ஒரு ஊரில் ஒரு ராஜாவும் மந்திரியும் வாழ்ந்து வந்தார்கள். அந்த ராஜா கொடுத்த வாக்கை என்றுமே காப்பாற்ற மாட்டார் அப்படி ஒரு குணம் அவரிடம் உள்ளது.
ஒரு நாள் ராஜாவும் மந்திரியும் வேட்டைக்குச் சென்றார்கள். அப்போது அங்கு ஒன்றும் கிடைக்கவில்லை இருட்டாகிவிட்டது. இருவரும் எங்கு தங்குவது என்று தெரியாமல் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு ஒரு குளம் இருந்தது அதன் அருகில் ஒரு மரத்தடியில் தங்கி விட்டார்கள்.
கடும் குளிராக இருந்திருக்கிறது. இரண்டு கம்பளி போர்வையை வைத்து இருக்க மூடி கொண்டார்கள் அப்படியும் குளிர். அவர்களால் தாங்க முடியவில்லை இருவரும் பேசிக் கொண்டார்கள் இந்த குளிரில் விடியும் வரை யார் சட்டை இல்லாமல் தண்ணீரில் நிற்கிறார்களோ அவர்களுக்கு ஒரு லட்சம் என்று அறிவிக்கலாமா என்று ராஜா கேட்டாராம் அதற்கு மந்திரி சரி என்று சொல்லிவிட்டாரா.
மறுநாள் காலை வீடு வந்து சேர்ந்ததும் காவலாளிகள் இடம் இந்த விஷயத்தை கூறி நாலா திசைகளுக்கும் அறிக்கை விட சொல்லி அனுப்பி வைத்தாராம் அப்போது இதை கேட்ட ஒரு இளைஞன் நான் நிற்கிறேன் என்று அங்கு வந்தான்.
சரி என்று அவனை அந்த இரவு முழுவதும் தண்ணீருக்குள் நிற்கச் சொல்லி காவலாளிகளை பாதுகாப்பிற்கு அனுப்பி வைத்தார். அவன் போட்டியில் வெற்றி பெற்றான் அவன் அரண்மனையில் வந்து வெற்றி பெற்றதை காவலாளிகள் கூறியிருக்கிறார்கள்.
அந்த இளைஞனை ராஜா கூப்பிட்டு நீ எப்படி ஒருநாள் முழுவதும் தண்ணீருக்குள் தைரியமாய் நின்றாய் என்று கேட்டார். அதற்கு அவன் உங்கள் அரண்மனையின் உச்சியில் இருக்கும் ஒளியின் வெளிச்சத்தை பார்த்துக் கொண்டுதான் நான் நின்றேன் அதனால் எனக்கு குளிர் தெரியவில்லை என்றான்.
உடனே ராஜா நீ என் அரண்மனை ஒளியின் வெப்பத்தில் நின்றதால் தான். உனக்கு குளிர் தெரியவில்லை அதனால் உனக்கு பரிசு ஒன்றும் கிடையாது என்றார் அந்த இளைஞன் ஏமாற்றத்துடன் மந்திரியை போய் பார்த்தான். மந்திரி சரி நீ போஉனக்கு நான் பரிசு வாங்கி தருகிறேன் என்றார்.
ஒரு நாள் ராஜா வேட்டைக்குச் செல்ல வேண்டும் மந்திரியை அழைத்து வாருங்கள் என்று காவலாளிடம் கூறினார். மந்திரியும் நான் சமைத்துக் கொண்டு இருக்கிறேன் சாப்பிட்டு விட்டு வருகிறேன் என்று சொல்லி அனுப்பினாராம். நெடுநேரம் ஆகியும் வரவில்லை ராஜா நேரில் சென்று பார்த்தாராம் அங்கு மந்திரி சமைப்பதற்காக பானையில் தண்ணீரும் அரிசியும் ஊற்றி ஒரு பாத்திரத்தில் வைத்து விட்டு கொஞ்சம் தூரம் தள்ளி அடுப்பை மூட்டி வைத்திருந்தாராம்.
ராஜாவுக்கு கோபம் ஆகிவிட்டதா மந்திரியை பார்த்து இப்படி வைத்திருந்தால் எப்படி நீ சமைத்து சாப்பிட்டு வருவாய் என்று கேட்டாராம் அதற்கு மந்திரி அந்த இளைஞன் தண்ணீருக்குள் நின்று கொண்டு உங்கள் அரண்மனையின் ஒளியில் நின்றதால் தான் குளிர் தெரியவில்லை என்று சொன்னீர்கள் அவ்வளவு தூரத்தில் இருந்து சூடு வரும்போது பக்கத்தில் தானே வைத்திருக்கிறேன் இது எப்படி சோறு வேகாமல் போகும் என்று கேட்டார்
அதற்கு ராஜா வெட்கத்துடன் தலை குனிந்தபடியே சென்றாராம் உடனே அந்த இளைஞனை அழைத்து வரச் சொல்லி ஒரு லட்ச ரூபாய் பரிசை கொடுத்து அனுப்பினாராம்.