ஒரு ஊரில் ஒரு சலவை தொழிலாளி இருந்தான்.அவன் நிறைய கழுதைகள் வளர்த்து வந்தான். ஒரு கூட்டத்தில் இருந்தால் அந்த கூட்டமே கலகலவென்று இருக்கும் அதனால் அந்த ஊர் மக்களுக்கு பொழுது போகவில்லை என்றால் அவனைக் கூட்டி வைத்து கலகலவென்று பேசிக்கொண்டு இருப்பார்கள். அவன் எல்லோரையும் நல்லா சிரிக்க வைப்பான்.
அவன் இருந்தால் பொழுது போவதே தெரியாது. ஒரு நாள் அவன் வளர்க்கும் கழுதைகளுக்கு தீனி இல்லாததால் பக்கத்து ஊருக்கு சென்று தானியங்கள் வாங்குவதற்காக புறப்பட்டான் . அவன் எங்கு சென்றாலும் ஒரு கழுதையின் மேல் ஏறிக்கொண்டு தான் பயணம் செல்லுவான்.
அப்படி சிறிது தூரம் போய்க் கொண்டிருக்கும் போது எதிரே அவன் தோழன் ஒருவன் வந்தான். அவன் அந்த சலவை தொழிலாளியை பார்த்தவுடன் கழுதை மேல் ஏறிக்கொண்டு எங்கு செல்கிறாய் என்று கேட்டான். அதற்கு சலவை தொழிலாளி கழுதைகளுக்கெல்லாம் தீனி இல்லை அதனால் நான் பக்கத்து ஊருக்கு சென்று தானியங்கள் எல்லாம் வாங்கி வர செல்கிறேன் என்று சொன்னான்.
அதற்கு அவன் நண்பன் சொன்னான் நீ இந்த கழுதையில் ஏறி பயணம் செல்கிறாய் இதில் நீ சென்று வருவது என்றால் நடு இரவு ஆகிவிடும் அந்த நேரத்தில்தான் வழி கொள்ளையர்கள் அதிகம் நடமாடுவார்கள் நீ தனியாக வருவதை பார்த்தால் உன்னிடம் இருக்கும் தானியங்கள் கழுதைகள் எல்லாம் பறித்து விடுவார்கள் என்று அவன் நண்பன் கூறினான். அப்போது அந்த சலவை தொழிலாளிக்கு ஒன்றும் புரியவில்லை நான் இப்போது என்ன செய்ய வேண்டும் கழுதைகளுக்கு தானியங்கள் எதுவும் இல்லை என்று சொன்னான்.
உடனே அந்த நண்பன் சொன்னான் என்னிடம் விலை உயர்ந்த ஒரு பெரிய வாழ் ஒன்று வைத்திருக்கிறேன் அதை உன்னிடம் தருகிறேன் எடுத்துக் கொண்டு போ உன்னை யாரும் வழி மறித்தாள் அந்த வலை வைத்து அவர்களை மிரட்டி அனுப்பி விடு என்றான். சரி என்று அந்த சலவை தொழிலாளி நண்பனிடம் வலை வாங்கிக் கொண்டு புறப்பட்டான்.
பக்கத்து ஊரில் இருக்கும் சந்தையில் கழுதைகளுக்கு தானியங்கள் எல்லாம் வாங்கிக் கொண்டு ஊருக்கு திரும்பி வரும்போது வழியில் கொள்ளையர்கள் வழிமறித்தனர். கொள்ளையர்கள் சலவை தொழிலாளியை பார்த்து உன் கையில் இருக்கும் அனைத்து பொருள்களையும் எங்களிடம் கொடுத்துவிடு கழுதையையும் எங்களிடம் கொடுத்துவிட்டு ஓடிவிடு உன்னை உயிரோடு நாங்கள் விட்டுவிடுகிறோம் என்று மிரட்டினார்கள். அதற்கு அந்த சலவை தொழிலாளி என்னிடம் இருக்கும் தானியங்கள் கழுதை இதையெல்லாம் விட உயர்ந்த பொருள் என்னிடம் ஒன்று இருக்கிறது அதை உங்களிடம் நான் கொடுத்து விடுகிறேன் நீங்கள் என்னை விட்டு விடுங்கள் என்றான்.
உடனே அந்த கொள்ளையர்கள்சரி நாங்கள் ஒத்துக் கொள்கிறோம் அந்த விலை உயர்ந்த பொருளை எங்களிடம் கொடு என்றும் சொன்னார்கள் உடனே அந்த சலவை தொழிலாளி அவன் கையில் இருந்த வலை எடுத்து கொள்ளையர்களிடம் கொடுத்தான். அந்த வலை சந்தோசமாக வாங்கிக் கொண்டு கொள்ளையர்கள் அவனை விட்டு விட்டு சென்று விட்டார்கள்.
சலவை தொழிலாளி காலையில் வீடு வந்து சேர்ந்தான். அந்த வால் கொடுத்த நண்பன் சலவைத் தொழிலாளி வீட்டிற்கு காலையில் வந்தான். என்ன நண்பா சந்தைக்கு போய்விட்டு வந்து விட்டாயா? இடையில் ஏதாவது பிரச்சனைகள் நடந்ததா என்று விசாரித்தான். அதற்கு சலவை தொழிலாளி ஆமாம் நான்கு பேர் என்னை வழிமறித்தார்கள் நான் அவர்களிடம் இருந்து தப்பித்து வந்து விட்டேன் என்று சொன்னான்.
அதற்கு அவன் நண்பன் எப்படி நான் கொடுத்து விட்ட வலை வைத்து தான் அவர்களை மிரட்டி அனுப்பி விட்டாயா என்று கேட்டான். அதற்கு அந்த சலவை தொழிலாளி சிரித்துக்கொண்டே அப்படியெல்லாம் ஒன்றுமில்லை அவர்கள் என்னிடம் இருந்த தானியங்களையும் கழுதையையும் தான் கேட்டார்கள் நான் அவர்களிடம் இதைவிட விலை உயர்ந்த ஒரு பொருள் என்னிடம் இருக்கிறது அதை நான் உங்களிடம் கொடுத்து விடுகிறேன் நீங்கள் என்னை விட்டு விடுங்கள் என்று சொன்னேன்
அதற்கு அவர்களும் சரி என்று சொல்லி என்னை விட்டு விட்டு சென்றார்கள் என்றான். அதற்கு அந்த நண்பன் அப்படி என்ன நீ விளைவு உயர்ந்த பொருள் வைத்திருந்தாய் என்று கேட்டான். உடனே சலவை தொழிலாளி நீ கொடுத்த அனுப்பிய வலை தான் அவர்களிடம் கொடுத்துவிட்டு வந்தேன் என்று சொன்னான். அதைக் கேட்டதும் நண்பனுக்கு ஒருபுறம் கோபமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் சிரிப்பு தான் வந்தது.
உங்கள் வீட்டில் நடக்கும் சுப காரியங்களுக்கு எங்களிடம் தாம்பூலப் பைகளும் மற்றும் பத்திரிக்கைகளும் சிறந்த முறையில் செய்து தரப்படும்