தட்டான் குளத்து காளியம்மன் தேவிபட்டினம் உண்மை கதை| Real God story Tamil

இது ஒரு உண்மை கதை தேவிபட்டணம் என்னும் கிராமத்தில் தட்டான் குளத்து காளியம்மன் உருவான கதை

அங்கு இருக்கும் காளியம்மன் சிலை முதலில் ஒரு சிறு பொம்மை போன்று தான் இருந்ததா, அதாவது அந்த சிலை கிடைத்த கதை.

இப்போ காளியம்மன் கோவில் இருக்கும் இடத்திற்கு கொஞ்ச தூரம் தள்ளி தான் ஒரு ஆறு இருந்தது. அந்த ஆற்றுக்கு பக்கத்தில் 5 சிறுவர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்கள்

அப்போது அந்த ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருந்ததாம் அங்கு தண்ணீர் குடிக்க சென்ற சிறுவர்கள் ஒரு பெட்டியை பார்த்தார்களாம் இந்தப் பெட்டியை எடுத்து திறந்து பார்த்திருக்கிறார்கள்h அப்போது அந்தப் பெட்டிக்குள் சிறு பொம்மை போல் அந்த சிலை இருந்ததாம்

அந்த சிறுவர்கள் அதை எடுத்துக் கொண்டு வந்து சாமி போல் வைத்த முள்பூக்களை பறித்து அதை மாலையாக கட்டி சிரட்டைகளில் பொங்கல் வைத்து சாமி கும்பிட்டு விளையாண்டு கொண்டிருந்தார்களா

இந்த வழியாக ஒரு குடிகாரன் வந்தானா அப்போது அந்த சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்து மண்ணால் பொங்கல் வைத்திருந்ததை காலால் எட்டி உதைத்து விட்டான் அந்த சிறுவர்கள் அந்த சிலையை அந்த இடத்திலேயே வைத்து விட்டு வந்து விட்டார்களாம்.

அதன் பிறகு அந்த குடிகாரனுக்கு இரண்டு கால் கையும் விளங்கவில்லையா. அவன் எங்கே எல்லாம் சென்று வைத்தியம் செய்தானா அவனுக்கு சரியாகவில்லையாம். ஒரு நாள் அவன் கனவில் குழந்தை வடிவில் வந்து அன்று சிறு குழந்தைகள் என்னை வைத்து சமைத்துக் கொண்டு இருக்கும் போது நீ காலால் எட்டி உதைத்து வந்து விட்டாய் அதனால் தான் உனக்கு இந்த நிலைமை அதனால் எனக்கு நீ அந்த மலை அடிவாரத்தில் ஒரு கோவில் கட்ட வேண்டும் என்று சொல்லிவிட்டு மறைந்ததாம்.

அவன் உடனே அந்த சிலையை எடுத்து வந்து மழைக்கு அடிவாரத்தில் வைத்து ஒரு காம்பவுண்ட் சுவர் கட்டி விட்டானா. அதன் பிறகு அவனுக்கு உடல்நிலை சரியாகி விட்டதாம்

அதற்குப் பிறகு அந்த வழியாக சென்ற ஒரு ஆள் லாட்டரி சீட்டு எடுத்து வந்தாராம் அந்த கோவில் பக்கத்தில் வந்ததும் எனக்கு இந்தச் சீட்டில் பரிசு விழுந்தால் நான் கோவிலாகவே கட்டுகிறேன் என்று சொன்னானா. அதேபோல் அவனுக்கு லட்சக்கணக்கில் பரிசு விழுந்ததாம்

உடனே அதை கோயிலாகவே கட்டி விட்டானாம் அதன் பிறகு மக்கள் அந்த கோயிலுக்கு அதிகமாக வர இருந்தார்களா அந்தச் சிலை அதுவாகவே கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து வந்தனவாம். இப்போது இரண்டு ஆள் வளர்ச்சிக்கு அந்த சிலை அழகாக நிற்கிறது

அது சக்தி வாய்ந்த அம்மன் ஆக விளங்குகிறது எல்லா மக்களும் அங்கு வந்து சாமியே தரிசித்து செல்கிறார்கள் நினைத்தது எல்லாம் நடக்கிறது. இப்படித்தான் அந்த தட்டாங்குளத்து காளியம்மன் உருவான கதையாம் நானும் அந்த கோயிலுக்கு சென்று வந்தேன் நீங்களும் அதுபோல் அந்த கோயிலுக்கு சென்று வாருங்கள் உங்களுக்கும் நல்லதே நடக்கும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top