வவ்வால் சிறுவனின் கொடூர கொலைகள்|Batman Horror Story Tamil| Mystery story Tamil

வணக்கம் நண்பர்களே இந்த ஒரு கதையில் வரும் கதைகள் அனைத்தும் கற்பனையே, நம் சிறுவயதில் ஸ்பைடர் மேன் சக்திமான் போன்ற கதாபாத்திரங்களை பார்த்து நம்மளும் அதுபோல் மாறலாம் என நினைத்துக் கொண்டிருப்போம் ஆனால் நமக்கு வயது ஆக ஆக தான் அப்படி ஒரு விஷயம் கற்பனை மட்டுமே என்று நமக்கு புரியும் அதே போல தான் இந்த ஒரு கதையும்.

ஒரு சிறுவன் பூங்காவில் அமர்ந்து கொண்டு கையில் தொலைபேசியின் மூலம் வவ்வால் மனிதனின் மூவியை பார்த்துக் கொண்டிருந்தான் அந்த ஒரு மூவியில் வவ்வால் மனிதனை ஜோக்கர் என்ற கெட்டவன் வவ்வால் மனிதனை சாகடிப்பது போல் இருந்தது அந்த கதை.

இந்த ஒரு கதையினை அச்சிறுவன் பார்க்கும் பொழுது அவனுக்கு மிகவும் பயமாகவும் மிகவும் வருத்தமாகவும் இருந்தது இதனால் அவனுக்கு ரொம்ப கோபமும் வந்தது.

அந்த ஒரு சமயத்தில் பூங்காவில் ஒரு ஜோக்கர் பலூன் விற்றுக் கொண்டிருந்தான் அவனை பார்க்கும் பொழுது இந்த ஒரு சிறுவனுக்கு மனதில் ஒரு பயம் ஏற்பட்டது அதுவும் இல்லாமல் இந்த ஜோக்கர் தானே வவ்வால் மனிதனைக் கொன்றது என்ற ஒரு கோபமும் வந்தது.

அந்த ஜோக்கர் பூங்காவில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளிடம் இந்த ஒரு பலனை விற்று காசாக்கிக் கொண்டிருந்தான் ஆனால் அவனுக்கு அடுத்து என்ன நடக்கப் போவது என்று தெரியாமல் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான்.

இந்த ஒரு சிறுவனுக்கு அந்த ஜோக்கரை பார்க்கும் பொழுது எப்படியாவது பழி தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியது ஆதலால் அவனுக்குள் இருந்த மிருகம் வெளிவரத் தொடங்கியது.

அந்த ஒரு சிறுவன் ஒரு கூர்மையான கத்தியை கொண்டு அந்த ஜோக்கரிடம் சென்றான் அந்த ஜோக்கர் அந்த சிறுவனைக் கண்டு மிகவும் அச்சம் கொண்டார்.

அந்த ஜோக்கரின் கண்ணில் ஒருவித பயம் தெரிந்தது யாருடா இந்த சிறுவன் கத்தியை கொண்டு நம் முன்னால் நின்று கொண்டிருக்கிறான் என்று.

அந்த ஒரு சிறுவனிடம் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள அந்த ஜோக்கர் அந்த சிறுவனை தள்ளிவிட்டார் அப்பொழுது அங்கே இருந்த இரண்டு நபர்கள் இந்த ஜோக்கர் அந்த சிறுவனை தாக்கி விட்டார் என்று தவறாக புரிந்து விட்டனர்.

அந்த ஒரு சிறுவன் அலறியபடி கீழே விழுந்ததால் அங்கு உள்ள மக்கள் அந்த ஜோக்கரை முறைத்தபடி பார்த்தனர் அப்பொழுது அந்த ஜோக்கிற்கு மனதில் பயம் உண்டாகி விட்டது. இதை இவர்களிடம் சொன்னால் இவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று அவ்விடத்திலிருந்து ஓடத் தொடங்கினார்.

பின்னாடி அவர்கள் துரத்தும் போது அவர் மிகவும் பயத்துடன் அலறிக்கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடத் தொடங்கினார் இவர்கள் கையில் மாற்றினால் நம்மளை கொன்றுவிடுவார்கள் என்ற பயத்தில் ஓடினார்.

அப்பொழுது அங்கே இருந்த ஒரு மூதாட்டி அந்த ஜோக்கரின் தலையில் தாக்கினார் அந்த ஜோக்கரும் அந்த இடத்தில் விழுந்தான் அப்பொழுது பின்னால் விரட்டிக் கொண்டு வந்த அந்த இருவரும் அந்த ஜோக்கரை பிடித்தனர்.

அந்த ஒரு ஜோக்கரை அந்த மூவரும் அதே இடத்தில் கொடூரமாக அடித்து கொலை செய்தனர் இச்சிறுவன் மவுன சிரிப்பில் சிரித்துக் கொண்டிருந்தான்.

அந்த ஜோக்கர் அலறல் சத்தம் கேட்டு எழுந்த அச்சிறுவன் சிரித்துக்கொண்டு அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் இந்த ஒரு தருணம் அவன் கண்ணில் அந்தக் கொடூர மிருகம் தெரிந்தது.

அந்த மூவரும் அந்த ஜோக்கரை கொன்றனர் இந்த ஒரு சிறுவன் சிரித்துக்கொண்டே ஓடினான் தன்னை ஒரு வவ்வால் மனிதனாக நினைத்துக் கொண்டு ஜோக்கரை கொன்று விட்டோம் என்ற சந்தோசத்தில் பைத்தியக்காரத்தனமாக ஓடினான்.

உங்களுக்கு இது மாதிரியான மர்ம கதைகள் மாய விளையாட்டுக்கள் உங்களுக்கு பிடிக்குமானால் கீழே உள்ள யூடுப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்.

facts in Tamil|illusion facts in Tamil | #shorts #shortsfeed #mystory

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top