ஒரு ஊரில் கண்ணன் என்பவன் வெகு நாட்களாக வாழ்ந்து வந்தான். அவனுக்கோ தாய் தந்தை இல்லை என்பதால் தனியாக வசித்து வந்தான். அன்றாட ஊருக்குள் கிடைக்கும் ஏதேனும் ஒரு வேலையை செய்து தன் வாழ்க்கையே நடத்தி வந்தான் கண்ணன்.
அவனது பக்கத்து வீட்டுக்காரனோ கணேஷ். இந்த கணேஷ்கோ நல்ல எண்ணம் கிடையாது . யாராவது ஊருக்கு நல்லா இருந்தால் இந்த கணேஷ்க்கு பிடிக்காது.
கண்ணனுக்கோ ஊருக்குள் ஏதும் வேலை கிடைக்கவில்லை என்றால் அவன் வைத்திருந்த கோழியிடும் முட்டையை உண்டு அன்று இரவு பொழுதை கழிப்பான்.. இதைப் பார்த்த கணேஷ்க்கு சிறிது பொறாமை ஏற்பட்டது.
ஒரு நாள் கண்ணன் இல்லாத சமயத்தில் அந்தக் கோழியைப் பிடித்து சமைத்து இவன் உண்டான். வீட்டிற்கு வந்த கண்ணன் தன் கோழியை காணவில்லை என்று சுற்றி முற்றி பார்த்தான். அப்போது கணேஷ் வீட்டிற்கு முன் தன் கோழியின் இறகுகள் இருப்பதைக் கண்டான்.
கணேசனிடம் போய் கேட்டதற்கு தன் பூனை உன் கோழியைப் பிடித்து விட்டு என் வீட்டுக்கு வந்தது, நான் அதனிடமிருந்து கோழியை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என்று பார்த்தேன். ஆனால் உன் கோழி இறந்து விட்டது. எனவே அதை நான் சமைத்து உண்டேன் என்று அலட்சியமாக கூறினான்.
கண்ணனும் கோபத்தில் என் கோழியைப் இப்போது தர போகிறாயா இல்லையா என்று கேட்டான், இல்லையெனில் நான் நாட்டாமையிடம் செல்வேன் என்று கூறினான். உடனே பயந்து போன கணேஷ் தன்னிடம் இருந்த வாத்து குஞ்சை கண்ணனிடம் கொடுத்தான்.
பிறகு சில நாட்களுக்குப் பிறகு அந்த ஊரில் மிகப் பெரிய மழை ஒன்று பெய்தது . அப்போது மழையில் நனைந்து வந்த ஒரு முனிவர் கணேஷ் வீட்டின் கதவை தட்டினார் அவனும் கதவை திறக்காமல் வெளியே போங்கள் என்று கூறினான்.
பிறகு அந்த முனிவர் பக்கத்து வீட்டில் இருந்த கண்ணன் வீட்டு கதவை தட்டும் பொழுது அவன் கதவை திறந்தது மட்டுமல்லாமல் அவரை உள்ளே அழைத்து அவருக்கு கதர் ஆடை ஒன்றை கொடுத்து மேலும் அந்த வாத்து இடும் முட்டையை அவித்து அவருக்கு உணவாக அளித்தான்.
இந்த முனிவரை அந்த முட்டையிடும் வார்த்தை இவரிடம் கொடுக்குமாறு கேட்டார். கையில் வாங்கி அந்த வார்த்தை இந்த முனிவர் தடவியப்படியே உனக்கு இந்த வாத்து நல்லது செய்யும் என்று கூறினார்.
அடுத்த நாள் மாலை பொழுதில் அந்த வாத்து இடும் முட்டையை கண்ணன் பார்க்க சென்றான், அப்போது அவனுக்கு அதிர்ச்சியாக ஒரு செய்தி இருந்தது . ஏனெனில் அந்த வாத்து ஒரு தங்க முட்டையை இட்டிருந்தது.
பிறகு கண்ணனோ அந்த வாத்து இடும் தங்க முட்டைகளை விற்று மற்றவர்களுக்கு உதவியும் செய்தான். அந்த வார்த்தையிடும் தங்க முட்டையை அறிந்த கணேஷ் …. எப்படியாவது இந்த வார்த்தை நமக்கு சொந்தமாக வேண்டும் என்று விரும்பினான் …
உடனே இரண்டு பேரை அழைத்துக்கொண்டு நாட்டாமையிடம் சென்று எனது வாத்தை கண்ணன் திருடி விட்டான் என்று புகார் அளித்தான் … உடனே கண்ணனை அந்த வாத்துடன் அழைத்து வர சொன்னார் நாட்டாமை … நாட்டாமை கண்ணனிடம் நீ இந்த வார்த்தை திருடினாய் என்று கேட்டார் …
அவனோ பல நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வை நாட்டாமையிடம் கூறினான் .. நடந்த நிகழ்வைக் கேட்ட நாட்டாமை இன்று ஒரு நாள் இந்த வார்த்தை என்னுடன் இருக்கட்டும் என்று கூறினார் .. அன்று இரவு அந்த வாத்து ஒரு தங்க முட்டை இட்டது … இதைப் பார்த்து அதிர்ந்து போனார்
நாட்டாமை … அடுத்த நாள் காலையில் யார் இந்த வாத்து இடும் முட்டை பற்றி உண்மையை கூறுவதற்காக , இந்த வாத்து நேற்று இரவு ஒரு சாதாரண முட்டையை இட்டது என்று கூறினார் … அதற்கோ கண்ணன் இந்த வாத்து தங்க முட்டையை தான் இடும் என்று கூறினான். .. கணேஷ் சிரித்தபடியே வாத்து என்னைக்கு தங்க முட்டை இட்டது இது சாதாரண முட்டைதான் இடும் என்று அலட்சியமாக சிரித்தபடியே கூறினான் …
உடனே கணேசிடம் ஒரு வாத்தை நாட்டாமை கொடுத்துவிட்டு நீ சொல்வது தான் உண்மை என்று கூறி அவனை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். கண்ணனும் கடும் சோகத்திற்கு ஆளானான். சிறிது நேரத்தில் கண்ணனை பார்த்து நான் அவனிடம் கொடுத்தது சாதாரண முட்டை இடும் வாத்து தான் என்று கூறினார்.
உன்னுடைய தங்க முட்டையிடும் வாத்து என்னிடம் தான் இருக்கிறது என்று கூறினார். நீ எங்கேயும் போக வேண்டாம் உன் வாத்துடன் நீ இங்கே இருந்து கொள் என்று நாட்டாமை கூறினார்…. வீட்டிற்கு சென்ற கணேஷ்க்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஏனெனில் அவனுடைய வாத்து இட்டது எல்லாமே சாதாரண முட்டைகள் தான் … இந்தக் கதையிலிருந்து நாம் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நல்லது நினைத்தால் நல்லது நடக்கும் என்பதே ஆகும்.