ஒரு கரடியின் நம்பிக்கையை உடைத்த மனிதன்| Story of the man who broke a bear’s trust

வணக்கம் நண்பர்களே நம் இன்னைக்கு பார்க்க போற கதை பாத்தீங்கன்னா ரொம்பவும் வித்தியாசமான ஒரு கதையை தான் பார்க்க போறோம் இந்த ஒரு கதையை நீங்க சின்ன வயசுல கேட்டிருப்பீங்க அப்படி இந்த ஒரு கதையை நீங்க கேட்காம இருந்தீங்கன்னா இதை படிச்சு தெரிஞ்சுக்கோங்க வாங்க கதை உளள போலாம்.

ஒரு ஊரில் ஒரு வயதான மனிதர் வாழ்ந்து வந்தார் இவருக்கு ஒரு மகன் இருந்தான் இருவரும் ஒரு காட்டுக்குள் அழகாக ஒரு குடிசை போட்டு வாழ்ந்து வந்தனர் அவர்களுடன் ஒரு குதிரையும் இருந்தது இருவரும் தினமும் அந்தக் குதிரையின் மேல் ஏறி தான் வேட்டையாட செல்வார்கள்

காட்டுக்குள் சென்று நிறைய விலங்குகள் பறவைகள் எல்லாம் வேட்டையாடி கொண்டு வருவார்கள் அதை சமைத்து தான் இரண்டு பேரும் உண்டு பசியாற்றிக் கொள்வார்கள் இரவு நேரங்களில் பக்கத்தில் உள்ள காடுகளில் காய்கள் பழங்கள் என திருடிக் கொண்டு வந்து சாப்பிடுவார்கள் இப்படியே இரண்டு பேரும் வாழ்ந்து வந்தார்கள்

கொஞ்சம் காலமானவுடன் அவன் அப்பாவிற்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது அவரால் வேட்டைக்குச் செல்ல முடியவில்லை அப்படி இருக்கும்போது மகன்தான் வேட்டைக்குச் சென்று சின்ன சின்ன பறவைகள் குருவிகள் எல்லாம் வேட்டையாடிக் கொண்டு வருவான்

அப்படி இருக்கும்போது ஒரு நாள் வேட்டையாட காட்டுக்கு வெகு தூரம் சென்று விட்டான் அங்கு ஒரு புள்ளி மானே பார்த்தான் பார்த்தவுடன் அவனுக்கு ஆசை அதிகமாகி விட்டது இதை நாம் அடித்துக் கொன்று வீட்டுக்கு கொண்டு போனால் நாம் அதிக நாள் வைத்து சாப்பிடலாம் என்று எண்ணினான்

அந்தமான் அவனைப் பார்த்தவுடன் ஓட்டம் பிடித்தது இவன் குதிரையில் சென்று அதைப் பிடித்து விடலாம் என்று குதிரையின் மேல் ஏறி அமர்ந்தான் ஏற்கனவே வெகு தூரம் அந்த குதிரை நடந்ததால் அதால் நடக்க முடியவில்லை

இவன் என்ன செய்வதென்று தெரியாமல் அந்த குதிரையை ஒரு மரத்தடியில் கட்டி வைத்தான் பின்பு அந்தமான் சென்ற பாதை வழியாக இவனும் ஓடினான் மான் எங்கோ ஓடி மறைந்து விட்டது

ஏமாற்றத்துடன் திரும்பி வந்து கொண்டிருந்தபோது ஒரு புலி இவனைப் பார்த்தது இவன் புலியை பார்த்ததும் ஓட ஆரம்பித்தான்

அந்தப் புலி இவனை விரட்ட ஆரம்பித்தது இவனும் வெகு தூரம் ஓடினான் இவனால் ஓட முடியவில்லை அங்கு இருந்த மரத்தின் மேல் ஏறினான் பாதி மரத்தில் ஏறிய பின்பு மேலே பார்த்தான்

அங்கு ஒரு கரடி உட்கார்ந்து கொண்டிருந்தது அதைப் பார்த்ததும் இன்னும் அவனுக்கு பயம் அதிகமாகி விட்டது என்ன செய்வது என்று தெரியாமல் மேலேயும் போக முடியாமல் கீழேயும் இறங்க முடியாமல் தவித்தான்

அந்தக் கரடி உடனே என்னை பார்த்து நீ பயப்பட வேண்டாம் மேலே ஏறி வா என்றது இவனும் மேலே ஏறி அமர்ந்து கொண்டான் வெகு நேரம் ஆகியும் அந்த புலி அந்த இடத்தை விட்டு நகரவில்லை இருட்டத் தொடங்கியது இவனுக்கு தூக்கம் வர ஆரம்பித்துவிட்டது இவன் மரத்தில் அமர்ந்தபடியே தூங்கிக் கொண்டிருந்தான்

