ஒரு ஊரில் ஒரு குளம் ஒன்று இருந்தது. அந்தக் குளத்தின் கரை ஓரத்தில் ஒரு நவாமரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தில் நீண்ட நாட்களாக ஒரு குரங்கு ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த மரத்தில் உள்ள பழங்கள் மிகவும் சுவையாக இருக்கும். அதனால் அந்த குரங்கு வேற எந்த குரங்கையும் கூட்டணி சேர்க்கவில்லை தனியாகவே சாப்பிட்டு வந்தது.
இதை அந்தக் குளத்தில் இருந்த முதலை ஒன்று கவனித்துக் கொண்டு இருந்தது. இந்த குரங்கு என்ன சாப்பிடுகிறது தினமும் அதிலிருந்து ஒரு கொட்டையை மட்டும் கீழே போடுகிறதே என்று யோசித்தது. ஒரு நாள் அந்தப் குரங்கிடமே முதலை நீ தினமும் என்ன சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறாய் மேலிருந்து ஒரு கொட்டை மட்டும் கீழே போடுகிறாயே அது என்னது என்று கேட்டது.
அதற்கு அந்தக் குரங்கு கூறியது இந்த மரத்தில் இருக்கும் பழங்களை சாப்பிட்டால் நாம் நீண்ட நாட்கள் வாழலாம் இதில் இருக்கும் பழம் மிகவும் சுவையாக இருக்கும் என்று கூறியது. இதை கேட்ட முதலை நாமும் சாப்பிட்டால் நீண்ட நாட்கள் வாழலாம் என்று தோன்றியது. உடனே குரங்கிடம் கேட்டது எனக்கும் கொஞ்சம் தருகிறாயா நானும் இதை சாப்பிட்டு நீண்ட நாட்கள் வாழ ஆசையாக இருக்கிறது என்று.
உடனே குரங்கு சரி என்று சொல்லிவிட்டு அந்த மரத்தின் கொப்புகளை பிடித்து ஆட்டியது அதிலிருந்து சில பழங்கள் கீழே விழுந்தது. அதை எடுத்து முதலை சாப்பிட ஆரம்பித்தது அதற்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படி தினமும் முதலை குரங்கை ஏமாற்றிவாங்கி சாப்பிட்டது. ஒருநாள் சில பழங்களை எடுத்துக் கொண்டு தன் மனைவிக்கு கொண்டு சென்றது அந்த முதலை. அதை சாப்பிட்ட அந்த பெண் முதலைக்கு ரொம்பவும் பிடித்தது.இன்னும் எனக்கு அதிகமாக வேண்டும் என்று கேட்டது.
சரி நாளை நான் கொண்டு வருகிறேன் என்றும் ஆண் முதலை சொல்லியது. மறுநாள் குரங்கிடம் வந்து ஆண் முதலை கூறியதுஎன் மனைவிக்கும் இந்த நவாப்பழம் ரொம்ப பிடித்திருக்கிறது என் மனைவியும் கேட்டால் அதனால் நீ எனக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாக தருவாயா என்று கேட்டது. உடனே குரங்கும் சரி என்று சொல்லி அதிகம் உதிப்பிவிட்டது. அந்தப் பெண் முதலை அதை தின்றுவிட்டு அதற்கு ஒரு யோசனை வந்தது. இந்த நவாப்பழம் இப்படி சுவையாக இருக்கிறதே இதைத் தின்று உடம்பை வளர்க்கும் அந்த குரங்கின் ஈரல் எவ்வளவு ருசியாக இருக்கும் என்று யோசித்தது.
உடனே ஆண் முதலை இடம் சொன்னது இந்த நவாப்பழம் இவ்வளவு சுவையாக இருக்கிறதே இதை சாப்பிட்ட அந்த குரங்கின் ஈரல் எவ்வளவு சுவையாக இருக்கும் அதனால் எப்படியாவது அந்த குரங்கை ஏமாற்றி இங்கே அழைத்து வாருங்கள் நாம் இருவரும் சேர்ந்து அந்த குரங்கை கொன்று அதன் ஈரலை நாம் எடுத்து சாப்பிடுவோம் என்று பெண் முதலை கூறியது. அதற்கு ஆண் முதலை அதெல்லாம் தவறு அது நமக்காக இவ்வளவு உதவி பண்ணுகிறது நாங்க இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம் என்னால் இந்த ஒரு துரோகத்தை பண்ணவே முடியாது என்று ஆண் முதலை கூறியது.
