ஒரு ஊரில் ஒரு விவசாயிக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அந்த விவசாயி நன்று உழைக்கக்கூடிய ஒரு நபர் ஆவார். நாள்தோறும் மிகவும் கடினமாக உழைத்து வரக்கூடிய பணத்தில் தான் தன் குடும்பத்தை நடத்தி வந்தார்அந்த விவசாயி.
முதல் மகனின் பெயர் ராஜேஷ், இரண்டாவது மகனின் பெயர் சுரேஷ் , மூன்றாவது மகனின் பெயர் கமலேஷ். இந்த விவசாயி தனது மூன்று மகன்களை மிக பாசத்துடன் நன்றாக வளர்த்து வந்தார்.
சில வருடங்களுக்குப் பிறகு மூன்று மதங்களுக்கும் திருமணம் செய்து வைத்தார். மூன்று மகன்களும் வெளியூருக்கு சென்று தங்கள் வாழ்க்கைகளை தொடங்க ஆரம்பித்தனர். மூன்று மகன்களும் ஒவ்வொரு பிரைவேட் கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.
ஆனால் அவர்களுடைய வருமானம் தங்களது குடும்பத்தை நடத்துவதற்கு ஏதுவாக இல்லை. ஒருநாள் சுரேஷ் ராஜேஷ் கமலேஷ் ஆகிய மூவரும் ஒரு இடத்தில் எதார்த்தமாக சந்தித்தனர்.
அப்போது கமலேஷ் நமது அப்பா நம்மை படிக்க மட்டும் வைத்துள்ளார் ஆனால் நமக்காக சொத்துக்கள் ஏதும் சேமித்து வைக்கவில்லை என்று பேசிக் கொண்டிருந்தனர். அதற்கு சுரேஷ் ஆமாம் என்று தலை அசைத்தான். ஆனால் மூத்த மகன் ராஜேஷ் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. நமது அப்பா நம்மளை இவ்வளவு தூரம் படிக்க வைத்ததே பெரிய விஷயம் என்று கூறினான்.
பின்பு இவர்கள் தங்களது வீட்டுக்கு சென்றனர். எப்பொழுதும் தீபாவளி பொங்கல் என்றால் தங்கள் சொந்த ஊருக்கு செல்வர் இந்த மூவர் ஆனால் இந்த சமயம் தங்களது சொந்த ஊருக்கு செல்லவில்லை. அப்பாவோ அங்கு தனியாக வசித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கும் சிறிது உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது இதை அந்த ஊர் காரர்கள் இந்த மூவருக்கு தெரிவிக்கின்றனர்.
இவர்களும் இந்த செய்தியை கேட்ட பின்பு தங்களது சொந்த ஊருக்கு சென்று அப்பாவை பார்த்தனர். அப்பாவோ படுத்த படுக்கையாக இருந்தார். அப்போது கூட சுரேஷும் கமலேஷும் தமது அப்பா தனக்காக சொத்து எதுவும் கொடுக்கவில்லை என்று தான் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் மூத்த மகன் ராஜேஷ் கொஞ்ச நேரம் அமைதியாக இருங்கள் என்று கத்தினான். அப்பா நீங்க ஏதாவது கூற விரும்புகிறீர்களா என்று கேட்டான் ராஜேஷ் . அதற்கு அப்பா நான் உங்களுக்காக சொத்துகளை சேமித்து வைத்துள்ளேன் என்று கூறினார்.
இதைக் கேட்டதும் ஆச்சரியத்தில் மூவரும் திகைத்து நின்றனர். நமது வீட்டுக்கு பின்னால் உங்களுக்காக சொத்துக்களை குழியில் தோன்றி புதைத்து வைத்துள்ளேன் என்று கூறினார் அப்பா. அதை நீங்கள் நான் இறந்த பிறகு தான் எடுத்து பார்க்க வேண்டும் என்று கூறினார்
.சில நாட்களுக்குப் பிறகு அப்பா இறந்தார். இந்த மூவரும் தங்கள் வீட்டிற்கு பின்னர் சென்று குளி தோன்றி அந்த சொத்துக்களை எடுக்க ஆரம்பித்தனர். அவர்களுக்கு கிடைத்ததோ மூன்று மண்பானைகள்.
முதல் பானையை திறந்து பார்க்கும் போது அதில் மாட்டு சாணம் இருந்தது. இரண்டாவது பானையை திறந்து பார்க்கும் போது அதில் சில தானியங்கள் இருந்தன. மூன்றாவது பண்ணை திறந்து பார்க்கும் பொழுது அதில் ஒரு சிறிய பித்தளை பாத்திரம் இருந்தது. இவர்கள் மூவரும் அதிர்ச்சி அடைந்து நின்றனர்,
ஏனெனில் தனது அப்பா இதுதான் இதைத்தான் சொத்து என்று கூறினார் என்று ஆச்சரியத்தில் நின்றனர் .இந்த மூன்று பானையே தனது ஊர் நாட்டாமிடம் எடுத்துச் சென்றனர் இந்த மூவர். அந்த நாட்டாமை சிரித்தபடியே இந்த மூன்று பானைகளுக்கான அர்த்தத்தை கூறினார்,
முதல் பானையில் இருந்த மாட்டுச் சாணம் ஆனது எதைக் குறிக்கிறது என்றால் வீட்டில் உள்ள கால்நடைகள் அனைத்தும் முதல் மகனுக்கே உரியது என்றும்,
இரண்டாவது பானையில் உள்ள தானியங்கள் வயக்காடு முழுவதும் இரண்டாவது மகனுக்கு என்றும்,
மூன்றாவது பானையில் உள்ள பித்தளை பாத்திரமானது வீட்டில் உள்ள தங்க ஆபரணங்கள் அனைத்து மூன்றாவது மகனுக்கு உரியது என்றும் கூறினார். நாட்டாமை..
இதைக் கேட்டதும் சுரேஷுக்கும் ராஜேஷுக்கும் மிகுந்த மான வேதனை ஏற்பட்டது ஏனெனில் தங்களது அப்பாவை பற்றி இவர்கள் தவறாக பேசியிருந்தனர் சொத்து விஷயத்தில் ….. பிறகு ராஜேஷ் இவர்களுக்கு ஆறுதல் கூறினான் ….. எப்பொழுதுமே அப்பாவின் அன்பு தனித்துவமானது தானே …. உங்களுடைய அப்பாவின் அன்பை பற்றி கமெண்ட் பாக்ஸில் கூறுங்கள் பார்ப்போம் ……