கரடி பார்த்துவிட்டு அப்படி தூங்கினால் கீழே விழுந்து விடுவாய் அதனால் நீ என் மடியில் தலை வைத்து படுத்துக்கொள், நான் உன்னை பிடித்துக் கொள்கிறேன் என்றது சரி என்று கரடியின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டான் கீழே நின்ற அந்த புலி கரடியை பார்த்து சொன்னது மனிதர்கள் நன்றி கெட்டவர்கள் அதனால் நீ அவனை கீழே தள்ளிவிடு நான் உன்னை விட்டு விட்டு அவனை சாப்பிட்டுவிட்டு என் இருப்பிடத்திற்கு செல்கிறேன்

அதன் பிறகு நீ உன் இருப்பிடத்திற்கு சென்று விடு உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன் என்றது அதற்கு அந்த கரடி என்னை நம்பி வந்து விட்டான் நான் அவனைக் காப்பாற்றிய ஆக வேண்டும் நான் தள்ளி விட மாட்டேன் என்றது கரடி சிறிது நேரம் கழித்து அவன் தூங்கி விழித்து விட்டான் அதன் பிறகு கரடி நான் கொஞ்ச நேரம் தூங்குகிறேன், நீ என்னை பார்த்துக் கொள் என்றது சரி என்றான் கரடி தூங்க ஆரம்பித்தது சிறிது நேரம் கழுத்து புலி அவனிடம் சொன்னது நான் சென்று விட்டேன் என்றால் கரடி உன்னை அடித்து சாப்பிட்டு விடும் அதனால் நீ தப்பிக்க வேண்டும் என்றால் கரடியை கீழே தள்ளி விடு நான் கரடியை சாப்பிட்டு விட்டு உன்னை ஒன்றும் செய்யாமல் நான் என் இருப்பிடத்தை பார்த்து சென்று விடுகிறேன் என்றது புலி அவன் சற்று குழப்பத்துடன் யோசித்தான் பிறகு ஒரு முடிவுக்கு வந்தான் நாம் கரடியை கீழே தள்ளி விட்டால் அது சாப்பிட்டு ஓடிவிடும் நாம் தப்பித்து விடலாம் என்று எண்ணினான் சற்றும் யோசிக்காமல் கரடியை மேலே இருந்து தள்ளி விட்டான்

கரடி பாதி வழியில் விழித்துக் கொண்டது சற்று சுதாரித்தும் கொண்டது பக்கத்து கிளையைப் பிடித்துக் கொண்டது அப்போது புலி சொன்னது நான் முதலிலே உன்னிடம் சொன்னேன் நீ கேட்கவில்லை பார்த்தாயா? இப்போது அந்த மனிதன் உன்னையே கீழே தள்ளிவிடப் பார்த்தான் எனவே நீ மேலே சென்று அவனை தள்ளிவிடு என்றது அதற்கு அந்த கரடி அவன் செய்த தவறை நான் செய்ய மாட்டேன் அவன் என்னை நம்பி வந்தவன் என்று சொல்லியது

அதன் பின் அந்த புலி இடத்தை விட்டுச் சென்றது கரடியும் உன்னை நான் மன்னித்து விட்டேன் இங்கு இருந்து சென்று விடு இனி இந்த இடத்திற்கு நீ வரவே கூடாது என்றது அதன்பின் அவன் செய்த தவறை உணர்ந்து வெட்கப்பட்டான் அதன் பின் ஒன்றும் கிடைக்காமல் உயிர் தப்பியது போதும் என்று வெறுங்கையோடு திரும்பினான் அதற்குப் பிறகு குதிரையின் பக்கத்தில் வந்தான் அந்தக் குதிரை அவனைப் பார்த்து இவ்வளவு காலம் உன்னை சுமந்ததற்காக நான் வெட்கப்படுகிறேன் இனி நான் உன் கூட இருக்க மாட்டேன் என்று ஓடியது அதன் பின் நடந்தே வீடு வந்து சேர்ந்தான் நடந்ததை எல்லாம்

அவன் அப்பாவிடம் சொல்லி வருந்தினான். அதற்கு அவன் அப்பா நீ செய்த தவறை உணர்ந்து விட்டாய் அதனால் உன்னை மன்னித்து விடலாம் என்றார் இருந்தாலும் அவன் மனம் சமாதானம் அடையவில்லை அவன் செய்த தவறை தினமும் எண்ணி எண்ணி வருந்தினான்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top