அதற்கு பெண் முதலை அந்த குரங்கை நீங்கள் கூட்டி வரவில்லை என்றால் நான் இங்கு தற்கொலை செய்து கொள்வேன் என்று மெரட்டியது. அதைக்கேட்ட ஆண் முதலைக்கு மிகவும் கவலையாக இருந்தது. சரி எப்படியாவது கூட்டிக் கொண்டு வருகிறேன் என்று கிளம்பியது. அந்தக் குரங்கிடம் வந்து முதலை கூறியது நீ கொடுத்த நவாப்பழத்தை என் மனைவியுடன் கொடுத்தேன் அவள் அதை சாப்பிட்டுவிட்டு இவ்வளவு சுவையான பழத்தை கொடுத்த அந்த குரங்கிற்கு நாம் விருந்து வைக்க வேண்டும் என்று உன்னை அழைத்து வர சொன்னாள்.
நீ என்னுடன் வருகிறாயா என்று கேட்டது ஆண் முதலை. அதற்கு அந்தக் குரங்கு என்னால் தண்ணீரில் நீந்தி வர இயலாது எனவே என்னால் வர முடியாது என்று கூறியது. அதற்கு அந்த முதலை நான் உன்னை என் முதுகில் ஏற்றி என் வீட்டுக்கு கொண்டு செல்லுகிறேன் என்று வஞ்சகமாக முதலை கூறியது. அதைக் கேட்டதும் குரங்கும் சரி என்று சொல்லிவிட்டது. அதன் பின் முதலையின் முதுகில் குரங்கு ஏறிக்கொண்டது. பாதி தூரம் சென்றதும் குரங்குக்கு மிகவும் பயமாக இருந்திருக்கிறது மெதுவாக செல் என்று கூறியது குரங்கு.
அதற்கு அந்த முதலை நக்கலாக சிரித்துக்கொண்டு உன்னை நான் விருந்துக்கு அழைத்துச் செல்கிறேன் என்று நினைத்தாயா உன்னுடைய ஈரலை நாங்கள் விருந்தாகசாப்பிடுவதற்காக உன்னை அழைத்துச் செல்கிறேன் என்றது. அதைக் கேட்ட குரங்குக்குஎன்ன செய்வதென்றே புரியவில்லை. உடனேகுரங்குக்கு ஒரு யோசனை தோன்றியது. குரங்குகூறியது அப்படியா நண்பா இதை நீ முதலிலேயே சொல்லி இருந்தால் என் நண்பனுக்காக உயிரையும் நான் கொடுத்திருப்பேன் நீ இப்போது செல்கிறாய் என்னுடைய ஈரலை நான் கழட்டி மரத்திலேயே காய போட்டு வைத்திருக்கிறேன் என்றது குரங்கு. முதலைக்கு திக் என்று ஆகிவிட்டது.
என்னை மறுபடியும் மரத்திற்கு கொண்டு போ நான் அங்கே இருக்கும் ஈரலை எடுத்து உன்னிடம் தருகிறேன் என்று தந்திரமாக கூறியது. இதை நம்பிய வஞ்சகமான முதலை சரி என்று மறுபடியும் அதை மரத்திற்கு அழைத்துச் சென்றது. தப்பித்தோமடா சாமி என்றுடக்கென்று மரத்தில் மறுபடியும் ஏறிக்கொண்டது. அடேய் நன்றி கெட்ட முதலையே உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா யாராவது வயிற்றுக்குள் இருக்கும் ஈரலை கழட்டி வெளியில் வைப்பார்களா? அப்படி கழட்டி வைத்தால் நான் உயிரோடு இருந்திருப்பேனா என்று முட்டாள் முதலை இடம் கேட்டது. முதலைக்கு என்ன செய்வதென்று தெரியாமல் மறுபடியும் குரங்கிடம் பொய் கூறியது
நான் உன்னிடம் சும்மாதான் கூறினேன் உண்மையிலேயே என் மனைவி உனக்கு விருந்து வைக்க தான் அழைத்து வரச் சொன்னால் என்று கூறியது. அதற்கு குரங்கு இனி நான் உன்னை நம்பவே மாட்டேன் நவாப் பழங்களும் தரமாட்டேன் நீ நன்றி கெட்டவன் என்று சொல்லிவிட்டு ஓடியது. முதலை கிடைத்த நல்ல நட்பையும் இழந்து நல்ல பழங்களையும் இழந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றது.இதில் நாம் கற்று கொண்டது என்னவென்றால் நல்ல நண்பர்களுடன் சேர வேண்டும். வஞ்சகம் உள்ளவர்களிடம் சேரக்கூடாது.