ஒரு நாள் பயங்கரமான மழையும் காற்றும் வீசியது . அப்போது அந்த தூக்கணாங்குருவிகள் மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டு அதன் கூட்டில் சந்தோசமாக அமர்ந்திருந்தது.
![](https://goldenfacts11.com/wp-content/uploads/2024/07/1000067432-1024x1024.jpg)
அந்தக் குரங்குகள் அனைத்தும் குளிரில் நடுங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தது. அதைப் பார்த்து அந்த ஆண் தூக்கணாங்குருவி ரொம்பவும் வருத்தப்பட்டது. மறுபடியும் அந்தக் குரங்கிடம் சொன்னது. அன்றே நான் சொன்னது போல் ஒரு கூடு கட்டி இருந்தால் இப்போது நீங்களும் மழையில் நனையாமல் சந்தோசமாக இருந்திருக்கலாம் என்றது. ஏற்கனவே குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த குரங்கிற்கு கோபம் தலைக்கு ஏறியது.
![](https://goldenfacts11.com/wp-content/uploads/2024/07/1000067433-1024x1024.jpg)
உடனே அந்தக் குரங்கு தூக்கணாங்குருவி பார்த்து நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன் என் விஷயத்தில் தலையிடாதே என்று மறுபடிமறுபடி எனக்கு அறிவுரை சொல்லிக் கொண்டே இருக்கிறாய் எனக்கு கூடு கட்ட தெரியாது ஆனால் இருக்க கூட பிச்சு போட தெரியும் என்று சொல்லி அந்த தூக்கணாங்குருவி கூடை துண்டு துண்டாக பிரித்து எறிந்தது. அதைப் பார்த்தபெண் தூக்கணாங்குருவிக்கு ஆண் குருவியின் மேல் பயங்கர கோபம் .
![](https://goldenfacts11.com/wp-content/uploads/2024/07/1000067434-1024x1024.jpg)
அன்றே சொன்னேன் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் யாருக்கும் அறிவுரை சொல்லாதீர்கள் என்று இப்போது நம் நிலைமையை பார்த்தீர்களா நம் குழந்தைகளும் உங்களால் மழையில் நனைந்து நடுங்குகின்றது என்று சொல்லி வருத்தப்பட்டது. ஆண்குருவிசரி என்னை மன்னித்துவிடு இனி நான் யாருக்கும் அறிவுரை சொல்ல மாட்டேன் நாளை நாம் வேற மரத்தில் நல்ல கூடு கட்டுவோம் என்று சொல்லி பெண் குருவியை சமாதானப்படுத்தியது . இதிலிருந்து நாம் என்ன தெரிந்து கொண்டோம் என்றால் நம் வேலை எதுவோ அதை மட்டும் பார்த்தால் போதும் மற்றவர்களுக்கு அறிவுரை கூற கூடாது என்பது தெரிகிறது.
![](https://goldenfacts11.com/wp-content/uploads/2024/07/1000067435-1024x1024.jpg)